பொட்டு அம்மானைத் தொடர்ந்து பிரபாகரனும் உயிருடன் உள்ளார்: விரைவில் இலங்கை ராணுவம் உறுதிபடுத்தும்...

விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதை இலங்கை ராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திடம் உறுதிப்படுத்தி உள்ளனர்.

விடுதலைப்புலி உறுப்பினர்களில் காயமடைந்த ஒருவர் குறித்தும் நாட்டிலிருந்து தப்பி செல்ல தயாரான நிலையில் இருந்த இன்னொருவர் குறித்தும் புலிகளின் தகவல் தொடர்புகள் மூலம் தகவல்களை அறிந்துகொண்டதாக ராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மானும் ஒருவர் என்பதும், அவரை குருவி என்ற புனை பெயரால் புலிகள் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.அதே சமயம் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு பிரபா என்றழைக்கப்படும் விடுதலைப்புலி இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 6வது மாடியை ராணுவத்தினர் சோதனை யிட்டுள்ளனர்.
எனினும் ராணுவத்தினர் அங்கு செல்லும் முன்னரே அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது. ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள நபர் தெரிவித்த இடத்தில் விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவினர் இருப்பதாக தகவல்களை வழங்கியுள்ளார்.
இந்த தகவல் வழங்கப்பட்ட சில மணி நேரத்தில் புலிகளின் புலனாய்வு பிரிவினர் என கூறப்படுவோர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை பார்க்கும் போது புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நகரில் வலுவான நிலையில் இருப்பது உறுதியாக இருப்பதாக ராணுவத் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் உயிருடன் இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் அவர்கள் நாட்டில் இருந்து தப்பி சென்றது குறித்து தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக ராணுவத் தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Read more...

பதுங்கிய புலிகள் பாயத்தொடங்கின...

இலங்கையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த கடுமையான சண்டையில் விடுதலைப்புலிகளை முழுவதுமாக அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் சொல்கிறது.

ஆனால் போர் உச்சக்கட்டத்தை எட்டியதும் விடுதலைப்புலிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தப்பி சென்று விட்டதாக ஒரு தகவல் வெளியானது.விடுதலைப்புலிகள் விரைவில் கொரில்லா தாக்குதலை கடைபிடிப்பார்கள் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். அதை உறுதிப்படுத்துவது போல வன்னியில் விடுதலைப்புலிகள் திடீர், திடீரென கொரில்லா தாக்குதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு முல்லைத்தீவு ஓட்டு சுட்டான் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரர்கள் பலியானார்கள். அதன் பிறகு விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து வேறு எந்த தாக்குதலும் நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று வன்னிப் பிரதேச காட்டுப்பகுதி ஒன்றுக்குள் சில ராணுவ வீரர்கள் சென்றனர். அவர்கள் மீது விடுதலைப்புலிகள் அதிரடி கொரில்லா தாக்குதலை நடத்தினார்கள். இதில் ஏராளமான சிங்கள ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

அவர்களை விமானம் மூலம் பலாலி ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிங்கள அரசின் கடும் தணிக்கை, கட்டுப்பாடு காரணமாக விடுதலைப்புலிகள் நடத்திய கொரில்லா தாக்குதல்கள் பற்றிய முழு விபரமும் வெளியில் தெரியாமல் போய் விடுகிறது.

Read more...

தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

இந்தக் கட்டுரையை சற்று நிதானமாக வாசியுங்கள். உங்கள் வாசிப்பின் முடிவில், மெல்ல மெல்ல கசக்கும் பெருநெல்லிக்கனியின் இறுதியில் தட்டுப்படும் ஒரு அதீதமான இனிமை தொக்கி நிற்பதை உணரலாம். இந்த கட்டுரைக்கு இதுவே பொருத்தமான உவமானமாகவும் நமக்குத் தெரிகிறது.

இனி பிரபாகரன் ‘மரணம்’ குறித்த எந்தக் கேள்விகள் வந்தாலும் அவற்றுக்கு இந்தக் கட்டுரையை பதிலாகத் தாருங்கள்.

இனி ‘கரிகாலன்’ எழுதியுள்ள அந்த முக்கியமான கட்டுரை!

thalaivar
உலகின் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் நிகழ்ந்திராத மிகப் பெரிய மனிதப் பேரவலம் முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவ இயந்திரங்களினால் நிகழ்த்தப்பட்டதென்பது ஊரறிந்த உண்மை.

அத்தோடு தமிழர்களின் சுதந்திர தாயகத்திற்க்கான ஆயுதப்போராட்டத்தை அழித்து விட்டதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக தங்கள் ஊடகங்களில் மே மாதம் 18 ஆம் நாள் அறிவித்தது (ஆனால் ராணுவம் 17-ம் தேதியே அறிவித்துவிட்டது).

இந்தப் பேரவலத்திறக்கும், மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்தற்கும் பல சான்றுகள் உள்ளன. உலகத்தின் உத்தமர்களெல்லாம் கூடும் ஐ நா சபையில் இந்த சில நாட்களாக நடந்த நாடகங்கள், பொய்யுரைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்… அது இந்த உலகறிந்த உண்மையும் கூட.

பயங்கரவாதமென்று பச்சைச் சாயம் பூசி, பாரெல்லாம் சென்று, தங்கள் பக்தாசலங்களிடம் படைவலுத் திரட்டி ஒரு தேசிய இனத்தையே பாழ்படுத்தி அழித்தொழித்த பெருமை இந்த அண்டப் பெருவெளியில் இலங்கை அரசாங்கத்தைத் தவிர வேறொருவருக்குமில்லை.

தம் தாய் நிலத்தினை விழுங்கும் இராட்சத பூதத்திடமிருந்து தமிழ் ஈழத்தை விடுவிக்க அதன் விடுதலைக்காக, பெரும்பான்மையினரால் அடிமைப்படுத்தப்படும் ஒரு இனத்தின் சுதந்திரத்திற்க்காக, அவர்களின் அரசியல் விருப்பங்களை வென்றெடுப்பதற்க்காக ஆயுதமேந்திப் போராடியவர்களை அழிக்க அகிலத்தைத் திரட்டியது இலங்கை. அதில் வெற்றி பெற்றதாக இப்போ இறுமாப்பும் கொள்கிறது.

இலங்கை அரசின் இந்தப் போர்க் கச்சேரிக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்றவை ஆயுதங்களை வழங்கிய பக்க வாத்திய கர்த்தாக்கள்.

அத்தோடு அணிசேர் கலைஞர்களாக (தமிழக முதலமைச்சர் கலைஞர் உட்பட), ஜப்பான், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், வியட்நாம், முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மற்றும் ஆசிய நாடுகள் போன்றவையும் பங்கேற்றன. இவர்களுடன் மேற்குலகம் உட்பட ஏனைய நாடுகளும் மறைமுகமாகச் சுருதி சேர்த்து ஆதரவாக ஆலவட்டம் பாடின.

இதற்கெல்லாம் ஆதாரமாக பிரிட்டனின் பிரபல பத்திரிகையான த டைம்ஸ் பத்திரிகை அண்மையில் பல ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் சுமார் 13.6 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் மதிப்புள்ள இயந்திர துப்பாக்கிகள், இராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்ட இராணுவ தளவாடங்களை இலங்கைக்கு விற்பனை செய்துள்ளது. ஸ்லோவாக்கியா 1.1 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும், பல்கேரியா 1.75 ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களையும் விற்பனை செய்துள்ளன என்று டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்ச் செல்வன் மரணத்தின்போதே…

தங்களுக்கெதிரான யுத்தத்தை இலங்கை அரசு முன்னெடுக்க, அகிலமே திரண்டு நின்று இலங்கை அரசுக்கு முட்டுக் கொடுத்து உதவுகின்றது என்பதை, தமிழீழ விடுதலைப் புலிகளுகளும் அறிந்திருந்தனர். அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட போது அவர்களதைப் பூரணமாகப் புரிந்து கொண்டனர்.

அத்தோடு தங்களுக்கெதிராக குறிப்பாக இந்தியாவின் நிலைப்பாட்டையும், இந்தியாவின் செயற்பாடுகளையும் புலிகள் துல்லியமாகக் கணிப்பிட்டிருந்தனர். இலங்கை அரசுக்கு இந்தியாவின் ஆயுத ஆளணி வழங்கல் சேவைகளை உலகுக்கு வெளிக் கொணரவும் தலைப்பட்டனர்.

அதன் வெளிப்பாடே 2007ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வவுனியா வான்படை கட்டுப்பாட்டுத் தளத்தின் மீது வான்புலிகளும், கரும்புலிகளும் இணைந்து தாக்குதல் நடாத்தி, அங்கிருந்த கண்காணிப்பு ராடர் கருவிகளை அழித்தனர். அத்தாக்குதலில் இந்திய இராணுவப் பொறியாளர்கள் இருவர் காயமடைந்தனர். இந்தச் செய்திகள் மெல்ல மெல்ல வெளியே கசிந்தன.

இந்தியா தந்த ராடார் கருவி…

இந்தக் காலத்தில் இலங்கை மகா உத்தம அதிபர் எனப்போற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச விடுத்த அறிக்கையொன்றில் “இந்தியா தந்த ராடர் கருவி, தாக்குதலுக்கு வந்த புலிகளின் வானூர்தியை கண்டறியத் தவறிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

இந்தியா சிறிலங்காவுக்குக் கொடுத்தது (2 Dimension) ராடர் கருவி. இந்தியத் தயாரிப்பான இந்த (2 Dimension) ராடர் கருவி புலிகளின் வானூர்தியை கண்டறியத் தவறிவிட்டது என்பதால், (3 Dimension) ராடர் கருவியை இந்தியா, இஸ்ரேலிடமிருந்து கொள்வனவு செய்து சிறிலங்காவுக்குக் கொடுத்ததும் நீங்களறிந்ததே.

இப்படி சர்வதேசத்து சக்திகளின் உற்ற துணையோடு இலங்கை அரசு மேற்கொண்ட யுத்த முன்னெடுப்பை விடுதலைப் புலிகளும் முழுமையாக உணர்ந்திருந்தனர். அதற்கேற்ப அவர்களும் தங்கள் யுத்த வியூகங்களை மாற்றியமைத்துக் கொண்டார்களென்று படைத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிலப் பரப்பினைப் பாதுகாப்பதை விட இலங்கை படையினருக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்துவதிலேயே அவர்கள் கவனம் செலுத்தியிருந்தனர் என்றும் கூறுகின்றனர்.

கிளிநொச்சி்யில் இடம்பெற்ற தற்காப்புத் தாக்குதல்களைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 200 வரையான புலிகளை மட்டுமே பயன்படுத்தியிருந்த போதிலும், இலங்கைப் படையினருக்கு அதிகளவில் இழப்புகளைக் கொடுத்தனர். அத்தோடு ஆசிய சக்திகள், உலகின் பிறநாடுகளின் அணுசரணையோடு தம்மோடு மோதுவதைத் தனியான ஆயுத சக்தியால் மட்டும் எதிர்கொள்ள முனையவில்லை. இதனை அரசியல், இராஜதந்திர முறையில் அனுக, அதற்கு அழுத்தங்களை கொடுக்கும் பொறுப்பை புலம்பெயர் தமிழரிடம் விட்டிருந்தனரென்றும் இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றனர்.

கொல்லப்பட்டது 70000 தமிழர்கள்

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்நாள் வரையிலும் 70000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இதில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்களும் அடக்கம். இந்த எண்ணிக்கைக் கணக்கிலும் கூட ஐ.நாவிலுள்ள ஐயாக்கள் சிலரும், கண்டம் தாண்டியுள்ள சில காரியவான்களும் இலங்கைக்குச் சார்பாயிருந்து எண்ணிக்கையைக் குறைக்கவே முயற்சிக்கிறார்கள்.

பாதுகாப்பு வலயமென இலங்கைப் படையினர் விரித்த வலை பிணக் குவியலாலும், உடலுறுப்புகளை இழந்து வாழும் மனிதர்களாலும் தான் நிரப்பியது. எறிகணை வீச்சில், படுகொலை செய்யப்படும் தமிழர்களின் சடலங்களை புதைப்பதற்கு கூட எவருமில்லை. பட்டினியால் சாகும் அப்பாவிகளுக்கு உணவளிக்கச் சொல்லவும் முடியல்லை. மாறாக அதைத் தாங்களே கொண்டுவந்து கொடுக்கவும் இந்த ஐ நா சபையினருக்குச் சக்தியிருக்கவில்லை.

பதுங்கு குழிகளுக்குள் இருந்த அப்பாவி மக்களின், அடிப்படை மனித உரிமை குறித்து பேச முடியாவிட்டாலும் குறைந்தது அவர்களின் உயிர்களை அவர்களோடு இருக்கவாவது இந்த இளகிய இரும்பு மனம்கொண்ட ஐ நா சபை அனுமதிக்கவில்லையே!

அந்த இறுதி நாள்…

பாதுகாப்பு வலயமென்று இலங்கைப் படையினர் விரித்த வலையினுக்குள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் இறுதியான மூன்று நாட்களும் முக்கியமானவை. மே மாதம் 16ஆம் நாள் சனிக்கிழமை தொடக்கம் மே மாதம் 18ஆம் நாள் திங்கட்கிழமை வரையிலும் பல சம்பவங்கள் மிகவும் சிறிய கால எல்லைக்குள் நடைபெற்றிருந்தன என்பது இப்போ தெரியவருகின்றன.

அதிகளவு மக்கள் கொல்லப்பட்டதுடன், பெருமளவான விழுப்புண்ணடைந்த அப்பாவி மக்களையும், போராளிகளையும் பாதுகாப்பாக, ஒரு மூன்றாம் தரப்பினுடாக சரணடையவைக்கும் முயற்சிகளும் புலிகளால் அப்போது மேற்கொள்ளப்பட்டிருந்ததாகத் தெரிய வருகின்றன.

காயப்பட்ட போரளிகளை பாதுகாப்பாக நகர்த்தும் பொறுப்புகள் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனிடமும், சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடமும், ஒப்படைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகின்றன. ஏனைய போராளிகளும் பெருமளவான தளபதிகளும் 17 ஆம் நாள் இரவு வரையிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்பு தாக்குதல்களில் வெளியேறியிருந்தனர் என படைத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சரணடைவதற்கு தமிழக, இந்திய, சர்வதேச அதிகாரிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச மூத்த ஊடகவியலாளர்கள் போன்ற அனைவரிடமும் உதவிகள் கேட்கப்பட்டன. ஆனால் எதுவும் நடைபெறவில்லையென்பது நீங்களறிந்த நிதர்சனம். இதற்கு ‘த டைம்ஸ்’ இதழின் ஊடகவியலாளர் மேரி கொல்வின் என்பவர் சாட்சியாகவுள்ளார். அவர் தன் கட்டுரையிலும் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவே சூத்திரதாரி..

போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வாதங்களை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருந்தது. அதற்கு ஏதுவாக இலங்கை மீதான விவாதம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 26 ஆம் நாள் சில மேற்குலக மேதாவிகள் ஐ.நாவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்தனர். 13 ஆசிய நாடுகள், 13 ஆப்பிரிக்க நாடுகள், கியூபா போன்ற நாடுகளின் ஆதரவுடன் மொத்தமாக 29 வாக்களால் முறியடித்துள்ளனர்.

குறிப்பாக இதற்கெல்லாம் சூத்தரதாரி எம் பக்கத்து நாடான தமிழினத் துரோக பாரதநாடு தான். இந்த வாக்கெடுப்பில் சிறிலங்காவுக்கு எதிராக 12 நாடுகள் வாக்களித்தனர். எதிர்த்தோ, ஆதரவாக வாக்களிக்காமல் 06 நாடுகள் மௌனம் சாதித்தனர்.

இலங்கைக்கு ஆதரவாகவும், மேற்குலக மேதாவிகளுக்கு எதிராகவும் ஆசிய, ஆபிரிக்கா, கியூபா போன்ற நாடுகளினதும் பல ஒருங்கிணைந்து குரல் கொடுத்தமை, தற்போது நிகழும் இந்து சமுத்திரப் பிராந்திய ஆதிக்கக் கயிறு இழுப்பில் மேற்குலக மேதாவிகளுக்கேற்பட்ட தோல்வியேதான். அதாவது தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்தப் போரானது தமிழ் மக்களை விட மேற்குலக மேதாவிகளுக்கே அதிக தோல்வியைக் கொடுத்துள்ளது என்பது தான் படைத்துறை ஆய்வாளர்களின் ஆய்வுகளின் முடிவு.

பிரபாகரன்… சில முரண்பட்ட தகவல்கள்…

இதனிடையே விடுதலைப் புலிகளின் தலைமை தொடர்பாக அடுத்தடுத்து முரண்பட்ட தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. சிறிலங்கா இராணுத்தரப்பும் 17, 18, 19ஆம் நாட்களில் தங்கள் தகவல்களுக்கே முரண்பட்ட வகையிலே தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டன. விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து வெளிவந்த இரண்டு அறிக்கைகளிலும் பல இராஜதந்திர நகர்வுகளின் தாக்கங்கள் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் ஆரூடம் கூறுகின்றனர்.

அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், சர்வதேச புலனாய்வுகளுக்கான பொறுப்பாளர் அறிவரசன் ஆகிய இவ்விருவரும் விடுதலைப்புலிகளின் அமைப்பின் முக்கிய மூத்த உறுப்பினர்கள் என்பது விடுதலைப் புலிகளையும், விடுதலைப் போராட்டம் பற்றியும் பூரணமாய் அறிந்தவர்கள் அறிவார்கள். இதில் பெரும்பான்மைத் தமிழருக்கு ஒரு ஐயம். எந்த தகவல் சரியானது, எது தவறானது என்பதானதொரு குழப்பம்.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான சிந்தனையும், அரசியல் முதிர்ச்சியும் தேவை.

புலிகள் சொல்ல விரும்பும் சேதி!

விடுதலைப் புலிகளின் தற்போதைய நடவடிக்கைகளில் அதிகளவிலான இராஜதந்திர நகர்வுகள் பொதிந்துள்ளன. அதன் பின்னால் ஓர் அனைத்துலக வலைப் பின்னலை விடுவிக்கும் நடவடிக்கைகளும் உள்ளன.

அவர்கள் உலகிற்கு ஒரு தகவலை சொல்ல முற்பட்டுள்ளனரென்றும் அதே சமயம் தமிழ் மக்களுக்கும் அதனூடாக பிறிதொரு நுணுக்கமான தகவலை கூற முயல்கிறார்கள் என்பதையும் அவதானிக்க முடிகிறது.

பல அழுத்தங்களும் அதன் மூலம் தேவையான பல அனுகூலங்களும் திரைமறைவில் நடைபெற்று வருகின்றன என்பதே இந்த இரு தகவல்களினதும் பொருளென்பது ஆய்வாளர்கள் முடிவு.

இந்த இரு தகவல்களையும் உள்வாங்கிக் கொண்டு அரசியல் நகர்வுகளின் வேகத்தை விரைவுபடுத்த வேண்டிய மிகப் பெரும் கடமை ஒன்று அனைத்துத் தமிழ் மக்களுக்குள்ளது என்பது மட்டுமே உண்மையின் உண்மை. போரியல் வரலாற்றில் சில தகவல்கள் நடைபெற்ற சம்பவங்களால் நிகழ்த்தப்பட்டன.

ஆனால் சில தகவல்கள் ஒரு சம்பவத்தை உருவாக்குவதற்காக நிகழ்த்தப்படுகின்றன!

பிரபாகரன் அதிகாரப்பூர்வமாக ‘கொல்லப்பட்ட’ தருணங்கள்!

தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ‘வீரச்சாவடைந்து’ விட்டார் என்ற தகவல்கள் வெளிவருவது இது முதல் தடவையல்ல என்பது தாங்களறியாததல்ல.

1984-09-05 ஆம் நாள் அதிர்ச்சியான செய்தி ஒன்று இலங்கை பத்திரிகைகளிலும், இந்தியப் பத்திரிகைகளிலும் வெளியானது. சிறிலங்கா இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக் கொன்றுவிட்டதாக அச்செய்திகள் விபரித்தன.

தமிழீழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும், உலகெங்கிலும் பரந்து வாழ்ந்த தமிழர்களிடையே பெரும் பரபரப்பும் பதைப்பும் ஏற்பட்டன. ஆனால் மறுநாள் காலை தமிழகத்தில் மதுரையில் உள்ள தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளர் வீட்டிற்கு தலைவர் பிரபாகரன் சிரித்த முகத்துடன் பிரசன்னமானாராம்.

புன்னகையுடன் உள்ளே சென்ற தலைவர் பிரபாகரன் அந்த ஆதரவாளரின் சிறுமியாயிருந்த மகளை தூக்கி வாரி அணைத்துக்கொண்டு “மாமாதான் வந்திருக்கிறேன். மாமாவின் ஆவி அல்ல” என நகைச்சுவையாகச் சொன்னாராம் அன்று.

25-07-1989 அன்று பரபரப்பான செய்தி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத் துணைத் தலைவர் மாத்தையா என்ற மகேந்திரராசாவுக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் வன்னியிலிலுள்ள ஆனந்தப் பெரியகுளத்தருகே இருந்ததாகவும், இப்போது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பதாகவும் இலங்கை, இந்திய, தமிழக பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டன.

அன்றைய நாளில் வட-கிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வரதராசப் பெருமாள், இந்தச் செய்தியை அன்று உறுதி செய்தார். அவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவரென்பதும், யாரால் இந்த முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டாரென்பது ஆனால் இரண்டு நாட்களில் இச்செய்தியில் கொஞ்சம் கூட உண்மையில்லை, தலைவர் பிரபாகரன் உயிரோடு நலமோடு இருக்கிறார் என்பதை நாமனைவரும் தெரிந்து கொண்டோம்.

பின்னர் 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் நடந்த நிகழ்வொன்றில் எங்கள் முன் தோன்றினார் தலைவர்.

26-12-2004 அன்று அடித்த சுனாமியின் போது தலைவர் பிரபாகரனும் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மானும் சுனாமி பேரலைகளால் அடித்துச்செல்லப்பட்டதாகவும் அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லையென்றும் ஒரு பரபரப்பான வதந்திச் செய்தி வெளியிடப்பட்டது. தலைவர் பிரபாகரனுக்காக விலை உயர்ந்த சவப்பெட்டி ஒன்று வன்னிப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வதந்திகள் பரவின.

அந்தச் செய்தியை இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் தயா சந்தகிரி, பிரபாகரனும் பொட்டு அம்மானும் சுனாமி அலைகளில் கொல்லப்பட்டார்கள் என்று உறுதிசெய்தார். சில நாளிதழ்களும் இச்செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்தன. ஆனால் விடுதலைப் புலிகளின் சார்பில் வெளியிடப்பட்ட மறுப்பு செய்தியை பிரசுரிக்கவே இல்லை.

ஆனால் பத்து நாட்களின் பின்னர் நோர்வே நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பீட்டர்சன் கிளிநொச்சியில் தலைவர் பிரபாகரனைச் சந்திக்கும் படத்தை இந்த நாளிதழ்களும் வெளியிட்டன.

ஆயினும் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக தாங்கள் வெளியிட்ட பொய்களுக்கு ஒரு வருத்தம்கூட தெரிவிக்கும் நாணயம் இந்த நாளிதழ்களுக்கு என்றுமே இருந்ததில்லை.

15-12-2007 அன்று சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் தலைவர் பிரபாகரன் படுகாயமடைந்து இருப்பதாகவும் அவர் இரகசியமான ஒரு இடத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிழைப்பது இயலாத ஒன்று என்றும் பரபரப்பான செய்தியை சிறிலங்கா பாதுகாப்புத்துறை வெளியிட்டது.

இப்படியெல்லாம் பிரபாகரன் இறந்துவிட்டதாக வக்கிர செய்திகளை பரப்புவதில் சிறிலங்கா அரசும் இந்திய உளவுத்துறையான (RAW) ராவும் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கின்றன. ஆனால் இச்செய்திகள் சிறிது காலத்திலேயே பொய்த்து விட்டன. தலைவர் பிரபாகரனை கொலை செய்ய பல திட்டங்கள் தீட்டப்பட்டன.

ஆனாலும் எல்லாவற்றிலிருந்தும் அவர் தப்பியுள்ளார், அவ்வாறே அவர் இப்போதும் மீண்டுள்ளார் என்பது இன்றைய உண்மை நிலை!

புலிகள் விட்டுச் சென்ற சான்றுகளின் பின்னால்…

நான்காம் கட்ட ஈழப்போரை பொறுத்த வரையில் அதன் இறுதிக்கட்டம் கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் நாள் கிளிநொச்சி நகரம் இலங்கைப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டதிலிருந்து ஆரம்பமாகியிருந்தது. ஆனால் அதன் நகர்வுப் பாதை இன்றும் புரியாத புதிராகவே பலருக்கும் தோன்றியிருக்கின்றதென படைத்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வசிப்பிடங்கள் தொடர்பான தெளிவான சான்றுகள் பலவற்றை விடுதலைப் புலிகள் தமது தளங்களில் விட்டும் சென்றிருந்தனர். அதை முன்னேறிய இலங்கைப் படையினர் கைப்பற்றியதாகவும், ராணுவ அதிகாரிகள் தகவல்களை வெளியிட்டன.

அதாவது கடந்த பெப்ரவரி மாதம் விசுவமடு பகுதியை படையினர் கைப்பற்றிய போது நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த வீடொன்றில் தேசிய தலைவர் பயன்படுத்தும் உடைகளையும், சில மருந்துப் பொருட்களையும், கோல்ட் கமாண்டோ ரக துப்பாக்கியையும் விட்டுவிட்டு சென்றிருந்தனர். அதன் பின்னர் தேசிய தலைவர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் பல பிரத்தியேக ஆவணங்களை விட்டு சென்றிருந்தனர்.

மகன் சாள்ஸ் அன்டனியினதும், மகள் துவாரகாவினதும் தேர்வுத் தாள்களையும், அவர்கள் முன்னர் பாவித்ததாகக் கூறி சில விளையாட்டுப் பொருட்களையும், நெருங்கிய உறவினர்களுடன் மற்றும் தளபதிகளுடன் தலைவரது குடும்பத்தினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், இலங்கைப் படைத்தரப்பு கைப்பற்றியதாக தங்கள் ஊடகங்களில் அதனை வெளியிட்டனர்.

இதன் மூலம் இலங்கை இராணுவமும், இலங்கை அரசாங்கமும் தலைவர் பிரபாகரன் தமது முற்றுகைக்குள் இருப்பதாக அவர்கள் கருதியிருந்தனர்.

ஒரு துப்பாக்கியை எடுத்துச் செல்வதா கஷ்டம்!

ஆகவே அவர்களின் முழுப் படைப் பலமும், கவனமும் இங்கு திருப்பப்பட்டிருந்தது. இதற்க்காக இலங்கையின் எல்லாப் படை பலத்தையும் ஒருங்கமைத்து இவ்விடங்களில் மையப்படுத்தினர் என்பது அப்பட்டமான உண்மை. தலைவர் நிச்சயமாக இங்கேதான் இருந்தவரென்றால் இப்படியான பொருட்களையும், எச்சங்களையும் ஏன் விட்டுவிட்டு செல்லவேண்டும் என்ற தர்க்க ரீதியான வாதங்களும் எழாமலில்லை.

விடுதலைப் புலிகள் பின்நகரும் போது எனறுமே தங்கள் ஆயுதங்களை, தங்கள் ஆவணங்களை விட்டுச் செல்வதில்லை. கிளிநொச்சி நகரம் சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட சில வாரங்களின் பின் அங்கு சென்ற சர்வதேச ஊடகவியலாளர்களும் இதனை அப்போது தெரிவித்திருந்தனர்.

அதாவது, கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் அலுவலகங்களிலும், மற்றய இடங்களிலுள்ள கட்டங்களிலும் கதவுகளில் திறப்பு மட்டுமே இருந்ததாகவும், வேறெந்தப் பொருட்களும் அங்கு இருந்திருக்கவில்லையென, அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் அன்றைய நாட்களில் குறிப்பிட்டிருந்தனர்.

பெருமளவில் ஆட்லறி உந்துகணைச் செலுத்திகளையும், கனரக ஆயுதங்களையும் மற்றும் படைத்தளவாடங்களை எடுத்து செல்பவர்களுக்கு ஒரு கோல்ட் கமோண்டோ ரக துப்பாக்கியைக் கொண்டு செல்வது கடினமானது அல்ல என்கின்றனர் பிரபல படைத்துறை ஆய்வாளர்கள்.

இறுதி நாளன்று தலைவர் வன்னியில் இல்லை!

இறுதி நேரத்தில் சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்த பின்புதான் தலைவர் தப்ப முயற்சித்தார் என்பது முரணான வாதம். ஏனெனில் அப்படிப்பட்ட முட்டாள்தனமான முன்னெடுப்புக்களை விடுதலைப் புலிகள் என்றுமே முன்னெடுத்ததில்லை. ஆக சில நிகழ்வுகள் அங்கு நிகழ்த்தப்பட்டுள்ளன என்று இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

இறுதி நாளான திங்கட்கிழமை காலை பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் வெளியுலகுடன் தொடர்பு கொண்டது (ரேடியோவில்) நீங்களனைவரும் அறிந்ததே. அவர் பேசும் போது, பின்புலத்தில் அவருக்கருகில் கேட்கப்பட்ட வெடியோசைகளையும், குண்டுச் சத்தங்களையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அப்போதைய அவரின் குரலிலிருந்து அவர் தன் இறுதி நேரத்தை நெருங்கி விட்டாரென்பதையும் நீங்களறிந்திருப்பீர்கள்.

அந்த அபத்த நிலையிலும், அவரின் இறுதி நேரத்திலும், ஆயிரம் கேள்விகள் அணிவகுத்து நின்ற போதும் ஒரேயொரு கேள்வி தான் அவரிடம் கேட்கப்பட்டது. (எங்களின்) உங்களின், உலகத் தமிழினத்தின் ஏன் தமிழ்ச் சாதியின் ஒட்டுமொத்தக் குரலாய், வேண்டுகையாய் அவரிடம் கேட்கப்பட்டது அந்த ஒரேயொரு கேள்வி தான் அது… தேசியத் தலைவர் எங்கே?

அந்தப் பதில் தெளிவாகவும், எம்மீது நிலை கொண்டு, நீண்டிருந்த சோகத்திலும் எமக்கு மிகுந்த தெம்பாகவும் இருந்தது.

‘தலைவர் பாதுகாப்பாக இருக்கிறார்!’ - என்பதே அந்த பதில்!

தமிழினத்தின் கற்பனைக்கெட்டாத கர்மவீரனாக,
காவிய நாயகனாக,
தமிழினத்தின் வியத்தகு வீரனாக,
இனத்தின் விடுதலை ஆன்மாவாக,
தமிழினத்தின் மீட்பராக
தலைவர் பிரபாகரனும், தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றியமைக்கும் சக்தியாக தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழரின் அடிமனதில் உறைந்து விட்டனர் என்பது அகிலமறிந்த உண்மை.

இதை எவராலும் எக்காலத்திலும் மறுத்துரைக்க முடியாது.

அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை

- இது திருக்குறள்!

தாயகத்திலிருந்து,
கவே.கரிகாலன்.

Read more...

இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் : ஜெயலலிதா
அதிமுக செயற்குழு கூட்டம், நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று நடந்தது.

தொண்டாமுத்தூர், இளையான்குடி, கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் ஆகஸ்ட் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது.

இந்நிலையில், இடைத்தேர்தல் குறித்து விவாதிக்க அதிமுக செயற்குழு கூட்டம் நீலகிரி மாவட்டம், குன்னூர் விவேக் டூரிஸ்ட் ஹோமில் இன்று மதியம் 3 மணிக்கு நடந்தது. வழக்கமாக, அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் சென்னையில்தான் நடக்கும். முதல்முறையாக சென்னைக்கு வெளியே செயற்குழு கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டார். கோடநாடு எஸ்டேட்டில் கடந்த ஒரு மாதமாக ஜெயலலிதா ஓய்வெடுத்து வருகிறார். இன்று அங்கிருந்து காரில் குன்னூர் வந்து செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

தமிழகத்தில் ஐந்து சட்டசபை தொகுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அதிமுக இக்கூட்டத்தில் முடிவு செய்தது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read more...

இடைத் தேர்தலை மதிமுகவும், அதிமுகவும் புறக்கணிப்பா?

ஐந்து சட்டப் பேரவைகளுக்கான இடைத் தேர்தலை மதிமுகவும், அதிமுகவும் புறக்கணிக்க வேண்டும் என்று மதிமுக மாநில கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில்சம்பத் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோவில்பட்டியில் நடந்த அக்கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில்சம்பத்,

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் குறித்து இலங்கை அரசு முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருகிறது. ஆனால், பிரபாகரன் இறக்கவில்லை.இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி முதல்வர் தில்லிக்கு செல்லவில்லை. காவிரி தண்ணீர் திறந்துவிடக் கோரி கர்நாடகத்துக்கு செல்லவில்லை. ஆனால், அமைச்சர் பதவி கேட்க மட்டும் தில்லிக்கு செல்கிறார்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணத்தைப் பயன்படுத்தி ஆளும் கட்சியினர் வெற்றி பெற்றனர்.


வருகின்ற இடைத் தேர்தலிலும் அதிகாரம் மற்றும் பணத்தைப் பயன்படுத்தி ஆளும் கட்சியினர் செயல்படுவர். எனவே, அதிமுகவும், மதிமுகவும் இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றார்.

Read more...

மகிந்த அரசை வழிக்குக் கொண்டுவர 'றோ' வின் திட்டம்

ஈழப் பிரச்சினையில் மீண்டும் தலையிட்டு தனது வல்லாதிக்க நிலையை வெளிப்படுத்துவதற்கு முற்பட்டுள்ள இந்தியா, பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். அமைப்பை இதற்காகப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும், இது தொடர்பாக ஈ.என்.டி.எல்.எப். தலைவர்கள் சென்னையில் இருந்து அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு பல சுற்றுப் பேச்சுக்கள் மிகவும் இரகசியமாக நடைபெற்றிருப்பதாகவும் மிகவும் நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.1987 காலப்பகுதியில் இந்திய புலனாய்வு நிறுவனமான 'றோ' அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஈழ தேசிய ஜனநாயக முன்னணியை (ஈ.என்.டி.எல்.எப்.) அமைப்பைப் பயன்படுத்தியே தனது மறைமுக வேலைத் திட்டம் ஒன்றை இந்தியா தற்போது வகுத்துவருவதாக தெரியவந்திருக்கின்றது.இப்பிடித்தான் 87ல் இந்தியா அரசு விடுதலைப்புலிகளைக் கட்டாயப்படுத்தி இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கச் சொன்னது. விடுதலைப்புலிகள் ஆயூதங்களை இந்தியா அரசுக்கு கொண்டு வந்து கையளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தியா உளவு அமைப்பு ரா ஈ.பி.ஆர்.எல்.எவ்க்கு ஆயூதங்களை வழங்கிக் கொண்டிருந்தது. இதனை இந்தியா இராணுவ அதிகாரியாக இருந்த கர்கிரட் சிங் சொல்லி இருந்தார்.

இதன் ஒரு பகுதியாகத்தான் கிளிநொச்சி மாவட்டத்தில் 20 ஆயிரம் தமிழர்களை உடனடியாக மீளக்குடியேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ள இந்தியா, கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இந்தியப் படையைச் சேர்ந்த கண்ணிவெடி அகற்றும் பிரிவையும் அவசரமாக அனுப்பிவைப்பதற்கு முன்வந்திருக்கின்றது.

இலங்கையில் தற்போது ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய நம்பகரமான கட்சிகளோ அல்லது தமிழ் ஆயுதக் குழுக்களோ எதுவும் இல்லை என்று கருதியே ஈ.என்.டி.எல்.எப். அமைப்பை பயன்படுத்துவதற்கு இந்தியா தற்போது திட்டமிட்டுள்ளது.

இதனையடுத்து சென்னையில் இருந்து செயற்பட்டுவந்த பரந்தன் ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் சிலர் அவசரமாக புதுடில்லிக்கு அழைக்கப்பட்டு முக்கிய பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் நட்புச் சக்தியாகக் காட்டக்கூடிய கட்சிகள் எதுவும் இலங்கையில் இதுவரையில் இருந்திருக்கவில்லை.

இந்நிலையிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விநாயகமூர்த்தி முரளிதரன் விலத்தப்பட்ட காலப்பகுதியில் ஈ.என்.டி.எல்.எப். அமைப்பைச் சேர்ந்தவர்கள் விநாயகமூர்த்தி முரளிதரன் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான விருப்பத்துடன் கிழக்கு மாகாணத்துக்கு வந்திருந்தனர்.

இணைந்து பணியாற்றுவது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் விநாயகமூர்த்தி முரளிதரன் குழுவில் ஏற்பட்ட பிளவையடுத்து ஈ.என்.டி.எல்.எப். அமைப்பினர் வெளியேறிச் சென்றுவிட்டனர்.

'றோ' வகுத்திருந்த திட்டம் ஒன்றின் அடிப்படையிலேயே ஈ.என்.டி.எல்.எப். அமைப்பைச் சேர்ந்த சிலர் இரகசியமாக கிழக்கு மாகாணத்துக்கு வந்து விநாயகமூர்த்தி முரளிதரன் குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு முனைந்ததாகக் கூறப்படுகின்றது.

அதேவேளையில் விநாயகமூர்த்தி முரளிதரன் குழுவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து பிள்ளையான் குழுவை தனது செல்வாக்குக்குள் கொண்டுவருவதற்காக 'றோ' மேற்கொண்ட முயற்சிகளும் பெருமளவுக்கு வெற்றிபெறவில்லை எனக் கூறப்படுகின்றது.

வடக்கு - கிழக்கில் தற்போது செயற்பட்டுவரும் ஆயுதக் குழுக்களைப் பொறுத்தவரையில் அவை அனைத்தும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடனேயே செயற்படுகின்றன.


இந்நிலையில் 'றோ' வின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பது தமது இருப்பையே கேள்விக்குறியாகிவிடும் என இந்த அமைப்புக்கள் கருதுகின்றன. அதனால்தான் இந்தியாவின் கைகளில் விழாமல் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்படுவதற்கே அவை முன்னுரிமை கொடுக்கின்றன.

இந்தப் பின்னணியில்தான் ஈ.என்.டி.எல்.எப். அமைப்பைப் பயன்படுத்திக்கொள்வதற்கு 'றோ' தீர்மானித்திருப்பதாகத் தெரிகின்றது.

ஈ.என்.டி.எல்.எப். அமைப்பின் தலைவர் பரந்தனைச் சேர்ந்தவர். அத்துடன், இந்தியப் படையினர் வடக்கு - கிழக்கில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் இந்த அமைப்பு கிளிநொச்சியை மையப்படுத்தியே தனது செயற்பாடுகளை மேற்கொண்டது. மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் வகையில் இந்த அமைப்பின் செயற்பாடுகள் அப்போது அமைந்திருந்தன.

மீண்டும் கிளிநொச்சியை மையப்படுத்தி ஈ.என்.டி.எல்.எப் கட்சி செயற்படும் விதமாக 20 ஆயிரம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைக்கு இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பது இந்தப் பின்னணியில்தான். இதற்காகத்தான் அவசர அவசரமாக இந்தியப் படை முதற்கட்டமாக கண்ணிவெடிகளை அகற்றப் போகிறது. இதற்காக இந்தியப் படை கண்ணிவெடிகளை அகற்றும் பிரிவைச் சேர்ந்த 500 பேர் கிளிநொச்சிக்கு அனுப்பப்படவிருக்கின்றனர்.

இந்த முயற்சியை நோக்கமாகக் கொண்டு ஈ.என்.டி.எல்.எப் உறுப்பினர்களை மீள ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தமிழ்நாட்டில் மீண்டும் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் தெரியவந்திருக்கின்றது.

கிளிநொச்சியில் 20 ஆயிரம் மக்களை மீளக்குடிமயர்த்தும் போது, தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் அகதிகள் என்ற பெயரில் ஈ.என்.டி.எல்.எப். உறுப்பினர்களில் சிலரையும் கிளிநொச்சிக்கு அனுப்ப முடியும். அத்துடன், ஈ.என்.டி.எல்.எப். அமைப்பு ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதன் செயற்பாடுகளையும் சிறிலங்கா அரசினால் தடுத்து நிறுத்த முடியாது.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் கருத்துக்களை மீறி மகிந்த அரசு தொடர்ந்தும் செயற்பட்டுவருவதால் மகிந்த அரசை வழிக்குக் கொண்டுவருவதற்காகத்தான் ஈ.என்.டி.எல்.எப். அமைப்பைப் பயன்படுத்துவதற்கு 'றோ' திட்டம் வகுத்திருக்கின்றது என புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் கருதுகின்றன. ஈ.என்.டி.எல்.எப். அமைப்பின் வருகை மேலும் குழப்பங்களை ஏற்படுத்துவதாக மட்டுமே அமையும் என்றே கூறவேண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழர் போராட்டத்தினை மேலும் முன்னெடுப்பதற்கு இந்தியாவின் உதவியை வேண்டி நிற்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

இலங்கையை காப்பாற்ற இந்தியா ஆயுதம் கொடுத்தால்,தமிழ் ஈழம் அமைய இங்குள்ள தமிழர்கள் உதவி செய்வார்கள்: வைகோ

அனைத்துலகத்தின் மனசாட்சியும் தட்டி எழுப்பப்பட வேண்டும்.
‘குற்றம் சாட்டுகிறேன்’ எனும் தலைப்பிட்ட இந்த நூல் ‘I Accuse ’ எனும் தலைப்பில் ஏற்கனவே வெளியில் உலவியபோதிலும் அதில் புதிதாக சில அத்தியாயங்கள் இணைக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நிலையில் ‘குற்றம் சாட்டுகிறேன்’ எனும் தலைப்போடு இந்த நூல் வெளியிடப்பட வேண்டும் என்று நான் விரும்பியபோது எங்கள் வேண்டுகோளை அன்போடு ஏற்றுக்கொண்டுவந்து சிறப்பித்து இருக்கிற அண்ணன் நெடுமாறன் அவர்களுக்கும், இந்த மேடையில் வீற்றிருக்கும் தமிழீழ விடுதலைக்குப் போராடிக் கொண்டிருக்கும் என் இனிய சகோதரர்களுக்கும் என் உள்ளம் எல்லாம் நிறைந்திருக்கின்ற நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குற்றமற்ற டிரைஃபஸ் அவன் சதிக்குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு வஞ்சகமாக சதிச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அவன் பூதத்தீவு என்கின்ற டெவில் தீவில் சிறைவைத்து இருந்த காலத்தில், நீதிக்காகப் போராடிய தலைசிறந்த எழுத்தாளர் எமிலி ஜோலா தன் நாட்டு மக்கள் மத்தியில் அக்கிரமக்காரர்களைக் கூண்டில் நிறுத்துவதற்காக அவன் வெளியிட்ட பிரசுரத்தின் தலைப்புதான் ‘I Accuse’ ‘குற்றம் சாட்டுகிறேன்’ இலட்சக் கணக்கான பிரதிகள் பிரெஞ்சு நாட்டுவீதிகளில் எல்லாம் வலம்வந்தது. அந்தப் பிரசுரத்தை வெளியிட்டதற்காகவே எமிலி ஜோலா மீண்டும் கைது செய்யப்பட்டார்.

ஆனால், மாதங்கள் கரைந்து ஓடின. அவன் குற்றச்சாட்டு உண்மை என்பது நிரூபிக்கப்பட்டது. பூதத்தீவில் சிறைவைக்கப்பட்டு இருந்த எலும்பும் தோலுமாக உருமாறிப் போயிருந்த டிரைஃபஸ் மீண்டும் அழைத்துவரப்பட்டு, அதே இராணுவத் தளபதியின் உடைகள் அவனுக்கு அணிவிக்கப்பட்டு அவன் ஏந்திய உடைவாளையும் கையில் பெற்றுக்கொண்டு, அவன் தலைநிமிர்ந்து நடக்கவும், சதிகாரர்கள் கூண்டில் அடைக்கப்படவுமான காட்சியாக அது மாறியது.ஆகவே, ‘குற்றம் சாட்டுகிறேன்’ எனும் இந்தத் தலைப்பிலே வைக்கப்பட்டு இருக்கிற நூலில் தொடுக்கப்பட்டு இருக்கிற குற்றச்சாட்டுகள் எங்கள் இனத்தைக் கருஅறுப்பதற்கு தமிழ் இனத்தை ஈழத்தில் கருஅறுக்க வேண்டும் என்று திட்டமிட்ட கொடியவன் ராஜபக்சேவுக்கு இந்திய அரசு செய்திருக்கக்கூடிய மன்னிக்கமுடியாத உதவிகளான துரோகத்தை இந்த இனத்தின் வருங்கால இளைஞர்களுக்கும், இன்றைய தலைமுறைக்கும் எடுத்துவைக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில்தான் இந்த நூல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

2004 ஆம் ஆண்டு இந்திய இலங்கை இராணுவ கூட்டு ஒப்பந்தம் போட வேண்டும் என்று இந்திய அரசு திட்டமிட்டது. அதை அறிந்த நாளில் இருந்து அதைத்தடுப்பதற்கு முயன்று போராடி போராடி - மன்றாடி மன்றாடி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்று அவர்கள் எங்களிடத்தில் உறுதிமொழி கொடுத்தபோதிலும்கூட அந்த ஒப்பந்தத்தின் சரத்துகள் நிறைவேற்றப்படும் என்று அன்றைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கொழும்பில் சென்று பேசியபோது அடுத்த நாள் மீண்டும் நான் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைச் சந்தித்து வெளிவிவகாரத்துறை அமைச்சர் இப்படிச் சொல்லி இருக்கிறாரே என்று பத்திரிகை ஆவணங்களைக் காட்டியபோது பிரதமர் ‘அது அவர் தனிப்பட்ட கருத்து’ என்று செப்பிடு வித்தையாக கூறியதை அன்றைக்கு நான் நம்பினேன்.

அதன்பிறகு பலாலி விமானதளம் புதுப்பிக்கக்கூடாது இந்திய இராணுவத்தின் செலவில் இந்திய விமானப்படையின் உதவியோடு என்று, எங்கே? ரேஸ்கோர்ஸ் சாலை 7 ஆம் நம்பர் வீட்டில் பிரதமரிடத்தில் - ஜன்பத் 10 ஆம் நம்பர் வீட்டில் சோனியாகாந்தியிடத்தில் அப்படி எல்லாம் - எங்களுடைய முறையீடுகளை கோரிக்கைகளை எடுத்து வைத்த பின்னரும்கூட, அந்தப் பலாலி விமானத்தளம் புதுப்பித்துக் கொடுக்கப்பட்டது. அந்த விமான தளத்துக்குச் சர்வதேச செய்தியாளர்களை அழைத்துக் கொண்டுசென்ற டொமினிக் பெரேரா இது இந்திய நாட்டு விமானப்படையின் துணையோடு இந்திய அரசின் செலவில் அவர்களுடைய பணத்தில் நிதியில் இது புதுப்பித்துக் கொடுக்கப்பட்டது என்று பகிரங்கமாகச் சொன்னார்.

ரேடார்கள் கொடுக்கக்கூடாது அது ஈழத் தமிழர்களை அழிப்பதற்கு பயன்படும் ராஜபக்சே கரங்களுக்குப் போய்ச்சேரும் என்றபோது பாகிஸ்தானும் சீனாவும் தந்துவிடக்கூடும் என்று அதற்கொரு விளக்கத்தைக் கொடுப்பதற்கு முன்வந்தார்.

அண்ணன் நெடுமாறன் அவர்கள் கூறியதைப்போல, தமிழர்களை அழிப்பதற்குப் பயன்படுமே அப்படியானால் தமிழர்கள்மீது குண்டுவீசுகிறபோது அதைத்தடுப்பதற்கு நீங்கள் தமிழர்களுக்கு வேறு என்ன சாதனங்களைத் தரப்போகிறீர்கள்? என்று கேட்டபோது,அதற்குப் பதில் சொல்லமுடியாத இந்தியப் பிரதமர் அப்படி ஓர் போர்மூளுமானால் ரேடார்களைத் திரும்பி வாங்குவோம் என்றார். அவர் சொன்னதை நான் உடனடியாக ஏடுகளுக்கும் செய்தியாகத்தந்தேன்.மறுநாள் சென்னைக்குவந்த அண்ணன் நெடுமாறனைச் சந்தித்து பிரதமருடன் நடந்த உரையாடலையும் குறிப்பிட்டேன்.இவை எல்லாம் கடந்துபோன செய்திகள். நான் காலத்தின் அருமைகருதி அதற்குள் அதிகமாகச் செல்லவிரும்பவில்லை.
இன்றைக்கு ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டு இருக்கிற துயரநிலையைப்பற்றி நம் சகோதரர்கள் மனதில் நம்முடைய துன்பங்களை தெரியப்படுத்துகிறவிதத்தில் எடுத்துச் சொன்னார்கள். இவ்வளவு ஆயுதங்களையும் கொடுத்து ரேடார்களைக் கொடுத்து, எறிகணை ஏவுகணைகள் மல்டிபர்பஸ் ராக்கெட் லாஞ்சர்ஸ், பீரங்கிகள், ஃபோபர்ஸ் வழக்கில் சிக்கிய அந்தப் பீரங்கிகள் உள்பட இத்தனை ஆயுதங்களையும் அள்ளிவழங்கி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தையும் கொடுத்து,அதன்மூலமாக இங்கே அண்ணன் நெடுமாறன் அவர்கள் குறிப்பிட்டதைப்போல உலகத்தின் பல தேசங்களில் இருந்து பாகிஸ்தானிலும், சீனாவிலும், ஈரானிலும், இஸ்ரேலிலும், ரஷ்யா நாட்டில் இருந்தும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் ஆயுதங்களை பெருமளவில் வாங்கி குவித்து வைத்துக் கொண்டு விடுதலைப்புலிகள் மீதான போரை அவர்கள் நடத்தினார்கள்.

இவ்வளவு ஆயுதங்களை இந்திய அரசு தந்து கொண்டு இருக்கிற வேளையில் ஓயாத அலைகளில் - அக்னி அலைகளில் வெற்றி முரசு கொட்டிய விடுதலைப்புலிகள் இந்த பன்னாட்டு ஆயுதபலத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டபோது ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்படுகிறார்களே என்ற துயரக்குரல் தமிழகத்தில் எழுந்து அதன் பிரதிபலிப்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு ஒட்டுமொத்தத் தமிழகத்தின் எதிர்ப்புக்குரல் பதிவுசெய்யப்பட்ட பிறகும்கூட கடைசிநிமிடம் வரையிலும் இந்திய அரசு போரை நிறுத்தச் சொல்லவில்லை. இறுதிவரை சொல்லவில்லை. ஒப்புக்குக்கூட சொல்லவில்லை.

ஆகவே, இந்தப் புத்தகத்தில் நான் மிகத்தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன் பிரதமரிடத் தில் தமிழன் சிந்துகிற ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் நீங்கள் பொறுப்பாளி. ஒவ்வொரு தமிழன் தமிழச்சியும் சாவுக்கும் உங்கள் அரசு பொறுப்பாளி என்று கூண்டில் நாங்கள் நிறுத்துவோம் என்று எழுதியிருக்கிறேன். ஆகவே, ராஜபக்சேவை கூண்டில் நிறுத்த வேண்டும். சர்வதேச குற்றவாளிக் கூண்டில் அவன் நிறுத்தப்பட வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருக்கிற நேரத்தில், இந்திய அரசு செய்த துரோகத்தினால் இன்றைக்கு விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டு இருக்கிற பின்னடைவுகளுக்கு இந்திய அரசு செய்த துரோகம் காரணம்.

இதற்கு என்ன நோக்கம்? இன்றல்ல, நேற்றல்ல தேசிய இனங்களின் கூட்டமைப்புதான் உபகண்டம் என்று நம்முடைய கவிஞர் இன்குலாப் இங்கே எடுத்துச் சொன்னார். இந்தத் துரோகம் இன்று நேற்றல்ல 1987 இல் தொடங்கியது. அன்றைக்கு இந்திய இலங்கை ஒப்பந்தம் திணிக்கப்பட்டது. அன்றைக்குத் திணிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாகவே சுதுமலை கூட்டத்தில் பிரபாகரன் சொன்னார் ‘சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் மகத்தான தியாகங்களைச் செய்து நாங்கள் கட்டியெழுப்பி இருக்கக்கூடிய எங்கள் விடுதலைக் கோட்டைகளை உடைத்து நொறுக்குகின்றார்கள். எங்கள் பாதுகாப்பை இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறது’ என்று குறிப்பிட்டார்.

அன்றைக்கு அப்படித் துரோகத்தைச் செய்து ஒப்பந்தத்தை திணித்து திலீபனின் சாவுக்குக் காரணம் அன்றைய இந்திய அரசு. குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 புலிப் படை தளபதிகளின் சாவுக்குக் காரணம் அன்றைய இந்திய அரசு. ஏன் திலீபன் உண்ணா விரதத்தைத் தொடங்கும் முதல்நாள் இரவு இந்தியாவின் தூதராக கொழும்பில் இருந்த தீட்ஷித் இந்திய இராணுவத்தின் மதிக்கத்தக்க தளபதியாக இருந்த ஹர்கரத் சிங்கிடம் ‘நாளையதினம் பிரபாகரன் உன்னைச் சந்திக்க வருகிறார் சுட்டுப்பொசுக்கிவிடு’ என்று கூறினார்.

அதிர்ச்சி அடைந்த இந்தியத் தளபதி இந்தத் துரோகத்தை ஒருபோதும் நாங்கள் செய்ய மாட்டோம் என்று கூறியதற்கு இது என்னுடைய உத்தரவல்ல. தில்லியின் கட்டளை இராஜீவ்காந்தியின் உத்தரவு என்று கூறியதாக பதிவு செய்யப்பட்டு இருக்கும் புத்தகம் இந்தியாவில் தடைசெய்யப்படவில்லை அதை எழுதிய ஹர்கரத் சிங்கும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். ஆக, ஸ்ரீபெரும்புதூர் சம்பவங்களுக்கு முன்னால் இது. திலீபனின் உண்ணாவிரதத்துக்கு முன்னால் நடைபெற்ற சம்பவம்.

திலீபனின் சாவுக்குக் காரணம் அன்றைய இந்திய அரசு. குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 புலிப் படை தளபதிகளின் சாவுக்குக் காரணம் அன்றைய இந்திய அரசு. அதன்பிறகு தூதராக அனுப்பிய ஜானியைச் சுட்டுக்கொன்ற துரோகத்தை செய்த இந்திய அரசு. இந்து மாக்கடலில் கிட்டுவின் மரணத்துக்குக் காரணமான இந்திய அரசு. அந்தத் துரோகங்களின் தொடர்பாகத்தான் கடைசிக் கட்டத்தில் 2004 ஆம் ஆண்டுக்குப்பிறகு திட்டமிட்டு விடுதலைப்புலிகளை அழிக்கவேண்டும் என்று ராஜபக்சேவோடு சேர்ந்து சோனியா காந்தியின் ஆலோசனையின்படி இந்திய அரசு திட்டம் வகுத்தது.

பிரச்சனை முடிந்து விடவில்லை. அப்படித் திட்டம் வகுத்ததன்விளைவாகவே, இந்தப் போரை நடத்தியதற்குப்பிறகு தமிழ் ஈழ விடுதலைக் கோரிக்கையை அழித்துவிட வேண்டும் என்பது இந்திய அரசின் நோக்கம். விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டும் என்பது இந்திய அரசின் நோக்கம். அதற்காகத்தான் இவ்வளவு உதவிகளையும் செய்தார்கள். இது மன்னிக்கமுடியாத துரோகம். இந்தக் குற்றச்சாட்டுகளை தமிழக மக்கள் மனதில் நாங்கள் விதைத்துக் கொண்டே இருப்போம்.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல - சட்டத்தை ஏவலாம் - இங்கே தமிழகத்தில் இருக்கிற அரசு சட்டத்தைப் பயன்படுத்தி எங்களை காராகிருகத்தில் பூட்ட முயற்சிக்கலாம். பூட்டி இருக்கிறது கடந்த நாட்களில். தமிழர்களைக் கொல்ல ஆயுதம் கொடுக்கிறது இந்திய அரசு என்கிறபோது துடிக்காதா தமிழன் இரத்தம்? எங்கள் சொந்தச் சகோதரர்கள் வெட்டிச் சாய்க்கப்படுகிறபோது கொன்றுகுவிக்கப்படுகிறபோது அவனுடைய உள்ளம் வேதனைத்தணலில் வெந்துதவிக்காதா? அப்படித்துடித்ததின் விளைவுதானே இதோ வீரத்தியாகி முத்துக்குமார். அவனோடு சேர்ந்து 14 பேர் தீக்குளித்து மடிந்தார்கள். அந்தத் தணல் எங்கள் நெஞ்சில் அணையவில்லையே,அப்படிப்பட்ட உணர்வோடு இந்திய அரசு செய்கிற துரோகத்தைக் கண்டு மனம் கொதித்துப்போன நிலையில் அங்குள்ள தமிழர்கள் - எங்களுடைய சொந்தச் சகோதரிகள் நாசமாக்கப்பட்டு கொன்றுகுவிக்கப்படுகிறபோது - தமிழனின் இரத்தம் ஆறாக ஓடிக் கொண்டு இருந்தநிலையில் இவ்வளவும் செய்துவிட்டு இந்திய அரசு கடைசிநிமிடம் வரையில் போரைநிறுத்து என்று சொல்லவில்லை. இப்பொழுது கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இந்திய இராணுவம் செல்லும் என்று சிவசங்கரமேனன் பகிரங்கமாக அறிவிக்கிறார்.

நான் பிரதமருக்குச் சொல்வேன் இந்திய அரசுக்குச் சொல்வேன் நீங்கள் மறைமுகமாக பல உதவிகள் செய்தீர்கள் - ஆயுதங்கள் வழங்கினீர்கள் - அப்படி ஆயுதங்கள் வழங்குகிற போது தமிழனை கொல்வதற்கு இந்தியா ஆயுதம் தருகிறது என்றால் தமிழன் தடுப்பதற்கு முயற்சிக்க மாட்டானா? அதுவும் எங்கள் தமிழ்நாட்டு வீதிகளில் செல்கிறது ஆயுதங்களை தாங்கிய வண்டிகள் என்றசெய்தி பரவுகிறபோது அவர்களது உள்ளம் தணலாக மாறித் துடிக்காதா? மத்திய அரசு அலுவலகத்துக்குமுன்பு மாநில அரசு அலுவலகத்துக்கு முன்னால் மறியல் செய்கிறோம். அரசின் நடவடிக்கையைக் கண்டிக்கிறோம்.

சட்டத்தைப் பயன்படுத்துகிறீர்கள் - கைது செய்கிறீர்கள் - சிறை செல்வதைப்பற்றிக் கவலைப்படவில்லை - அதைப்போலத்தான் பெரியார் திராவிடர் கழகத்தினரும் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும் - தமிழ் உணர்வாளர்களும் கோவை மாநகரில் வாகனங்களில் ஆரோகணித்து செல்கிற ஆயுதங்கள் நமது தமிழனின் உயிர்குடிக்க என்று கருதிக் கொண்டு கோவை இராமகிருஷ்ணனும் மற்ற தோழர்களும் சென்று தடுத்தார்கள். அதற்குப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவினாரே,சீமான்மீது - கொளத்தூர் மணி மீது - நாஞ்சில் சம்பத் மீது பாதுகாப்புச் சட்டம்.அந்தப் பாதுகாப்புச் சட்டம் தவறானாது. பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு வந்ததற்குப்பிறகு, பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டு இருக்கிறது என்று உயர்நீதிமன்றத்தில் நான் வாதாடினேன். என் வாதத்தை ஏற்றுக்கொண்டு மாட்சிமை தங்கிய நீதிபதிகள் நாஞ்சில் சம்பத் மீது போடப்பட்ட பாதுகாப்புச் சட்டம் இரத்துசெய்யப்படவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்பாளர் வழக்கறிஞர் சந்திரசேகர் மீது பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டது. அவர் இந்திய குடியரசுத் தலைவருக்கு நான் நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானவன் அல்ல, ஆனால், எங்கள்மீது தேசப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டு இருக்கிறது. நீதி குழிதோண்டி புதைக்கப்பட்டு இருக்கிறது. நீதி கேட்கிறேன் என்றொரு முறையீட்டை வைத்தார். இந்தியக் குடியரசுத் தலைவர் சட்டவல்லுநர்களை கலந்து ஆலோசித்து தேசப்பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்பட்டு இருக்கிறது தமிழ்நாட்டில். அது இரத்து செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து விட்டார். (பலத்த கைதட்டல்)

இந்தியக் குடியரசுத் தலைவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர்தான் ஆனால், சட்டவல்லுநர்கள் தந்த ஆலோசனையின்படி தமிழ்நாட்டு தி.மு.க.. அரசு கோவை வழியாக ஆயுதங்களை ஏந்திச் சென்ற வாகனங்களை தடுக்கமுயன்ற ஒரு இயக்கத் தொண்டன்மீது போடப்பட்ட பாதுகாப்புச் சட்டம் தவறானது அது இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவு பிறக்கப்பட்டு இருக்கிறது. இது தி.மு.க. அரசின் கன்னத்தில் அறைந்த செயல் என்பதை மறந்துவிடக்கூடாது. (பலத்த கைதட்டல்)
ஆனால், இதற்குப் பின்னரும் எங்கள் தோழன் வேலாயுதத்தின்மீது நான்கைந்து தினங்களுக்கு முன்னால் பாதுகாப்புச் சட்டம் ஏவப்படுகிறது. அதைப்போலவே தமிழர் உரிமைக்குப் போராடிய இன்னொரு இளைஞன்மீது பாதுகாப்புச் சட்டம் ஏவப்படுகிறது.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எரிமலை வெடித்தது. திருப்பூரில் காவல்துறையைச் சேர்ந்த இருவர் தீயில் தூக்கிப் போடப்பட்டார்கள். தமிழகமே கொந்தளிக்கும் கடலாயிற்று அதன்பின்னர் அண்ணா முதலமைச்சராக வந்து அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றார்.

1968 இல் மீண்டும் கிளர்ச்சி வெடித்தபோது சென்ட்டிரல் இரயில்நிலையம் தீப்பற்றி எரிந்தது. இரயில்பெட்டிகள் கொளுத்தப்பட்டன. சட்டமன்றத்தில் விநாயகமும், ...... அண்ணாவிடத்தில் காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறதா என்று கேள்வி எழுப்பினார்கள் சட்டமன்றத்தில். அதற்கு அண்ணா சொன்னார் இரயில் பெட்டிகள் எரிந்தால் நாம் மீண்டும் செய்துகொள்ளலாம் ஒரு மாணவனின் உயிர்பறிபோகுமானால் அந்த உயிர் திரும்பப்பெறமுடியாது என்று சொன்னார்.

உணர்ச்சியின் அடையாளமாகத்தான் அந்தப் போராட்டம். தமிழ் இன உணர்வின் அடையாளமாக. ஆனால், இங்கே இப்பொழுது இருக்கின்ற அரசு மத்திய அரசோடு சேர்ந்து கொண்டு தமிழர்களின் உரிமைகளை அழிப்பதற்காக அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். தமிழக அரசு போர்க்கோலம் பூண்டு இருந்தால் தடுத்து இருக்கலாம். அண்ணாவின் உணர்வு இருந்திருந்தால். அண்ணாவின் கல்லறை ஒரு போதும் கருணாநிதி அவர்களை மன்னிக்கப் போவதில்லை.

எங்கள் இனத்துக்காரனைப் படுகொலை செய்யாதே நெருங்காதே ஆயுதம் கொடுக்காதே போரை நிறுத்துகிறாயா இல்லையா சொல் என்று இந்த அரசு முடிவெடுத்து சொல்லி இருக்குமானால் மன்மோகன் சிங்குக்கு நிச்சயமாக இந்தத் தைரியம் வந்திருக்காது. இந்திய அரசுக்கு இந்தத் தைரியம் வந்திருக்காது. தமிழக மக்களின் உள்ளம் எரிமலையாக வெடித்துவிடாமல் தடுப்புச் சுவராகப் பயன்படுவேன் - என் எழுத்தும் பேச்சும் பயன்படும் என்றவகையில் அவைகளைப் பயன்படுத்தினார் கலைஞர்.

ஆகவே, இவ்வளவு பெரிய கொடுந்துயரம் நேர்ந்துவிட்டது - எவராலும் வீழ்த்த முடியாத புலிகள் இந்தப் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். போரில் புலிகளுக்கு நிகரான வீரர்கள் இல்லை. உணர்வுகள் விதைக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் ஈழ உரிமைப் போர் முடிந்துபோய் விடவில்லை. அதுமேலும் வீறுகொண்டு எழப்போகிறது என்ற நிலைமையில் ஒரு புதிய பரிணாமம்தான் இன்றைக்குத் தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்கள் உள்ளத்தில் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது.
இங்கே இருந்து கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இராணுவத்தை அனுப்புவது அயோக்கியத்தனமான நடவடிக்கை. நீ யார் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு. எங்கள் இளைஞர்களைத் தேடித்தேடி கொல்வற்கா? எங்கள் புலிப்படைத் தோழர்களைத் தேடித் தேடி படுகொலை செய்வதற்கா? உலகநாடுகளின் ஆயுதங்களை எல்லாம் வாங்கிக் கொண்டு தமிழர்களைக் கொன்றுகுவித்தான், முள்வேலிக்குள் அடைத்துவைத்துக் கொண்டு 3 இலட்சம் தமிழர்கள் இன்றைக்கு வதைபடுகிறார்கள்.
இங்கே இருக்கிற இந்து ராம்கள் விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் .கொழும்பில் இருக்கிற இலங்கையின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர் நேரடியாகப் பார்த்துவிட்டுச் சொன்னார் ,மோசமான நிலைமை இருக்கிறது என்று- இதற்கு என்ன பதில்?
கைக்கூலியாக இருந்த ஒருவன்கூட நேற்றைக்கு கதறியதாக இன்றைக்குப் பத்திரிகை போடுகிறது. சிங்களத்துக்காரனுக்கு கைக்கூலியாக மாறிய ஒருவன், அவன்கூட நேற்றைக்குப் பார்த்து விட்டு ஐயோ என் நெஞ்சம் பதறுகிறதே சித்ரவதை முகாம்களுக்குள் இப்படி துன்புறுத்தி குவிக்கிறார்களே, என்று வேதனைப்பட்டதாக செய்திவருகிறதே, தமிழ் இனப்பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். உலகம் இதுவரை சந்தித்திராத அக்கிரமம் அங்கே நடைபெறுகிறது. இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள் உணவில்லை, மருந்தில்லை இதுதான் இன்றைக்கு அங்கே இருக்கிற நிலைமை.

எல்லாவற்றையும்விட மானத்தை உயிரினும் பெரிதாக கருதக்கூடிய நமது சகோதரிகளின் மானத்துக்குப் பாதுகாப்பு இல்லை. அந்தச் சித்ரவதை முகாம்களில் முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு எந்தவிதமான உரிமைகளும் இல்லை. சரி இவர்கள் எங்குபோய் சேர்வார்கள்? சிங்களக் குடியயேற்றம் கிடையாது என்கிறான் இராஜபக்சே. ஒரு சதவிகிதமாக கிழக்கு மாகாணத்தில் இருந்த சிங்கள நாய்கள் நீங்கள் இன்றைக்கு அங்கே 34 சதவிகிதமாக எப்படி குடியேற முடிந்தது. இனி வடக்கிலும் நீங்கள் கால் வைப்பீர்கள்.

தமிழர்களின் பூர்வீக தாயகம் என்கின்ற கோட்பாடு ஏற்கனவே முடியாது என்று சொல்லி விட்டான் ராஜபக்சே. நேற்றைக்குச் சொல்கிறேன் ‘இனம் என்ற பேச்சுக்கே இந்த மண்ணில் இடம் இல்லை’ என்கிறான். அந்த வார்த்தையே என்னால் ஏற்கமுடியாது என்கிறான். எல்லோரும் சிங்கள தேசத்து மக்கள் என்கிறான். தமிழ்நாட்டு முதல்வர் இதை ஏற்றுக் கொள்கிறாரா? ஈழத்தில் தமிழ் இனம் என்பதே கிடையாதா?

ஈழத்தில் தமிழர்களின் பூர்வீக மண் வடக்கும் கிழக்கும் என்று இந்திரா காந்தி 1983 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் சொன்னார். தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிமக்கள் என்றார். அவர்கள் ஒரு தனி இனம். அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தனி அரசு அமைத்து வாழ்ந்த இனம். அவர்கள் சுதந்திர தமிழ் ஈழம் அமைப்பதைத் தடுப்பதற்கு நீங்கள் யார்? இந்திய அரசு அதில் என்ன உரிமை?
இந்தப் புத்தகத்தில் ஒரு கடிதத்தை நான் பதிவுசெய்து இருக்கிறேன். இந்தியப் பிரதமர் கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில் 'இலங்கையில் ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு நாங்கள் இராணுவ உதவிசெய்கிறோம்' என்று அதில் குறிப்பிடுகிறார். இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற நீங்கள் யார்? இந்தியாவுக்கு என்ன உரிமை? இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் ஆயுதம் கொடுத்தால், தமிழ் ஈழம் அமைப்பதற்கு நாங்கள் எல்லா உதவிகளும் செய்வோம்.
உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு நீங்கள் ஆயுதம் கொடுப்போம் என்றால் அந்த ஒருமைப்பாட்டை உடைப்பதற்கு தமிழ் ஈழம் மலர்வதற்கு தன்மானமுள்ள தமிழன் ஒவ்வொருவரும் தன்னையே தருவான். இது என்ன நிலைப்பாடு? இது எங்கள் நிலைப்பாடு. நாங்கள் இந்த நாட்டுக்கு தேசத் துரோகிகள் அல்லவே? உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு நிலப்பரப்பும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று உபதேசிக்கின்ற இடத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? பூமிப்பந்துக்கே நீங்கள் காவல்காரனா?

அப்படியானால் கிழக்கு தைமூர் பிரிந்ததே? வாய்மூடிக் கிடந்தீர்களே? கொசோவா தனிநாடாகிவிட்டதே? உலகம் அதை கண்டுகளித்துவிட்டதே? அவர்கள் பூர்வீக பூமி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் அங்கு அரசோட்சி வாழ்ந்தவர்கள். அவர்கள் தனி இனம்.

இன்னும் சொல்லப்போனால், தமிழ் இனத்தின் நாகரிகத்தையும், பண்பாட்டை அடி விடாமல் காத்து வீரம்,மானம், கற்பு, பண்பு, விருந்தோம்பல் என அனைத்தையும் இன்றைக்கும் பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஈழத்துத் தமிழர்களின் இனத்தின் முகவரியை தொலையவிடாமல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆகவே தனி அரசாக வாழவேண்டும் என்ற நிலைமைக்கு எப்பொழுது வந்தார்கள்? அவர்கள் ஒடுக்கப்பட்ட பிறகு நாயினும் கேவலமாக நடத்தப்பட்ட பிறகு - சம உரிமை உள்ள மக்களோடு மக்களாக வாழமுடியாத நிலைமை தெளிவுபடுத்தப்பட்ட பிறகு தந்தை செல்வா பிரகடனம் செய்தார். காங்கேசன் துறை இடைத்தேர்தலுக்குப்பிறகு ஈழத்துத் தமிழர்கள் அனைவரும் இனி தனிதேசம் தான் என்ற அந்தத் தேர்தல் முடிவு நுழைவாயில் அமைத்தற்குப்பிறகு வட்டுக்கோட்டை தீர்மானத்தில் மே 16 ஆம் தேதி 1976 ஆம் ஆண்டு இனி தனித்தமிழ் ஈழமே என்று அறிவித்ததற்குப்பிறகு, இளைய தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்லும் என்றார்.

அந்தப் போராட்டத்தை எவ்வளவு மக்கள் இரத்தம்சிந்தி உயிர்களைக் கொடுத்த போராட்டம் எத்தனை மகத்தான தியாகங்கள். வாழ்க்கையின் மகிழ்ச்சிகளை சுகங்களை வாலிபத்தின் இன்பங்களை வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் அதை எண்ணிபாராது அதைச் சுவட்டைக்கூட சந்திக்காமல் மடிந்துபோனார்களே எத்தனை இளைஞர்கள், எத்தனை இளம்பெண்கள், வாழ்க்கைச் சுகம் எதுவுமே அவர்கள் அறிந்தது இல்லையே.

அப்படி மகத்தான தியாகங்களையும் இரத்தத்தையும் சிந்தி உருவாக்கப்பட்ட ஒன்றை அழிப்பதற்கு நீங்கள் யார்? உபதேசம் செய்கிறார் முதலமைச்சர். அண்ணா திராவிட நாட்டைக் கைவிட்டார் அதைப்போல அங்கு சகவாழ்வு சாத்தியமாகலாம். ஆக தமிழ் ஈழம் என்ற கோரிக்கைக்காக போராடுவது என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று உபதேசம் செய்கிறார். அப்படியானால் இங்கே இருக்கிற தமிழர்கள், தமிழ்நாட்டில் இருக்கிற தமிழர்கள் இந்தியாவில் நடத்தப்படுகிற நிலைமையும் ஈழத்தில் சிங்கள நாய்களின் கரங்களில் சிக்கி அவதிப்படுகின்ற ஈழத்துத் தமிழர்களின் நிலைமையும் ஒன்றா? ஏன் இப்படி தவறான வாதத்தை வைக்கிறீர்கள்.

அப்பொழுதே அண்ணா சொன்னார் காரணங்கள் உயிரோடு இருக்கின்றன என்றார். அதே நிலைமை ஈழத்தில் தமிழர்கள் வதைபடுவதைப்போன்ற நிலைமை இந்த உபகண்டத்தில் ஏற்பட்டால் அண்ணா எந்தக் கொள்கையைக் கைவிட்டாரோ அந்தக் கொள்கை மீண்டும் உயிர்த்து எழும். ஆக இரண்டையும் ஒப்புமைகாட்டிப் பேசுவது தவறு.

ஆகவே, அவர்களின் உரிமைப் போராட்டத்தில் இத்தனை நாடுகளின் ஆயுதபலத்தைக் கொண்டு அவர்களை அழித்தீர்கள். ஆயுதபலம் மட்டும் அல்ல தோழர்களே, வெறும் ஆயுத பலம் மட்டுமல்ல, அத்தனை நாட்டு ஆயுதங்களுக்கும் ஈடுகொடுக்கும் மாவீரர்கள் தான் பிரபாகரன் தலைமையில் இருந்த விடுதலைப்புலி வீரர்கள். ஆனால், உலகம் தடை செய்த ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள். இதுவரை எந்த யுத்தக்களத்திலும் பயன்படுத்ததாத நாசகார ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள்.

ஆயிரம் ஆயிரமாக அலை அலையாக சிங்களப் படைகள் வந்தாலும் எதிர்கொண்டு சின்னாபின்னமாக்கக்கூடிய விடுதலைப்புலி வீரர்கள். புலிப்படைத் தளகர்த்தர்கள் நிமிடநேரத்தில் எலும்பு உடம்பு அனைத்தையும் உருக்கிப் போட்டுவிட்டது. தணலில் உலோகங்கள் உருவாக்கப்படுவதைப்போல, இந்தக் குண்டுகள் பாய்ந்த இடங்களில் சிக்கிய விடுதலைப்புலிகளின் வீரத்தளபதிகளும் வீரர்களும் அப்படியே உருகிப்போனார்கள்.

அதுமட்டுமல்ல, அந்த மண்டலத்தில் இருந்த பிராணவாயு முழுமையாக உறிஞ்சப்பட்டது உடம்பில் காயமேபடாமல் செத்துவிழுந்தார்கள். இரத்தம் சிந்தாமலே செத்துவிழுந்தார்கள். இது தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள். இதுவரை இப்படிப்பட்ட ஆயுதங்களை எவரும் பயன்படுத்தியது இல்லை. இந்த ஆயுதங்கள்தான் பயன்படுத்தப்பட்டன. இதன் விளைவாகத்தான் பின்னடைவு ஏற்பட்டது.

தெர்மாபிலே யுத்தத்தில் போர்புரிந்த 300 ஸ்பார்ட்டா வீரர்களைவிட பிரபாகரனின் வீரர்கள் இன்னும் வீரசாகசம் சாகத்தை நிலைநாட்டினார்கள். ஆகவே, இவ்வளவு கொடூரமான முறையில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை அழிக்கவேண்டும் என்று இந்திய அரசு வகுத்துத் கொடுத்ததன் விளைவாக பன்னாட்டு ஆயுதபலத்தோடு விடுதலைப்புலிகள் போர்க் களத்தில் தோற்கடிக்கப்பட்டாலும் எவ்வளவு அக்கிரமமான முறையில் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன.

தமிழ் பெண்கள் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்து சிசுக்களை எடுத்து தெருவில் வீசுகின்ற கொடுமையினை ஹிட்லர் செய்யவில்லை நாஜிகள் செய்யவில்லை. ஆக மனிதகுல வரலாற்றில் இப்படிப்பட்ட இனக்கொலை இதுவரை நடந்ததே இல்லை.

இங்கு விடுதலை இராஜேந்திரன் சொன்னார் இனி இளைஞர்களிடம் உணர்ச்சி ஊட்டி முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று சொன்னார் தமிழ் ஈழத்தை உருவாக்கி தமிழ் ஈழம் மலர்வதை நம் கண்களால் கண்டுவிட்டுத்தான் இந்த மண்ணில் மறையவேண்டும் என்ற உணர்வோடு நாம் போராடுவோம். இது ஒவ்வொரு தமிழனின் கடமை. தன்மான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழச்சியின் கடமை.

நம் வாழ்நாளில் இந்தப் பூமிப்பந்தில் ஈழத்தமிழனுக்கு ஒரு தேசத்தை நிர்மாணிப்பதற்கு எல்லாவிதத்திலும் தன்னலமற்று, அரசியல் எல்லைகளைக் கடந்து மாச்சர்யங்களைக் கடந்து சுயநலத்துக்கு கடுகளவும் இடம்கொடுக்காமல், நாம் தமிழ் ஈழம் மலர்வதற்கு எல்லாவிதத்திலும் தோள்கொடுப்போம் துணைநிற்போம் என்று சூளுரை மேற்கொள்ள வேண்டிய நாள் இந்தத் திருநாள். இந்த நாள்.

ஏனெனில், சிதறிக்கிடந்த யூதர்களுக்கு அமெரிக்கச் செல்வந்த யூதர்கள் அள்ளிக் கொடுத்தார்களே, நாங்கள் அநாதைகளாகிவிட்டோம் யுத்தக்களத்தில் செத்துமடிகிறோம் எங்களுக்குஉதவிவேண்டும் என்று மோல்டா அம்மையார் வந்தபோது இலட்சக்கணக்கான டாலர் பணத்தை அள்ளிக் கொடுத்தார்களே, ஆயுதங்கள் வாங்குவதற்கு கப்பல்களில் அனுப்பிவைத்தாரே? அப்படி நாங்கள் ஆயுதங்கள் கொடுக்கப் போவதாகச் சொல்லவில்லை. அப்படி நாங்கள் திரட்டிப் பணம் அனுப்பப் போவதாகச் சொல்லவில்லையே?

ஆனால், உலகில் சிதறிக்கிடந்த யூதர்கள் ஒருவன் பேசுவது ஒருவனுக்குத் தெரியாது அந்த மொழி தெரியாது. ஜெர்மனியில் இருந்து போகின்ற யூதனுக்கு செக்கோசுலோவாகியாக்காரன் மொழி தெரியாது. ஆனாலும் யூதர்கள் என்று ஒரு இனத்தில் நின்றுகொண்டு இன்றைக்கும் சர்ச்சைக்குரிய இடம் அதற்குள் நான்செல்லவிரும்பவில்லை. இடம் யாருக்குச் சொந்தம் பாலஸ்தீனியர்களுக்கா? யூதர்களுக்காக?என்று.

ஆனால், கெய்ரோ பல்கலைக்கழகத்தில் சென்று அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா பேசுகிறார் இரண்டு தேசங்கள் பாலஸ்தீனியர்களுக்கும் ஒருதேசம் அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதோடு நிறுத்தவில்லை அமெரிக்கக் குடியரசுத் தலைவர் யூதக்குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டும் என்கிறார். அதைவிட ஈழத்தில் எங்களுக்கு ஆயிரம் மடங்கு நியாயம் இருக்கிறதே.

எங்கள் பூர்வீக மண்ணில் அல்லவா? அவன் குடியேற்றம் அமைத்து இருக்கிறான். தனி தேசிய இனம் தானே, அவர்களுக்கும் ஒரு நாடு அமையவேண்டும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்தக் கோரிக்கையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வோம். தாய்த் தமிழகத்து இளைஞர்களுக்கு அந்த உணர்ச்சியை ஊட்டுவோம். அந்த உணர்வில் மாறுபட்ட கருத்து இருக்கவே முடியாது. கோபித்துக் கொள்வான் ராஜபக்சே என்று தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசுகிறார்.

வெள்ளைக்காரன் கோபித்துக் கொள்வான் என்று கருதியிருந்தால் பகத்சிங் ஆயுதம் ஏந்தி இருக்கிறான் - கோபித்துக் கொள்வான் ஆஷ் துரை என்று கருதினால் வாஞ்சிநாதன் மணியாச்சிக்குப் போயிருக்க முடியாது. கோபித்துக் கொள்வான் வெள்ளைக்காரன் என்று கருதியிருந்தால் நேதாஜி படைதிரட்டி இருக்க முடியாது. கோபித்துக் கொள்வான் வெள்ளைக்காரன் என்று கருதியிருந்தால் அன்றைக்கு விடுதலைப் போராட்டம் நடந்து இருக்க முடியாது.விடுதலைப்போராட்டம் நடத்தினால் வெள்ளையன் இன்னும் கொடுமை செய்வான் என்று கருதியிருந்தால் இந்தியர்கள் என்றைக்கும் பிறவி அடிமைகளாகவே இருந்திருக்கலாம்.

கதைக்கு உதவாததாம் - கோபித்துக் கொள்வாரா? கொடுமை செய்வதனை அவன் குலையை அறுப்பேன் என்று முடிவெடுத்தான் பகத்சிங். எங்கள் இனத்தை அழித்தவனை சங்கறுப்பேன் என்று முடிவு செய்வான் தமிழன். (பலத்த கைதட்டல்)

இனிமேலா கோபிக்கப்போகிறான்? எத்தனை குழந்தைகள் சாகடிக்கப்பட்டனர் - எத்தனை பெண்கள் நாசமாக்கப்பட்டனர் - எத்தனை இளம்பெண்களின் கற்பு நாசமாக்கப்பட்டது எத்தனை பேர் வீடுவாசல் எல்லாம் இழந்து பூர்வீக மண்ணைஇழந்து நாயினும் கேவலமாக நடத்தப்பட்டு கடைசியில் சென்றஇடங்களில் எல்லாம் அவர்கள் விரட்டி விரட்டி அடிக்கப்பட்டு, கொல்லப்பட்டு இப்பொழுது மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்படுகிற நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்களே இனிமேலா அவன் கோபித்துத் துன்பத்தை விளைவிக்கப்போகிறான்?

ஆகவே, தர்பூஃரில் பழங்குடிஇனமக்கள் வதைக்கப்படுகிறார்கள், சூடான் ஆதிக்கத்துக்குள் வதைக்கப்படுகிறார்கள். அதை எடுத்துச் சொன்னால் இன்னும் அக்கிரமத்தைச் செய்வான் இராணுவத்தின்மூலம் ஒமர் அல் பஷீர் என்று தர்பூஃர்க்காரன் அமைதியாக இருக்கிறானா? குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறான். எங்கே சர்வதேச குற்றவாளிக் கூண்டில். தர்பூஃர் இன மக்களை சூடான் நாட்டு இராணுவம் வேட்டையாடியது என்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட ஒமர் அல் பஷீர் என்ற சூடான் அதிபர்மீது இன்றைக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அதேநிலைமையில் இராஜபக்சேவை கூண்டில் நிறுத்தவேண்டிய கடமை இருக்க இந்தக் கொலைபாதகத்துக்குத் துணைபோன இந்திய அரசு ஐ.நா. மன்றத்தில் இராஜபக்கேவுக்கு ஆதரவாக வாக்களிக்கிறது. இன்று நேற்றல்ல, கடந்த ஐந்தாண்டுகளாக இந்த அக்கிரமத்தை செய்து கொண்டு இருக்கிறது. ஆகவேதான் இந்திய அரசு செய்த துரோகங்களை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதோடு முடிந்துவிடவில்லை.

இன்றைக்குச் செய்திகளைப்பார்க்கிறோம் சின்னஞ்சிறு பாலகன் செத்துப்போய் இருப்பதாக நீ புகைப்படம் போட்டிருக்கிறாயே இந்த நெஞ்சம் பதறுகிறதே அதைப் பார்க்க முடியவில்லையே எங்களால் அதைப்போல இந்தச் செய்திகள் வருகிறபோது எத்தனை தமிழர்களின் உள்ளங்கள் நெஞ்சங்கள் கொதிக்கும். மனிதநேயத்தின் உருவமாக திகழ்ந்த செய்திகளை எல்லாம் சொன்னார்.
நானும் அண்ணன் நெடுமாறனும் சொல்கிறோம் பிரபாகரன் உயிரோடு வாழ்கிறார். ஈழ விடுதலைப் போரை முன்னெடுத்துச் செல்வதற்கு உரியநேரத்தில் வருவார் அதே இராஜபக்சே படைகளை பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடவைப்பதற்கு தமிழன் வருவான். அங்கு சிந்தப்பட்ட இரத்தம் வீண்போகாது. முளைக்கின்ற புல்பூண்டுகூட அங்கு தலை வணங்காது அங்கே. இந்த வீராவேச சூறாவளிப் பேச்சால் பயம் ஏதும் இல்லை என்று சுட்டிக்காட்டுகிறார் சட்டமன்றத்துக்குள் சண்டபிரசண்டமாய் முதல்மந்திரி கலைஞர் கருணாநிதி .

இது வெறும்பேச்சல்ல நெஞ்சில் இருந்து பீறிட்டு வருகிற ஆவேச உணர்ச்சி. எங்கள் இரத்த சுழற்சியோடு கலந்து இருக்கிற தமிழ் ஈழ மக்களைக் காக்கவேண்டும் அவர்களுக்கும் ஒரு தனிநாடு என்று அமையவேண்டும் என்று எங்களை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கக்கூடிய விடுதலை உணர்ச்சி.
ஆகவே தமிழகத்தில் இருக்கிற இளைஞர்கள் உள்ளம் தமிழ் ஈழம் மலர்வதற்கு துணை செய்யட்டும். இவ்வளவு அக்கிரமங்கள் செய்து கொண்டு இருக்கிற ராஜபக்சே சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படவேண்டும். மனிதகுலத்தின் மனசாட்சி தட்டி எழுப்பப் படவேண்டும். மனிதகுலத்தின் காதுகள் செவிடாகிப் போய்விட்டன - கண்கள் குருடாகி போய்விட்டன என்று நாம் கடமையை விட்டுவிட முடியாது.

அனைத்துலகத்தின் மனசாட்சியும் தட்டி எழுப்பப்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் பிரச்சனை ஒரு குறிப்பிட்ட இனத்தின், பகுதியின் பிரச்சனையல்ல. அது அகிலத்தின் மனிதாபிமான பிரச்சனை. மனித உரிமைப் பிரச்சனை என்றவகையில் இந்தப் பிரச்சனையை நாம் முன்னெடுத்துச் செல்வதற்கு உரிமைகாண்போம். அந்தவகையில் இந்த நூல் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கத்தக்கதாக ஆதாரங்களோடு வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு நாங்கள் தொடர்ந்து போராடுவோம் கேலி பேசுகிறவர்கள் கேலிபேசட்டும். கருத்துப் படங்களைக் கிண்டல்செய்து போடுகிறவர்கள் போடட்டும் அதை எல்லாம் நாம் அலட்சியம் செய்வோம்.

ஈழவிடுதலை உணர்வு என்பது நம்முடைய சிந்தைகள் ஒவ்வொன்றிலும் இரண்டறக் கலந்தது.
நம் வாழ்நாளில் தமிழ் ஈழம் மலரவேண்டும் என்பதற்காகவே நம்மால் முடிந்த அளவுக்கு - அவர்களைப்போல தியாகத்தை எவரும் செய்யஇயலாது அப்படிப்பட்ட தியாகங்கள் வீண்போகக்கூடாது ஈழத் தமிழ் இனம் தனித் தமிழ் தேசத்தை அமைக்கின்ற வகையில் அவர்களுக்கு உறுதுணையாக நாம் குரல் கொடுக்க மக்களின் ஆதரவைத் திரட்ட அனைத்து வழிகளிலும் ஈடுபடுவோம் என்று சூளுரைமேற்கொள்வோம் என்றுகூறி, இந்த அரங்கத்துக்கு வந்திருக்கிற தமிழ்மக்கள் அனைவருக்கும் நன்றியைக்கூறி வெல்க தமிழ் ஈழம் மலர்க தமிழ் ஈழம் எனக்கூறி விடைபெறுகிறேன் வணக்கம்.

Read more...

தமிழர்கள் மீண்டும் ஈழத்தை வெற்றி கொள்வார்கள்

வரும் காலத்தில் இலங்கையில் வலுவான தமிழர்கள் உருவாகி மீண்டும் ஈழத்தை வெற்றி கொள்வார்கள் என்று புதுச்சேரி அரியாங்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பொதுச் செயலர் வைகோ கூறினார்.
மேலும் அவர் பேசியது:


1993-ம் ஆண்டு மதிமுக ஆரம்பித்த நாள் முதல் கடந்த 16 ஆண்டுகளாக திமுகவுடன் தர்மயுத்தம் நடத்திக் கொண்டு வருகிறோம். நமது கட்சிக் கோட்டையை எஃகு கோட்டையாக கட்டுவோம்.
ஈழத்தமிழர் அவலம் கண்டு உலகத்தமிழர் உள்ளம் சுக்குநூறாக நொறுங்கிக் கிடக்கிறது.
இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் முள்வேலியில் முடங்கிக் கிடக்கின்றனர். உள்நாட்டில் அகதிகளாக வாழ்கின்றனர். ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த தமிழர்களை நீக்கி விட்டு சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். வருங்காலத்தில் வலுவான தமிழர்கள் உருவாகி ஈழத்தை வெற்றி கொள்வார்கள். சிந்திய ரத்தம் வீண் போகாது.
ராஜபக்ஷேவுக்கு தமிழ்நாட்டில் சிலர் ஆதரவு தரலாம். எங்களது நோக்கம் சிங்கள இன வாதத்தை தொடர்ந்து எதிர்ப்பதுதான்.
கருணாநிதி தன் மகனுக்கும் உறவினர்களுக்கும் பதவி கொடுத்து வருகிறார். அதனால் கட்சியின் உயிர்த்தன்மை செத்துக் கொண்டு வருகிறது.
புதுச்சேரியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வலுவான மதிமுக அமைப்பை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.புதுச்சேரி மாநில பொறுப்புத் தலைவர் நா.மணிமாறன், காரைக்கால் மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் சோம.அம்பலவாணன், மாநிலப் பொருளாளர் திண்டிவனம் மருத்துவர் இரா.மாசிலாமணி, துணைப் பொதுச்செயலர் மல்லை இ.சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Read more...

இராஜபக்சே கருணாநிதி இடையேயான உறவை மேம்படுத்த கனிமொழி இலங்கை பயணம்...


இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் கருணாநியின் தவப்புதல்வியுமான கனிமொழி தலைமையிலான குழு ஒன்று விரைவில் இலங்கை வரவுள்ளது. இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இந்த பயணம் இராஜபக்சே கருணாநிதி இடையேயான உறவை மேம்படுத்துவதாகவே அமைந்துள்ளது.


கவிஞர் கனிமொழி இலங்கைத் தமிழர் பிரச்சினையை தமிழர்கள் அனைவரையும் கொன்றொழிப்பதன் மூலம் தீர்வு காண்பதில் கருணாநிதியைவிடவும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இலங்கையில் சுமார் மூன்று இலட்சம் தமிழர்க்ள நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இலங்கைக்கு வருகைதரும் அவர் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்களைப் பார்வையிட திட்டமிட்டுள்ளார். முதலில் தனிப்பட்ட விஜயமாக மேற்கொள்ள நினைத்திருந்தார். அவ்வாறான பயணம் தமிழின துரோகத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும் என்பதால் அதனை மூடி மறைத்து, பின்னர் தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கனிமொழியை அதிகாரபூர்வமாக அரசு சார்பில் அனுப்புவது என்று முடிவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாரிசு அடிப்படையில் தகுதியற்றவர்களையெல்லாம் தலைமை பொறுப்பிற்கு அமர்த்தும் கட்சி தி.மு.க என்பதால் வெறும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற போதிலும் தமிழக அரசின் சார்பில் ஒரு சிறப்புக்குழ உருவாக்கப்பட்டு அதற்கு தலைமையேற்று கனிமொழி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்றும், இந்திய நாடாளுமன்றத்தின் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவுக்கு தலைமையேற்று வருவார் என்றும் இருவிதமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனிமொழியுடன் தமிழகத்திலிருந்து மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்குழுவில் இடம்பெறக்கூடும் என்றும் இருவரில் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, காங்கிரஸ் சார்பில் இரண்டு எம்.பிக்ககள் உட்பட மொத்தம் எட்டுப் பேர் கொண்ட குழு விரைவில் இலங்கைக்கு செல்லும் என்று தெரிகிறது.

நலன்புரி முகாமகளைப் பார்வையிட்ட பின்னர் அக்குழுவினர் சார்பில் இந்திய மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் அறிக்கைகள் அளிக்கப்படும் என்றும் அந்த அறிக்கைகளின் அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் மேலுதம் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.

தற்போது மத்திய பட்ஜெட்டில் சிங்களவனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 500 கோடி ரூபா நிதியுதவி கனிமொழியின் பயணத்தின் பின்னர் அதிகரிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more...

ஈழத் தமிழர்களுக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்காமல் போனதற்கு இந்திய அரசே காரணம்: பழ. நெடுமாறன்


ஈழப் பிரச்சனையில் தமிழர்களுக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்காமல் போனதற்கு மத்திய அரசே காரணம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டினார்.

சென்னையில் ஜோசப் கென்னடி எழுதிய ‘அநீதியின் காவலர்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் தோடர்ந்து கூறியதாவது:-

ஈழத் தமிழர் பிரச்சினையில் பின்னடைவு ஏற்பட்டதற்கு சர்வதேச அளவில் ஆதரவை திரட்ட முடியாததே காரணம். இதற்கு மத்திய அரசின் முட்டுக்கட்டையும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான அதன் நிலைப்பாடும் தான் காரணம்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் இந்த பிரச்சினை உலக அளவில் பேசப்பட்டது. ஆனால், இதில் உலக நாடுகளின் ஆதரவை திரட்டுவதற்கு இந்திய அரசு தான் முட்டுக்கட்டை போட்டது.

இந்தியாவின் பிராந்திய நலனுக்கு உட்பட்ட பிரச்சினையாக ஈழத் தமிழர் பிரச்சனையை உலக நாடுகள் கருதுகின்றன. எனவே தான் இந்த பிரச்சினையில் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக நிலையெடுத்தன.

எனவே ஈழத் தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்ட வேண்டும். அதன் மூலம் தான் இந்த பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்ட முடியும் என்றார் நெடுமாறன்.

இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில்,

ஈழத் தமிழர் விடுதலைக்கு எதிராக சீனாவும், கியூபாவும் செயல்பட்டதற்கு நாம் உண்மை நிலைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லாததே முக்கிய காரணம் ஆகும்.

இதன் காரணமாக கொலையாளிக்கு ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் கொலை செய்யப்பட்டவர்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளார்கள்.

இந்தப் பிரச்சினையில் உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை திரட்டுவதற்கு நாம் தொடர்ந்து பாடுபடுவோம். ஈழ விடுதலைப் போர் இன்னும் முடியவில்லை என்றார்.

Read more...

தேசிய பாதுகாப்பு சட்டத்தை நெறுக்கியது ம தி மு க

இந்திய ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மதிமுகவினர் உள்ளிட்ட 5 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் வழியாக இலங்கைக்கு இந்திய அரசு ஆயுதங்களை கொண்டு செல்வதாக கிடைத்த தகவலை அடுத்து மதிமுக, பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த சிலர் நீலாம்பூர் பை-பாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனங்களை மறித்தனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்கல் ராணுவ வாகனங்களை சேதப்படுத்தினர். இதையடுத்து அந்த சம்பவத்தில் ஈடுபட்ட 46 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பீளமேடு மதிமுக மாணவர் அணி அமைப்பாளர் சந்திரசேகன் உள்ளிட்ட 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில் இதை எதிர்த்து சந்திரசேகரன் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு மனு செய்தார். அவரது மனுவை பரிசீலனை செய்த ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Read more...

தொடரும் தமிழனப்படுகொலை...


இலங்கையின் வன்னிப் பகுதியில் உள்ள மாணிக் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளில் ஒவ்வொரு வாரமும் 1,400 பேர் செத்துக்கொண்டிருக்கின்றனர் என்று அவர்களுக்கிடையே பணியாற்றிவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தங்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் வந்துள்ளதாக லண்டனில் இருந்து வெளிவரும் தி டைம்ஸ் நாளேடு கூறியுள்ளது.

போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவம் நடத்திய கடும் தாக்குதலையடுத்து மக்கள் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வெளியேறிய இரண்டே முக்கால் இலட்சம் மக்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மாணிக் பண்ணை என்றழைக்கப்படும் நலன்புரி முகாம்களில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


அங்கு அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், வயிற்றுப் போக்கு காரணமாகவும், தூய குடி நீர் இன்மையால் தண்ணீரால் பரவும் வியாதிகளாலும் பாதிக்கப்பட்டே பெரும்பான்மையானவர்கள் உயிரிழக்கின்றனர் என்று தங்களுடைய பெயரை குறிப்பிட விரும்பாத தன்னார்வ அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் தங்களுக்குத் தெரிவித்ததாக தி டைம்ஸ் கூறியுள்ளது.

தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இந்த முகாம்கள் நலம்புரி முகாம்கள் (welfare camps) என்று கூறப்பட்டாலும், தேவையான அடிப்படை வசதிகள் அளிக்கப்படாத, போதுமான அளவிற்கு உணவு வழங்கப்படாத இம்முகாம்கள் இரண்டாவது உலகப் போரின் போது நாஜிக்கள் நடத்திய வதை முகாம்களாகவே (concentration camp) உள்ளன என்று கூறியுள்ள அந்த நாளிதழ், பெண்கள், வயதானவர்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு மிகக் குறைவாகவே உணவுப் பொருட்களும், மற்ற நிவாரணங்களும் அளிக்கப்படுவதாகவும், அகதிகளுக்கு உதவிவரும் தன்னார்வ அமைப்புக்களை தொடர்ந்து முகாம்களுக்குள் அனுமதிப்பதில்லை என்றும், கடந்த வியாழக் கிழமையன்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் முகாம்களுக்கு அனுமதிக்க இராணுவம் மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளது.

கொழும்புவில் இருந்து இயங்கிவரும் சர்வோதயா சிராம்தான சங்கமயா எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம், பல பத்தாயிரக்கணக்கான சிறுவர்கள் சத்துணவின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.

“மாணிக் முகாம்களில் மட்டும் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர், இவர்களில் பலர் நோயாலும், போரில் பட்ட காயங்களினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 முதல் 20 விழுக்காட்டினர் சத்துணவு இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ள இத்தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் மருத்துவர் வின்ய ஆரியரத்னா, “சர்வதேச தரத்தின் படி 20 பேருக்கு ஒரு கழிவறை இருக்க வேண்டும், ஆனால் இங்கு 70 பேர் ஒரு கழிவறையை பகிர்ந்து கொள்ளும் நிலை உள்ளது என்று கூறியுள்ளார்.


முகாம்களில் கழிவறை வசதியும், கழிவு நீர் போக்கு வசதிகளும் மேம்படுத்தப்படாமல் இந்த நிலைத் தொடருமென்றால் தென்மேற்கு பருவமழை துவங்கும் போது நோய் பரவும் அபாயம் உருவாகும் என்று வேர்ல்ட் விஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் சுரேஷ் பார்லட் எச்சரித்துள்ளார்.

மானிக் முகாமில் தங்களுடைய பணியை குறைத்துக் கொள்ளுமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை சிறிலங்க அரசு கேட்டுக் கொண்டுள்ளதையடுத்த இந்த விவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது என்றும், வியாழக் கிழமை இரவோடு தங்களின் இரண்டு அலுவலகங்களை செஞ்சிலுவைச் சங்கம் மூடிவிட்டது என்றும் டைம்ஸ் செய்தி கூறுகிறது. இந்த அலுவலகங்களில் ஒன்று, திருகோணமலையில் இயங்கி வந்தது. அங்கு போரினால் காயமுற்ற 30,000 பொது மக்கள் கடல் வழியாக வெளியேற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அலுவலகம் மட்டக்களப்பில் இயங்கி வந்தது. இலங்கையின் கிழக்குப் பகுதியில் கடத்தல்களும், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளும் நிகழ்ந்து வருவது தொடர்பாக புகார் எழுந்ததையடுத்தே அங்கிருந்தெல்லாம் இப்படிப்பட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசு வெளியேற்றுகிறது என்று டைம்ஸ் செய்தி கூறியுள்ளது.

Read more...

சிங்களவனுக்காக கலைஞர் காணும் கனவு பலிக்காது - வைகோ


'சிங்களவர்களைக் கண்டு தமிழகம் நடுங்குவது' போன்ற தோற்றத்தை உருவாக்கி விட்டது. 'நம்மைக் கண்டு தமிழக முதல்வரே பயப்படுகிறார்' என சிங்கள வெறியர்கள் கொண்டாடக்கூடிய சூழல், கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டு விட்டது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'விகடன்' குழுமத்தின் 'ஜூனியர் விகடன்' வாரமிருமுறை இதழ் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில் மேலும் கூறியதாவது:

''திராவிட நாடு கோரிக்கையைப் போலவே தனி ஈழக் கோரிக்கையையும் தவிர்த்து விட்டு, சிங்கள அரசுடன் அனுசரித்து நடந்து கொள்வதே நல்லது என முதல்வர் கருணாநிதி சொல்லி இருக்கிறாரே?''


''திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன எனச் சொன்னார் அண்ணா. அது மட்டுமல்ல... திராவிட நாடு கோரிக்கையையும் ஈழக் கோரிக்கையையும் ஒப்பிடுவதே தவறு. இங்கே நமக்கு சம உரிமை இருக்கிறது. ஆனால், ஈழத்தில் குறைந்தபட்ச அடிப்படை சுதந்திரங்கள்கூட அப்பாவி தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது. தமிழர்களின் கலாசாரம், வழிபாடு, இலக்கியம் என அனைத்து அடையாளங்களுமே அழித்தொழிக்கப்பட்டு விட்டது. ஈழத்தில் நடந்தேறிய அத்தனை கொடூரங்களையும் கொட்டக்கொட்ட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கலைஞர், இப்போது சிங்களர்களோடு தமிழர்களை அனுசரித்து வாழச் சொல்கிறார். ஆயிரம் ஆயிரமாக உயிர்களைக் கொடுத்து, மலை மலையாக சடலமாகி... ஈழத்து மண்ணில் கலந்து கிடக்கும் ஆத்மாக்கள்கூட கலைஞரின் வார்த்தைகளைக் கேட்டு கலங்கிப் போயிருக்கும். என் தமிழினத்தை அழித்தவனை கூண்டிலேற்றச் சொல்ல வேண்டிய கடமைமிக்க முதல்வர் பதவியில் உள்ள ஒருவரே, சிங்களவனிடம் மண்டியிடச் சொல்லும் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது..?

'தமிழர் பூர்வீகத் தாயகத்தை ஒருபோதும் அமைய விடமாட்டேன்' என ராஜபக்ச இப்போதும் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய குரூர வெறியை உலகுக்கு அம்பலமாக்கி, அவரைக் கூண்டிலேற்றி, 'இவர்தான் ஹிட்லரைவிடகொடூரமான இனவெறியர்' என்ற உண்மையை அடையாளப்படுத்த வேண்டிய கடமை, தமிழர்கள் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் கலைஞரின் வார்த்தைகள், 'சிங்களவர்களைக் கண்டு தமிழகம் நடுங்குவது' போன்ற தோற்றத்தை உருவாக்கி விட்டது. 'நம்மைக் கண்டு தமிழக முதல்வரே பயப்படுகிறார்' என சிங்கள வெறியர்கள் கொண்டாடக்கூடிய சூழல், கலைஞரால் உருவாக்கப்பட்டு விட்டது. தமிழ் வரலாற்றில் மன்னிக்க முடியாத மற்றுமொரு துரோகத்தை கலைஞர் கருணாநிதி செய்து விட்டார்.

கலைஞரின் மதுரமான எழுத்துகளும் மயக்க வைக்கும் பேச்சும் தமிழினத்தை அழிக்கவே முழுதாகப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்யப் பயன்படும் பதவி என்ற கத்தியை கொலை செய்யப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் கலைஞர். நான் ஒருபோதும் கலைஞரின் எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் தவறாகச் சொன்னதில்லை. ஆனால், இதயத்து நரம்பு தெறிக்க தாங்க முடியாத வலியோடு இப்போது சொல்கிறேன்... நாளைய தமிழ் சமுதாயம் தமிழினத்துக்கு துரோகம் செய்தவராகவே கலைஞரை வரிசைப்படுத்தி வைத்திருக்கும்!'' என்றார் அவர்.

Read more...

புலிகள் கொடுத்திருக்கும் புதிய அடி

வாங்கிய அடிக்கு வாய்விட்டு அலறக்கூட முடியாமல் உள்ளுக்குள்ளேயே முனகிக் கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம். முற்றிலுமாக அழித்துவிட்டோம் என்று கொக்கரித்த இலங்கை அரசுக்கு இடுப்பு சுளுக்கு ஏற்படும் அளவுக்கு புலிகள் கொடுத்திருக்கும் புதிய அடிதான் சிங்கள ராணுவத் தலைமைக்கு உள்காயத்தை உண்டாக்கியிருக்கிறது.

இறுதி கட்டப் போரின்போதே யுத்த யுக்தியாக ஆயுதங்களேந்தி அணிஅணியாக அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்தது விடுதலைப்புலிகளின் படையணி. மாதக்கணக்கில் தாங்கக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் காட்டிலேயே முகாமிட்டிருந்தனர். இந்நிலையில்தான், காட்டுப்பகுதியில் புலிகள் முகாமிட்டிருப்பதை அறிந்து ஜூன் 2-வது வாரத்தில் சிங்கள ராணுவத்தினர் 150 பேர் தாக்குதல் நடத்த வந்தனர். ஆரம்பகட்டத்தில் எந்த எதிர்ப்பையும் அவர்கள் எதிர்கொள்ளவில்லை. பலவீனமான நிலையில் காட்டுக்குள் புலிகள் பதுங்கி யிருப்பதாக நினைத்து முன்னேறிச் சென்றது ராணுவம். நெடுங்கேணி என்ற பகுதிக்குச் செல்லும் வரை ராணுவத்தினர் விசிலடித்துக் கொண்டுதான் போனார்கள். அதன்பிறகுதான்... ... ...

காட்டுப்பகுதிக்குள் நுழைந்த ராணுவத்தினர் 150 பேரையும் சுற்றி வளைத்தனர் புலிகள். இது விடுதலைப் புலிகளுக்கேயுரிய தனித்துவமான போர் யுக்தியாகும். ராணுவத்தினரை முன்னேற விடுவதுபோல போக்கு காட்டி, சரியான தருணத்தில் அவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துவது புலிகளின் அசாத் திய போர் முறை. அதன்படி நெடுங்கேணியில் சிக்கிய ராணுவத்தினர் மீது புலிகள் கடுமை யான தாக்குதல் நடத்தினர். அவர்களிட மிருந்த ஆயுதமும், சரியான இலக்கும், விடுதலை உணர்வும் சிங்கள ராணுவத்தை சிதறடித்தன. முன்வரிசைகளில் இருந்த ராணுவ வீரர்களின் உயிரற்ற உடல்கள் பொத் பொத்தென தமிழீழக் காடுகளில் விழ, அடுத்த வரிசைகளிலிருந்து ராணுவத்தினர் சிதறி ஓடினர். அவர்களில் பலர், புலிகள் வைத்திருந்த கண்ணி வெடிகளில் சிக்கி பலியானார்கள். சிங்கள ராணுவம் தப்பமுடியாதபடி படை வளையம் அமைத்த புலிகள், பல திசைகளிலிருந்தும் தொடர்ச்சியாக நடந்த தாக்குதலில் 125-க்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் உயிரை விட்டனர். எஞ்சியவர்களில் பலருக்கும் பலத்த காயம். நடை பிணங்களாகத்தான் காட்டிலிருந்து தப்பியுள்ளனர்.

நெடுங்கேணி தாக்குதலை நம்மால் நெடுநாளைக்கு மறக்க முடியாது என்ற கருத்து ராணுவ வட்டாரத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கும் மேலாக புலிகள் செயல் பாட்டுடன் இருப்பதையும் வலுவான ஆயுத பலத்துடன் அவர்கள் இருப்பதையும் நேரில் கண்டுவிட்ட ராணுவம் மிரட்சியின் உச்சத் தில் இருக்கிறது. இலங்கை அதிபர் ராஜ பக்சே, ""உலகத்தை நம்பவைப்பதற்கு அரசுத் தரப்பிலிருந்தும் ராணுவத் தரப்பிலிருந்தும் நாம் பல கதைகளை விடலாம். ஆனால் விடுதலைப்புலிகளை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது'' என்று எச்சரிக்கையான குரலில் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில், இந்த பலத்த அடி பற்றிய தகவல் வெளியே கசிந்துவிடக் கூடாது என பொத்தி வைத் துள்ளது ராணுவத் தலைமை.

ஈழத்தின் காட்டுப் பகுதி களுக்குச் செல்லும் ராணுவத் தினரின் உயிருக்கு உத்தரவாத மில்லை என்கிற அளவுக்கு உக்கிரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் நாட்டின் விடுதலைப் போராட்டத்தை காட்டிலிருந்து நடத்தும் புலிகள். நெடுங்கேணி பகுதியில் மட்டுமின்றி, பல காடுகளிலும் புலிகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேரடித் தாக்குதலிலும் கண்ணிவெடி களாலும் பலியாகும் ராணுவத்தினரின் எண்ணிக்கையை மறைப்பதிலேயே குறியாக இருக்கும் சிங்கள அரசு, தமிழர்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தனது படையைப் பாதுகாத்துக் கொள்ள வடக்கு வசந்தம் என்ற திட்டத்தை செயல்படுத்த தீவிரமாகிவிட்டது.

தமிழர் பகுதிகளில் உள்ள காடுகளை அழித்து அங்கே விளை நிலங்களை உருவாக்குவது என்பதே "வடக்கு வசந்தம்' திட்டமாகும். காடுகளை அழிப்பதன் மூலமாக விடுதலைப்புலி களை அழிக்க முடியும் என நினைக்கிறது இலங்கை அரசு. ஆனால், காட்டுக்குள் நுழைந்தால் புலிகள் கடுமையான தாக்குதல் நடத்துவதால், "வடக்கு வசந்தம்' திட்டத்திற்காக மலையகத் தமிழர்களான தோட்டத் தொழிலாளர்களையும் தமிழகத்தின் அகதி முகாம்களில் இருப்பவர்களையும் கொண்டு செல்வதற்கு ராஜபக்சே அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் தமிழகத் தமிழர்களுக்கும் தங்கள் செலவில் விசா எடுத்து அழைத்துச் செல்ல திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. தமிழர்களை நம்பச் செய்வதற்காக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாத னை "வடக்கு வசந்த'த்தின் ஆலோசகராகவும் நியமித்துள்ளது.

உரிமைகள் மறுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய தொழில் வாய்ப்பு வழங்குவதாக வெளியுலகுக்கு காட்டி, அவர்களை காடுகள் அழிப்பு திட்டத்தில் இறக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன. இதன் மூலமாக காட்டுப் பகுதிகளில் உள்ள கண்ணி வெடிகளில் சிங்கள ராணுவத்தினர் சிக்காமல், தமிழர்களை உயிர்ப்பலி கொடுத்து, தமிழர்களின் விடுதலைக்காகப் போராடும் புலிகளையும் அழிக்கலாம் என கணக்குப் போட்டுள்ளது ராஜபக்சே அரசு.

காடு அழிப்பில் தமிழர்களை பலி கொடுப்பதுடன் காட்டில் உள்ள விடுதலைப்புலிகளின் நடமாட்டத்தை அழிக்க இந்தியாவின் நவீன ரேடார் உதவி தேவை என்பது பற்றியும் சிங்கள அரசும் ராணுவமும் ஆலோசித் துள்ளது. அதன் அடுத்த கட்ட மாகத்தான் ராஜ பக்சேவின் சகோதரர் கள் டெல்லிக்கு விசிட் அடித்தார்கள் என்கிற கொழும்பு வட்டாரத்தினர், கோத்தபய ராஜ பக்சேவும் பசில் ராஜபக்சேவும் இந்தியா பறந்ததன் நோக்கம் இதுதான். தங்களின் திட்டத்திற்கு ஒப்புதலும் உதவியும் பெறுவதற்காகத்தான் இந்திய அரசின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்தனர்.

இந்தியாவின் ஒத்துழைப்பு நிச்சயமாகக் கிடைக்கும் என்று கொழும்பு திரும்பியதும் ராஜபக்சே விடம் சகோதரர்கள் தெரிவித்திருக் கிறார்கள் என்பதுதான் எங்களுக்கு கிடைத்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவல் என்கிறார்கள்.
இந்திய ரேடார்களின் உதவி யுடன் காட்டில் உள்ள புலிகளின் மீது ரசாயன குண்டுகளை வீசிக் கொல்ல வும், காடு அழிப்பில் ஈடுபடும் தமிழர்களை கண்ணிவெடிகளில் பலி கொடுக்கவும் "வடக்கு வசந்தம்' என்ற பெயரில் புதிய திட்டத்தை உருவாக்கி யுள்ள ராஜபக்சே அரசுக்கு புதிய தாக்குதல்கள் மூலமாக கிலியை உண்டாக்கியிருக்கிறார்கள் புலிகள்.
-- பொன்ராஜ் மதியழகன் ---

Read more...

கரும்புலி

Read more...

மீண்டும் போர்! ஓயாத புலிகள்! அதிர்ச்சியில் சிங்கள ராணுவம்

இன்று மாலை தமிழீழ விடுதலை புலிகளின்.... நகர்வு..... வேவு..... படையணிகள் நகர்ந்து சென்று கொண்டிருந்த போது ஒட்டிசுட்டான் பகுதியில் இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலை புலிகளின்.... நகர்வு..... வேவு..... படையணிகளுக்கிடையில் எதிர்பாராத‌ கடுமையான சமர் இடம் பெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.தமிழீழ விடுதலை புலிகளின்.... நகர்வு..... வேவு... .படையணி அவ்விடத்தை விட்டு சென்றதை தொடர்ந்து சிறிலங்கா அரச படையினரால் அப்பகுதிகளை நேக்கி பல முனைகளில் இருந்து கடுமையான ஆட்லறி பிரியேகம் மேற்கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன.வவுனியா மாவட்டத்தில் இந்த செய்தி நேற்று தொடக்கம் மக்களால் பேசப்படுவதாக ஈழதேசம்.கொம் நிருபர் தெரிவித்தார்.
இந்த செய்தியை ஈழதேசம்.கொம் இணையத்தால் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

புலிகள் தாக்கியதில் இலங்கை ராணுவ வீரர் ஒருவர் பலி

இலங்கை மட்டக்களப்பு அருகே விடுதலைப் புலிகள் தாக்கியதில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மட்டக்களப்பு கடலோரப் பகுதி அருகேயுள்ள கீரங்குளம் என்னுமிடத்தில் இச்சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.காயமடைந்த 2 ராணுவ வீரர்களும் விடுதலைப் புலி ஒருவரும் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இத்தகவல்கள் இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

Read more...

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP