ராம் அவர்களின் உரைக்கு பழ. நெடுமாறன் ஜயா கடும் கண்டனம்

விடுதலைப் புலிகளின் இயக்க முன்னாள் தளபதி ராம் என்பவர் பெயரால் முன்னுக்குப் பின் முரணாகவும் குழப்பம் நிறைந்ததுமான ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை புகழ்வது போல கூறி அவரைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அறிக்கை அமைந்துள்ளது. இவ்வறிக்கை சிங்கள இராணுவ நிர்பந்தத்திற்குள் சிக்கியிருக்கும் ஒருவரின் அறிக்கையாக காட்சித் தருகிறதே தவிர பிரபாகரனின் தலைமையில் நம்பிக்கைக் கொண்டுப் போராடிய ஒரு போராளியின் அறிக்கையாக அமையவில்லை.
ஈழப் போர் முடிந்து 7 மாத காலமாக வாயையே திறக்காத ராம் இப்போது திடீரென குழப்பமான அறிக்கைக் கொடுப்பதின் நோக்கம் என்ன? உலகத் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்தும் உளவியல் ரீதியான போரில் ஓர் ஆயுதமாக ராம் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பிரபாகரன் மரணமடைந்து விட்டதாகவும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்க வேண்டுமென செல்வராசா பத்மநாபன் 7 மாதத்திற்கு முன் அறிவித்த போது உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அதை ஏற்கவும் இல்லை. கடைப்பிடிக்கவும் இல்லை. மாறாக பிரபாகரன் மீது நம்பிக்கை வைத்து கொதித்தெழுந்தனர். உலக நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் தமிழர்கள் எழுச்சிமிக்கப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார்கள். சிங்கள அரசு அப்பாவி தமிழ் மக்களைப் படுகொலை செய்ததை உலக நாடுகள் கண்டிப்பதற்கு முன் வந்தன. ராஜபக்சேயும் அவருடைய கூட்டாளிகளையும் போர்க் குற்றவாளிகளாக விசாரிக்க வேண்டுமென்ற குரல் வலுத்தது. இதை திசைத் திருப்பவும் உலகத் தமிழர்களின் எழுச்சியை அடக்கவும் சிங்கள அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது. இந்த சதிக்கு ராம் போன்றவர்கள் துணை போனது வெட்கக் கேடானதாகும்.

மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்க தக்கத் தருணத்தையும் தலைவரின் கட்டளையையும் எதிர்பார்த்து மறைந்திருக்கும் போராளிகளையும் மறைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களையும் வெளிக் கொணரவும் அவர்களின் மனஉறுதியை சீர்குலைக்கவும் இத்தகைய பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த பிரச்சாரத்தைக் கண்டு உலகத் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.
புலிகள் சார்பில் அறிக்கைக் கொடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. அக, புற சூழ்நிலைகள் கனியும் போது பிரபாகரன் வெளிப்பட்டு அறிக்கைத் தருவார்.

சிங்கள இராணுவ வெறியர்களால் சீரழிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் கடமை உலகத் தமிழர்களுக்கு உண்டு என்பதை ஒரு போதும் மறவாமல் நம்மாலான அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டிய வேளையில் நம்மை திசைத் திருப்பும் வகையில் திட்டமிட்டு வெளியிடப்படும் அறிக்கைகளைக் கண்டு யாரும் குழப்பமடைய வேண்டாமென வேண்டிக்கொள்கிறேன்.

இந்திய - சிங்கள உளவுத் துறைகள் தொடர்ந்து தமிழர்களை குழப்புவதற்காக நடத்தும் உளவியல் போரை உறுதியாக எதிர் கொள்ள நாம் தயாராவோம். இந்த போரில் ஏற்பட்டப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கும் முன்னெடுப்பதற்கும் பிரபாகரன் வழிகாட்டுவார் என்ற உறுதியான நம்பிக்கையோடு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைத் தொடர்ந்து ஆற்றுவதற்கு தயாராகும்படி உலகத் தமிழர்களை வேண்டிக் கொள்கிறேன்.

இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து அனைவரும் ஒன்று பட்டு நின்று போராடுவதுதான் மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கமாகும்.

Read more...

தமிழீழம் அடுத்த வல்லரசாக உருவாகும் என்ற அச்சத்தில் உலகமே ஒன்றுசேர்ந்து அதனை அழித்தது: கனடாவில் சீமான்

“பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் செல்லுமானால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான-தூய்மையான-நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரசென்ற பெருமையை ஈழத்தமிழன் பெற்றுவிடுவான் என்ற பயம்.ஊழலில்லாத தமிழீழத்திற்குப் பயந்த ஊழல்மிக்க ஒரு அரசாட்சி, பிரபாகரன் என்ற மாமேதை அழிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது என்று செந்தமிழன் சீமான் கனடா ஸ்காப்ரோவில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் தெரிவித்தார்.

“இத்தாலியிலே பிறந்த சோனியா காந்தியை அன்னை என்று மொழியலாம், பிரபாகரனை நான் அண்ணன் எனக் கூறினால் என்னைப் புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள். கற்பழித்தவன், கொலைசெய்தவன், எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத-கொலைசெய்யாத, போர்க்கைதிகளைப் பாதுகாத்த புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச் சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னென்று கூறுவது” – என்று கேள்வி எழுப்பிய சீமான் -

“ஈழத்தமிழனுக்கு ஏற்ற ஒரு அரசாட்சி எம்.ஜீயாருக்குப் பிறகு தமிழ்நாட்டில் வரவே இல்லை. விடியலுக்குப் போராடிய விடுதலைப் புலிகள் எதிரியோடு பொருதியிருந்தால் இதுவரைக்கும் வென்றிருப்பார்கள். ஆனால், ஊழல் நிரம்பிய தமிழ் எதிரிகளோடும் அவர்களுக்குப் பொருத வேண்டியிருந்தது. ஆனால், இந்த வரலாறு தமிழனுக்குத் தோல்வி இல்லை. துடித்து எழும். தமிழீழத் தேசம் பிறக்கும்” – என்று தெரிவித்தார்.

எழுச்சியுடன் நடைபெற்ற நிகழ்வு

சாவின்றி உயிர்வாழும் சத்திய தேவதைகளாம் மாவீரர் வணக்கநாள் முதல்நாளாக நேற்று புதன்கிழமை ரொறன்ரோ பெருநகரத்தில் வெகு உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

ஸ்காபரோ நகரத்தில், கென்னடி-பிஞ் சந்திப்பில், பிஞ் வீதியில் அமைந்துள்ள மெற்றோபொலிற்ரன் மண்டபத்தில் அரங்கு நிறைந்த மக்கள் வெள்ளத்தில், ‘செந்தமிழன்’ சீமானின் சிறப்பு வருகையோடும் ஒரு எழுச்சி விழாவாக, மாவீரரை உள்ளத்தால் நினைந்து விழிநீர் பெருக்கி நின்றதென்றால், தமிழர் வரலாற்றை எழுதும் இன்றைய நாட்கள் அது இளைஞர் கைகளிலேயே உள்ளது என்பதை பறைசாற்றிய நிகழ்வாக இது அமைந்து கொண்டது.

கனடா, தமிழ்மாணவர் அமைப்பினால் நடத்தப்பட்ட இவ்விழாவில் பல்கலை பயிலும் மாணவ மாணவிகள் தமிழீழ தேசத்தைத், தமிழர்களிடம் இருந்து பிரிக்க முடியாது என்ற சத்தியத்தை நிரூபித்த விழாவாக அமைந்திருந்தது.

மிகக் கட்டுப்பாடாக, பாதுகாப்பு வழங்கி, துரிதமாக இயங்கி, மண்ணின் துயரங்களை வெளிக்கொணரும் வகையாக கலை நிகழ்வை நடத்தி மாணவர்கள் இயங்கிய விதத்தைப் பார்த்தால் தமிழர் சமுதாயம் என்றும் குனியாது நிமிர்ந்து எழும் என்பதை உறுதி செய்த விழாவாகவும் இது அமைந்து கொண்டது.

விழா தொடங்குவதற்குப் பன்னிரண்டு மணித்தியாலங்கள் முன்னதாகவேதான் விழாவுக்கான இடத்தின் அறிவிப்பு தொலைக்காட்சி, வானொலிகள் மூலம் அறிவிக்கப்பட்டபோதும் அரங்கு மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது.

இசை, நாடகம், மாணவர் தலைவர்களின் பேச்சுக்கள், ஏனைய பல்கலாச்சார மாணவர் அமைப்புகளின் தலைவர்கள், பலதரப்பட்ட பல்கலைக்கழங்களின் தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் வழங்கிய உரைகள் என சபைஉணர்ச்சிப் பிழம்பாக மாறியது.

விழா ஆரம்பத்தில், தமிழீழத் தேசியக்கொடி, கனடியத் தேசியக்கொடி என இருநாட்டுக் கொடிகளும் ஏற்றப்பட்டன. கனடியத் தேசிய கீதமும், தமிழீழத் தேசிய கீதமும் இசைக்கப்பட்டன. ‘இனிதான உலகத்தில் அழகான தமிழீழம் உருவாகக் காண்போமே மாவீரரே’ என்ற பாடலுக்கு எழுந்து நின்று வணக்கமும், மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.

இதனைஅடுத்து, தொழிலதிபர் பாபு மற்றும் மாணவர் தலைவர்களோடும் சீமான் அவர்கள் அரங்கத்தில் நுழைந்தார். சிதைக் கோவிலில்,போராளி உறவினரால் ஈகச் சுடர் ஏற்றலும், ‘செந்தமிழன்’ சீமான் அவர்களால் மலர்க்கொத்து இட்டு அஞ்சலியும் இடம்பெற்றது. வரவேற்பு நடனம், கிரிசாந்தி வதை நாடகம், மண்ணின் துயர், இசை, நடனம், என மாணவர்களின் பங்களிப்பு உள்ளத்தை உருகவைத்தன.

விழாவில் செந்தமிழன் சீமானின் உருக்கமான, உணர்ச்சியான, எழுச்சியான, யாதார்த்தமான உணர்வலைகள் நிரம்பிய பேச்சால் மௌனித்திருந்தது சபை. அவரது கருத்தாடல் மிக்க பேச்சுக்களால் கைதட்டி ஆர்ப்பரித்தது சபை. ஓரு மணித்தியாலமாக அரங்கத்தை வீரச்சுரங்கமாக மாற்றிய செந்தமிழன் சீமான், தேசியத் தலைவன் பிரபாகரன் தனக்குப் பணித்திருந்த வழியிலேயே தான் செல்வதாகக் கூறினார்.

இறுதியாக அனைவரும் எழுந்து நின்று, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுக்குக் கரமிசைத்து நிமிர்வு கொண்ட காட்சி இதயத்தை ஈர்த்துக் கொண்டது.

Read more...

பிரபாகரன் இறப்பதில்லை வருவார்!

ஈழத் தமிழர் வரலாற்றில் இருவர் என்றுமே இறப்பதில்லை ஒருவர் எல்லாளன் மற்றவர் பிரபாகரன். எல்லாளன் சமாதிக்கு விளக்கு வைத்த பொழுதில் கருவுற்றவர் பிரபாகரன். தேசியத் தலைவர் வே.பிரபாகரன் இன்று ( 26.11.2009 ) தனது 55 வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். யுத்தகளத்தில் இருந்து மூன்று தினங்களுக்கு முன்னரே அவர் வெளியேறிவிட்டார் என்ற தகவலை பலர் வெளியிட்டுள்ளனர். ஆகவே அவர் வருவார் என்ற நம்பிக்கை விடுதலைப் புலிகள் அபிமானிகளிடையே தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் போராட்ட வாழ்வைப் படித்து போர்க்களத்தில் நுழைந்த பிரபாகரனின் வரலாறும் நேதாஜியின் கடைசிக்கால வரலாறு போலவே ஆகியிருப்பது ஆச்சரியம் தரும் உண்மையாக இருக்கிறது. இன்றும்கூட நேதாஜி வாழ்வதாகவும், அவர் வருவார் என்றும் அவ்வப்போது பலர் பேசுவதுண்டு. அதுபோல பிரபாகரனும் வருவார் என்ற நம்பிக்கை தமிழீழ ஆதரவாளரிடையே நிலவுகிறது. அவருடைய 55 வது பிறந்த தினத்தில் அவர் மறுபடியும் மக்கள் முன் வரவேண்டும் என்ற கோரிக்கையே எங்கும் மேலோங்கி நிற்கிறது. அவர் வரவேண்டும் தமிழினம் மகிழ வேண்டும் என்ற ஆசையையை அவரது பிறந்தநாள் வேண்டுதலாக முன் வைக்கிறோம்.

பிரபாகரன் தேடப்பட்ட காலத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நடமாடிய ஒருவரல்ல. எதிரிகளும், ஆதரவாளரும் அவரைத் தேடிக்கொண்டே இருந்தார்கள். ஆகவே தேடக்கிடைக்காத வைரம் போலவே அவர் வாழ்க்கை அமைந்திருந்தது. வருடத்தில் ஒரு தடவை மாவீரர்நாள் நிகழ்விற்கு அவர் மக்கள் முன் தோன்றிப் பேசுவார். அடுத்த வருடம்வரை அதுதான் அவருடைய பிரதான பிரசன்னமாக இருக்கும். அவருடைய உரை சிங்கள ஆட்சியாளராலும், இந்திய ஆட்சியாளராலும், சர்வதேச சமுதாயத்தாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். உலகத்தில் அவருடைய உரையைப் போல உன்னிப்பாக நோக்கப்படும் வருடாந்த உரையை நிகழ்த்தும் உலகத் தலைவர்கள் எவருமே இருந்தாக சரித்திரமே கிடையாது. அப்படிப்பட்ட ஆளுமையை வளர்த்துக்கொண்ட உலகின் ஒரேயொரு தலைவராக அவர் இருந்தார்.

பிரிட்டனின் பிரபல ஊடகமான பீ.பீ.சி உலகத்தின் மிகச்சிறந்த கெரில்லாப்படை வீரனாக அவரையே தேர்வு செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது. போராட்டக்களத்தில் இருந்த ஒரு படையணி பெருந்தொகையான கப்பல்கள், ஆகாயவிமானப்படை, கரும்புலிகள் அணி, போலீஸ்படை, போராட்டப்படைகள், பெண்புலிகள் என்று கட்டமைத்த இராஜ்ஜியம் உலகத் தலைவர்களின் தன்மானத்திற்கே ஓர் அடியாக இருந்தது.

ஓயாத அலைகள் 3ன்போது அவர் சிறீலங்கா படைகளை பலாலி முகாமிற்குள் முற்றாக முடக்கி முழுமையான வெற்றியை எட்டித் தொட்டிருந்தார். மற்றய நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைய மனிதாபிமானத்தோடு 40.000 சிங்களப் படைகளுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தார். சிங்களப் படைகள் தமிழ் மண்ணில் செய்த செயல்களை எண்ணினால் காயப்பட்ட அவர்களை அன்றே புல்டோசர்களை ஏற்றி நெரித்து இன்று சிங்களப் படைகள் செய்த செயலை அவராலும் செய்திருக்க முடியும். ஆனால் அவர் மனிதாபிமானத்திற்காகவும் உலக சமுதாயத்திற்காகவும் அதைத் தவிர்த்தார்.

கடந்த மே மாதம் விடுதலைப்புலிகளின் தலைவர் தனி ஒரு மனிதனாக உலகத்தின் 32 நாடுகளை எதிர் கொண்டார். அன்று போராட்டத்தை ஆரம்பித்தபோது 32 தமிழ் இயக்கங்களை எதிர் கொண்டவர் இப்போது அதேயளவு வல்லரசுகளை எதிர் கொண்டார். சங்கிலியனோ, பண்டாரவன்னியனோ, வீரபாண்டிய கட்டபொம்மனோ, கடைசிச் சோழனோ எதிர் கொள்ளாத பெரும் சவால் இதுவாகும். கடந்த 2000 வருட வரலாற்றில் உலகப்போரை தனிமனிதனாக சந்தித்த ஒரேயொரு வீரத்தமிழனாகவும் அவர் விளங்கினார்.

அவர் போரில் தோற்கடிக்கப்பட்டார் என்பது தவறான கருத்தாகும். உலக நாடுகளின் அசிங்கங்களையும், பொறாமை மனங்களையும் பார்த்தால் பிரபாகரன் தோல்வி மூலம் தமிழினத்திற்கு மாபெரும் வெற்றியையே தேடித்தந்துள்ளார்.

சென்ற ஆண்டு மாவீரர்நாள் உரையைப் பார்த்தால் அவரே இதைச் சொல்லியிருப்பதை உணரலாம். ஒரு சிறிய மக்கள் குழுவை எதிர்க்க இவ்வளவு பெரிய வியூகத்தை உலகநாடுகள் அமைப்பதா என்ற கேள்வியை ஒரு சிறிய சிரிப்புடன் கேட்டிருப்பார். அன்றே அவருக்கு யாவுமே தெரிந்துவிட்டது, அவருடைய மெல்லிய நமட்டு சிரிப்பிற்குள்ளேயே அது கிடந்தது.

பிரபாகரன் தனது பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிப் படிப்பித்தார் என்று பிரச்சாரம் செய்யப்பட்டு, அவருடைய மகள் அல்லாத டென்மார்க்கில் இருந்த ஒரு பெண்மணியின் படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்தார்கள். தனது பிள்ளைகள், பெற்றோர், குடும்பம், தான் என்று அனைவரையும் களத்தில் வைத்தே அவர் போரை நடாத்தியிருக்கிறார் என்ற உண்மையை இப்போது நயவஞ்சக எதிரிகள் மௌனமாக சிந்திக்கிறார்கள்.

எதிரிகள் மட்டும் பிரபாகரனுக்கு எதிராகப் போராடவில்லை. ஈழத் தமிழரே பல பிரிவுகளாகப் பிரிந்து அவருக்கு எதிராகப் போர் நடாத்தினார்கள். அவரோடு இருந்தவர்களில் பலர் பணத்திற்காக இருந்தவர்கள் என்பதையும் இப்போது அறிகிறோம். ஆனால் அவருக்காக தமது பணத்தை எல்லாம் கொடுத்த ஏழைகளின் இதயத்தில் பிரபாகரன் இருந்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் போல ஏழைகளின் அன்பைப் பெற்ற தலைவராக இருந்தார்.

எம்.ஜி.ஆர் ஒரு கருத்தை எப்போதும் சொல்வார். என்.டி.ராமராவை காட்டிக் கொடுத்த பாஸ்கரராவைப் போன்ற துரோகிகளை பக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுவார். அதுபோல பிரபாகரனும் பலரை வெளியில் விட்டால் ஆபத்தென அருகில் வைத்திருந்தார் என்பதை இப்போது அனைவரும் உணர்கிறோம். இப்படியாக உள்ளிருந்து ஆப்பு வைத்தவர்கள் பற்றிய கதைகள் மேலும் வரும். சென்ற மாவீரர் நாள் உரையில் அவர் அதிகமாக பாவித்த சொல் ஆப்பு வைத்தல் என்பதுதான். உள்ளிருந்து ஆப்பு வைத்த அனைவரையும் அவர் அறிந்திருந்தார். காலம் அந்தக் கதைகளின் உண்மையை விடுவிக்கும்.

பிரபாகரன் என்பவர் வாழ்ந்துதான் மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டிய ஒருவரல்ல. அவருடைய சக்தி தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்துள்ளது. ஆகவே மாவீரர்நாளில் பிரபாகரன் உரையாற்றவில்லையே என்று மக்கள் கவலையடைதல் கூடாது. அவர் சிங்கள இனவாதத்தை மட்டுமல்ல, உலக இனவாத வெறுப்பையும் தமிழருக்கு அம்பலப்படுத்தியுள்ளார். இரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்ததாகக் கூறப்படும் விக்கிரமாதித்தன் சாதிக்க முடியாத சாதனையை 55 வருடங்களில் சாதித்துள்ளார்.

இயேசுநாதர், நெப்போலியன், மகாஅலக்சாண்டர் போன்ற பெரிய வீரர்கள் எல்லாம் இன்றுவரை இறந்து போகாத புகழ் மனிதர்களே. அவர்களைப் போல அழியாப் புகழ் பெற்றுவிட்ட பிரபாகரன் இன்று உலகப்; புகழ் ஏணியில் நிற்கிறார். இன்று அவரது பிறந்தநாள்! இதுதான் இனி ஈழத் தமிழினத்தின் பிறந்தநாள்.

ஈழத் தமிழர் வரலாற்றில் இருவர் என்றுமே இறப்பதில்லை ஒருவர் எல்லாளன் மற்றவர் பிரபாகரன். எல்லாளன் சமாதிக்கு விளக்கு வைத்த பொழுதில் கருவுற்றவர் பிரபாகரன். அவருடைய கண்களும் எல்லாளன் கண்களும் ஒன்றுதான்.

பிரபாகரன் இறப்பதில்லை வருவார் !
கொஞ்சம் பொறுங்கள் !
இன்று அவர் பிறந்தநாள் விழாவை அவர் இறக்கவில்லை என்ற உறுதியுடன் அனைவரும் கொண்டாடுவோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

Read more...

பிரபாகரன் பிறந்த நாள் 2009விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 55வது பிறந்தநாள். இதை முன்னிட்டு உலகெங்கும் உள்ள தமிழின உணர்வாளர்கள் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள். இதேபோல் சேலத்தில் பெரியார் திராவிடக் கழகத்தினர், மனித உரிமைகள் அமைப்பினர், தமிழின உணர்வாளர்கள் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைத்து பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடினர்.
சேலத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை நேற்று இரவு போலீசார் அப்புறப்படுத்தினர். சில இடங்களில் போலீசாருக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலீசார் பேனர்களை அப்புறப்படுத்தினாலும், கிச்சிப்பாளையம் என்ற கிராமத்தில் சுமார் 20 இளைஞர்கள் மீண்டும் மீண்டும் பிரபாகரனின் பேனர்களை வைத்து அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.

Read more...

புதுச்சேரியில் தமிழ்த்தேசியத்தலைவர் பிறந்ததின விழா

புதுச்சேரியில் தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரகாரன் அவர்களின் 55வது பிறந்ததினம் உலகத்தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பத்தில் க.சத்தியானந்தன் (மக்கள் நல முன்னணி) தலைமையில் நடைபெற்ற விழாவில் தூ.சடகோபன் (மதிமுக பொறுப்புக்குழு உறுப்பினர்) இல.இராமதாசு (மறுமலர்ச்சி தொழிற்சங்கம்), கோகுல்காந்திநாத் (பெரியார் திராவிடர் விடுதலைக்கழகம்), கவிஞர்.ஆலா, ஆனந்தகுமார் (புதுவைக்குயில் பாசறை), வி.பி.பி.வேலு (பா.ம.க), அ.தெள்ளியன், இரா.சுந்தர் (ம.ந.மு), சேதுபதி, ஆனந்த், முகுந்தன் மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாட்டினை மக்கள் நல முன்னணி என்ற இயக்கம் செய்திருந்தது.


Read more...

புதுச்சேரியில் தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு. பிரபாகரன் பிறந்தநாள் விழா

Read more...

தமிழ்த் தேசியத்துக்கு முகவரி தந்த தலைவன் பிரபாகரன்

தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27நீக்ரோக்களுக்கு அடுத்தபடியாக, ஆங்கிலேயர்களால் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட ஓர் இனம் தமிழினம் தான். மலேசியா(சிங்கப்பூர்,) பர்மா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, பிஜி போன்ற பல காலனியாதிக்க பிரதேசங்களை வளப்படுத்த, 200 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்கள் அங்கெல்லாம் "ஓட்டிச்" சொல்லப்பட்டனர். இந்திய இனங்களிலேயே இந்தச் "சிறப்பைப்" பெற்ற ஒரே இனம் தமிழினம் தான். எனவே, இந்திய இனங்களிலேயே, கணிசமான அளவு பல வெளிநாடுகளில் வாழும் ஒரே இனம், தமிழினம் தான். இலங்கையிலே வந்தேறி சிங்களவர், மண்ணின் மைந்தர்களான தொல்குடித் தமிழர்களை வதை செய்ய, இந்தியா தனது விடுதலை நாள் முதல் இன்றுவரை, உதவியது என்பது வரலாறாய் உள்ளபோது, மேற்குறிப்பிட்ட தேசங்களில் வாழும் தமிழர்களைக் காக்க, இந்தியாவிடம் நாம் இனியும் மன்றாடி நிற்க இயலாது. அந்நாடுகளிலுள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க தமிழர்களுக்கான ஒரு தேசம் தேவை. தமிழர்களுக்கான ஒரு வலுவான தேசம் இன்றியமையாதது.

இந்தியா என்ற ஒற்றை நாட்டில், 544 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 40 தமிழ் உறுப்பனர்களால் தமது இன உரிமைகளைக் காத்துக் கொள்ள இயலாது. கச்சத்தீவை நம்மால் காக்க இயலவில்லை. இந்தியாவின் தெற்கே தமிழ்நாடு. இலங்கையின் வடக்கே தமிழீழம். இடைப்பட்ட பாக் நீரிணை தமிழனுக்கு மட்டுமே சொந்தமானது. ஆனால், சம்மந்தமே இல்லாத சிங்களவன் அங்கு தமிழக மீனவர்களைத் துரத்துகிறான், கொல்கிறான். வெட்கக்கேடு!

150 ஆண்டுகளாக, ஆங்கிலேயர்களால் அடிமைகளாக அழைத்துச் சொல்லப்பட்டு, இலங்கையைப் பொன்னாக்கிய இந்தியத் தமிழர்களை சிங்களன் நாடற்றவராக்கிய போது, இந்தியா அதை ஆமோதித்தது. 6,00,000 இந்தியத் தமிழர்களை அது அகதிகளாக இந்தியாவிற்கு அழைத்துக் கொண்டது. அதைத் தடுக்க நம்மால் இயலவில்லை. அமைதிப்படை என்ற பேரில் ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களை வேட்டையாடியது. நம்மால் தடுக்க இயலவில்லை. தற்போது தமிழ் மக்களின் ஒரே அரணாக இருந்த புலிகளையும் வீழ்த்தி, அம்மண்ணின் மைந்தர்களான தமிழர்களை, வந்தேறிகளான சிங்களவருக்கு அடிமையாக, நாதியற்ற இனமாக இலங்கையில் இந்தியா தான் வைத்திருக்கிறது. அனைத்து இந்திய ஒத்துழைப்போடு நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில், கடந்த ஓராண்டில் மடிந்தவர் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்கள். இந்தக் கொடும் பழியிலிருந்து இந்தியாவால் மீள இயலாது!

இலங்கையில் இரண்டே இனங்கள். தமிழ் சிறுபான்மை இனம். சிங்களப் பேரினம். அங்கு தமிழனை, சிங்களவன் நேரிடையாகத் தாக்குகிறான். தமிழர் நிலத்தை அபகரிக்கிறான். அது போன்று பல்லின இந்தியாவால் செய்ய இயலாது. இங்கே அது மறைமுகமாக பல்வேறு முகங்களில் நடைபெறுகிறது. சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, தமிழனின் சொந்தக் கடலில், தமிழ் மீனவர்களைப் படுகொலை செய்ய இந்தியா உதவுகிறது.

கருணாநிதி போன்ற எட்டப்பர்களை பணத்தையும், பதவியையும் காட்டி உருவாக்கி அவர்களின் மூலமாக நமது வளங்களை ஏகாதிபத்தியங்களுக்கு இந்தியா விற்கிறது. பார்ப்பன, பனியா இந்தியாவும் ஒரு ஏகாதிபத்திய நாடு தான். அது தமிழரது உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கிறது. டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற எண்ணற்ற ஏகாதிபத்தியங்களை வளர்த்துவிடத் தான் இந்திய சட்டங்கள் பயன்படுகின்றன. இங்குள்ள பெரும்பான்மை ஏழை மக்களை இலவசங்களை எதிர்நோக்கும் பிச்சைக்கார இனமாக வைத்திருக்கத்தான் அதன் சட்டங்கள் பயன்படுகின்றன.

தமிழர்கள் தமது அறிவாலும். கடின உழைப்பாலும் ஒப்பீட்டளவில் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளனர். அத்தகைய நமது நிலத்தை நோக்கி மற்ற இனமக்கள் கும்பல் கும்பலாகப் பிழைக்க வருகிறார்கள். இங்கே வரும் அம்மக்கள், வந்த மாத்திரத்திலேயே வாக்குரிமை பெற்று, இங்குள்ள அரசை அமைப்பதிலும் பங்கு வகிக்கின்றனர். இது நீண்ட காலத்தில் நமது தாயகத்தை இழப்பதில் கொண்டு போய் முடிக்கும். நமது வளங்களை அவர்கள் சுவீகரித்துக் கொள்வார்கள், கொண்டிருக்கிறார்கள்.

தமிழரின் பெருமை பேசும் தஞ்சை பெரிய கோயிலிலுக்கு அறங்காவலர், இன்றும் ஒரு மராத்தியன் என்பது ஒரு சிறு சான்று. தமிழ்ப்பகுதியில் தஞ்சம் புகுந்த ஆரியன் தமிழரின் இசையைக் களவாடி கர்நாடக சங்கீதம் என்றது மட்டுமில்லாமல் தமிழ் என்ற தீட்டு மொழியில் பாடல் பாடக்கூடாதென்று சொன்னான். பலநூறு வருடங்களாக நடத்தியும் காண்பித்தான். தமிழரின் நாட்டியக்கலையை, தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட பிறகு கைப்பற்றி, தமது பாரம்பரியக் கலையாக ஆக்கிக் கொண்டனர் ஆரியர்கள். பார்ப்பனீயத்தால் தமிழருக்கு ஏற்பட்ட நசிவுகளை முழுமையாக விளக்க, இக்கட்டுரையில் இடமில்லை. மாற்றானை நமது மண்ணிலே அனுமதித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு இவை சில ஆணித்தரமான சான்றுகள். ஈழத்தில் வந்தேறிய சிங்களன், அம்மண்ணின் மைந்தர்களைப் படுகொலை செய்து, அவர்களின் தாயகத்தைப் பறிப்பது மற்றுமொரு ஆணித்தரமான சான்று.

இந்தியாவிலேயே தமிழினம் மட்டும் தான் தனித்துவமான மொழியும், பண்பாடும் கொண்ட இனம். ஆரியம் அன்றிலிருந்து இன்று வரை தமிழரின் மீது அளவில்லா பொறாமை கொண்டு நம்மை ஒரு பகையினமாகக் கருதுகிறது. தமிழ் மொழியை அழிப்பதிலும், தமிழரின் தாயகத்தை விழுங்குவதிலும் அது நீண்ட கால செயல்திட்டத்தோடு செயல்படுகிறது.

உலகம் தழுவிய தமிழர்களின் நலன்களைப் பேணவும், தமிழரின் நிலம், மொழி, பண்பாடு இவற்றைக் காக்கவும், பேணவும் நமக்கான தேசங்கள் இன்றியமையாதன. இதை உணரும் நாம் தமிழ் தேசியத்தை அடைய, இனி என்ன செய்ய வேண்டும் என்று ஆராய வேண்டும்.

பாரதி, இந்திய விடுதலை அடைவதற்கு முன்பே, " ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று" பாடியது போல, தற்போதே நாம் தன்னுரிமை பெற்றுவிட்டதாகக் கொண்டாடத் தொடங்க வேண்டும். அத்தகைய கொண்டாட்டங்கள் மக்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். தன்னுரிமைப் போராட்டங்களுக்கு மக்களைத் தயார் படுத்தவும் உதவும். கொண்டாட்டம் என்றாலே அதற்கான ஒரு அடையாள நாள் தேவை.

அந்தப் பொன்னான நாளைக் கண்டறிய வேண்டியது அடுத்த கடமை. சுதந்திரத்திற்குப் பிறகு, பொட்டி ஷ்ரீராமுலு என்ற தெலுங்கரின், தெலுங்கு மொழி மக்களுக்கு தனிமாநிலம் வேண்டி பட்டினிப் போராட்டம் செய்து உயிர்நீத்த பின்னணியில், 1956 நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, சென்னை மாகாணமாயிருந்த பகுதிகள் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டன.

இந்த நாளை கர்நாடகா ராஜ்யோத்சவா நாளாகக் கொண்டாடுகிறது. நவம்பர் 1ல் தொடங்கும் அவர்களது கொண்டாட்டம் ஒரு மாதம் முழுக்க சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. கர்நாடக மாநிலத்தில், மாநிலத்திற்கான கொடியும் உள்ளது. அந்தக் கொடியை, பெரிய சாலைகளிலிருந்து பிரியும் தெருக்களின் முச்சந்திகளில், நிரந்தரக் கொடிக்கம்பம் கட்டி, பறக்க விடுகின்றனர்.

இது போன்ற விழாக்கள் ஆந்திரா, கேரளாவிலும் மிகச் சிறப்பாக எடுக்கப்படுகின்றன. அங்கும் மாநிலங்களுக்கான கொடிகளும் உள்ளன. இந்த மாநிலங்களிலெல்லாம் அரசு விடுமுறையும் விடப்படுகிறது. ஆனால், நாசமாய்ப்போன தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கட்சிகள், இந்த நாளைக் கொண்டாடுவதும் இல்லை, இவர்கள் தமிழகத்திற்கான ஒரு கொடியையும் இன்றுவரை உருவாக்கவில்லை. தமிழகத்தில் தான், இந்தியாவிலேயே, அதிக எண்ணிக்கையில் கட்சிகள் உள்ளன, சாதிக் கட்சிகளையும் சேர்த்து. ஆனால், இந்த அரம்பர்கள் கூட்டம், இதுவரை தமிழ் மக்களுக்கான ஒரு பொதுக் கொடியை உருவாக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.

இதிலே மனதைப் பதறவைக்கும் முரண் என்னவென்றால், தமிழ் நாட்டில் மட்டும் தான் "திராவிட தேசம்" கோரப்பட்டது. பிரிவினை கோரும் அமைப்புகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை ஜவகர்லால் நேரு கொண்டுவரப் போகிறார் என்றவுடன் தி. மு. க. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது, அண்ணாவின் காலத்திலேயே தான்.

பிறகு வந்த கருணாநிநி மாநில சுயாட்சி கோஷமிட்டார். இதை ஒரு அரசியல் உத்தியாகப் பயன்படுத்திய கருணாநிதி, ஒரு கொடியையாவது உருவாக்கி இருக்க வேண்டாமா? மற்ற மாநிலங்களைப் போல, நவம்பர் 1ல் மாநில விடுமுறை விட்டிருக்க வேண்டாமா? இந்த நாளை மற்ற மாநிலங்களைப் போல, ஒரு சிறப்பான நாளாகக் கொண்டாடி இருக்க வேண்டாமா? ஆனால், இந்த "மஹா புருஷன்" ஓணம் பண்டிகைக்கு தமிழ் நாட்டில் விடுமுறை விடுகிறார். ஹோலிப் பண்டிகைக்கு விடுமுறை விடுகிறார். இதையெல்லாம் செய்து மாற்றானிடம் ஓட்டுப் "பொறுக்கும்" இவர், தமிழுக்காக செய்ததெல்லாம் வெற்று ஆரவாரம் தான்!

கருணாநிதியின் "நச்சு" அரசியல் இப்போது தான் பலருக்கும் தெளிவாகப் புரிகிறது! இந்த மஹாபுருஷன், தான் ஒரு (இந்திய) அடிமை, தன்னால் என்ன செய்ய முடியும் என்பார். அதேநேரம், இந்தியாவின் கொள்கைதான் தனது கொள்கை என்றும் சொல்லுவார். ஒரு அடிமை தனது ஆண்டையின் கொள்கையை ஏற்கிறார் என்றால், அந்த அடிமையின் தராதரம் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

* சரி......! இனி செய்வதைக் காண்போம்!! மேற்சொன்னது போல, நவர்பர் 27 ஐ நாமும் ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாடலாம். தமிழரைப் பொருத்தவரை நவம்பர் மாதம் ஒரு சிறப்பான மாதமும் கூட. இந்த மாதத்தில் தான் மாவீரர் தினமும் கொண்டாடப்படுகிறது. தமிழரின் தீப ஒளித்திருநாளான "கார்த்திகை தீபமும்" இந்த மாதத்தில் தான். உலகத்தில் தமிழினத்தின் பெருமையை சொன்ன தமிழ்த் தேசியத்தை உருவாக்கித்தந்த மேதகு பிரபாகரன் அவதரித்ததுவும் இந்த புனித மாதத்தில்தான். நவம்பர் "தமிழ்த் தேசிய நாள்" நவம்பர் தொடங்கும் இந்தத் "தமிழ்த்தேசிய நாள்" கொண்டாட்டத்தை நவம்பர் மாதம் முழுக்க, அரங்கக் கூட்டங்களாகவும், பொதுக்கூட்டங்களாகவும் கொண்டாட வேண்டும். அதில் தமிழரின் மாண்புமிகு வரலாறு, பண்பாடு, மொழிச் சிறப்பு, பண்டைய இலக்கியங்கள், பண்டைய அறவியல், பண்டைய அறிவியல், பண்டைய சமூதாயவியல் என்ற தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப் படவேண்டும். எதிர்காலத் திட்டமிடல் கருத்தரங்குகளும் நடத்த வேண்டும்.

மரபியல் அடிப்படையில், தென்னிந்தியர்கள் அனைவருமே தமிழர்களே! ஆனால், தமிழ் என்பதை உச்சரிக்கத் தெரியாத ஆரியர்களால் தான் தற்போதைய "திராவிடம்" என்ற சொல் படிப்படியாக உருப்பெற்றது. ஆனால், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் ஆரியரால் திட்டமிட்டு, இடைக்காலத்தில் உருவாக்கப்பட்ட மொழிகள். தங்களின் அடையாளங்களை இழந்த இம்மக்களை இனி தமிழர்கள் என்று அழைக்க இயலாததால், திராவிடம் என்ற தமிழர் மரபினத்தை அன்று ஆரியரால் பிழையாக அழைக்கப்பட்ட, பொதுப் பெயராலேயே அழைக்கின்றனர்.

பெரியார் அவர்கள் தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்து உருவான மொழிகள் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லாம், எனவே அவர்கள் எல்லோருமே தமிழர்கள் தான் என்றும், இம்மக்கள் அனைவரும் தமிழர்களாகவே தங்களை உணரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால், அவ்வம்மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களை திராவிடர்கள் என்று கூடக் கருதாமல், தங்களைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் என்றே கருதுகின்றனர். (அங்கெல்லாம் திராவிடம் என்ற சொல்லாட்சி கொண்ட ஒரு அரசியல் கட்சிகூட இல்லை.) இது அவர்களின் அறியாமையைக் காண்பிக்கிறது. அவர்கள் வருங்காலத்தில் தங்களைத் தமிழர்களாக உணர்வார்களா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. அதை ஆரியம் அனுமதிக்காது!

ஆனால், தமிழகத்தில் நெடுநாட்களாக வாழும் இத்தகைய மக்கள் மட்டும் தங்களை திராவிடர் என்று அழைத்துக் கொண்டுள்ளனர். அறியாமையால், தமிழகத் தமிழனும் தன்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்கிறான். திராவிடர் என்று, ஒரு அரசியல் உத்தியாக, பெரியார் பயன்படுத்திப் பிரபலப் படுத்திய சொல்லாட்சி அவராலேயே கைவிடப்பட்டு, "தனித் தழிழ்நாடு" கேட்டு தனது இறுதிக் காலம் வரை போராடினார். அவர் ஒரு அப்பட்டமான தமிழத்தேசியர்!

எனவே, தமிழரை வீழத்திய திராவிடம் என்ற சொல்லாட்சியை இனிக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும். திராவிட அரசியல் பச்சோந்திகள் தங்களை "தேசத்தால் இந்தியன், இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன்" என்று தமிழனைக் காயடிப்பதை இனித் தடுத்தே ஆகவேண்டும். தமிழகத்தில் நெடுநாட்களாக வாழும் அனைத்து திராவிடர்களும் தமிழர்களே! எனவே, திராவிடம் என்ற சொல்லை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவோம்! கர்நாடக, ஆந்திர, கேரள மக்கள் மட்டுமே தங்களை திராவிட இனம் என்று, விரும்பினால், இன்று அழைத்துக் கொள்ளட்டும். ஆதியிலிருந்து தமிழர்கள் தமிழர்களே! இவர்களைத் திராவிடர்கள் என்றழைப்பது அடிப்படையிலேயே பிழையானது. அப்படிப் பிழையாக அழைத்துக் கொண்டதால் தான் தமிழர்கள், தங்களைத் தமிழர்கள் என்று உணரமுடியாமல் வந்தேறிகளின் ஆட்சியில் அடிமைகளாக வாழ்கின்றனர்.

அனைத்து திராவிட அரசியலையும் முற்றுமாக வீழ்த்துவோம்! உலகின் தாயினமான நமக்கு ஒரு தேசம் இன்றியமையாதது! அது இன்றுவரை இல்லாதிருப்பது கேவலமானது. ஒப்பற்ற தமிழ் மொழியையும், பண்பாட்டையும், பண்டைய தமிழிலக்கியங்களையும் உலகெலாம் பரப்புவோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், தூய நல்வழி (சுத்த சன்மார்கம்) சொன்ன தமிழருக்கு இந்த உலகை நல்வழிப் படுத்தும் இன்றியாமையாத கடமையும் உள்ளது! அது நம்மால் மட்டுமே முடியும். அதற்கான கருவிகள் நம்மிடம் தான் உள்ளன!

இதற்கு அடிப்படைத் தேவை தமிழ்த் தேசியம்! அதன் முதற்படி தமிழ்த்தேசிய அடையாள நாள் கொண்டாட்டங்கள்! அதற்கான செயல்பாடுகளைச் செய்யத் தொடங்குவோம்.

வெல்க தமிழ்த் தேசம்!

முனைவர் வே.பாண்டியன்

Read more...

மாவீரர் தின உரை வழமை போன்று இடம்பெறும் – தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை செயலகம்

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் துணை ஆயுதக்குழுக்களும் மேற்கொண்டுவரும் பிரசாரங்களை நம்பவேண்டாம் என தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் எதிர்வரும் மாவீரர் தின உரையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கை விளக்கம் வழமைபோன்று இடம்பெறும் என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அன்பார்ந்த தமிழீழ மக்களுக்கும் புலம்பெயர்வாழ் தமிழ் உறவுகளுக்கும் கடந்த 18-05-2009 அன்று தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடிய எமது இயக்கம் பாரிய பின்னடைவை சந்தித்ததை தொடர்ந்து நாம் மீண்டும் எமது விடுதலை இயக்கத்தை தாயகத்தில் மீள கட்டியெழுப்பிவருவதை அறிந்த சிங்கள பேரினவாத அரசும் அரசுடன் சேர்ந்து இயங்கிவரும் அரச துணைகுழுக்களும் பொய்யான பிரசாரங்களை ஊடகங்கள் வாயிலாக கட்டவிழ்த்துள்ளனர்.

இவ்வாறான பிரசார போரை கடந்த முப்பது வருடங்கால போராட்ட வரலாற்றில் சிறிலங்கா அரசு பல தடவைகள் நிகழ்த்தியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எனவே இவ்வாறான போலிப்பிரசாரங்களை நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளும் அதேவேளையில் எமது விடுதலைப்போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வு பற்றிய கொள்கை விளக்கவுரையும் வழமைபோன்று எதிர்வரும் மாவீரர் தினத்தன்று நிகழ்த்தப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

தன்னுடைய தவறை மறைக்க அவதூறு... கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

தன் தவறை மறைக்க அவதூறு செய்கிறார். விடுதலைப் புலிகள் மீது முற்றிலும் உண்மையல்லாத குற்றச்சாட்டுக்களைக் கருணாநிதி தெரிவித்துள்ளார் என பழ.நெடுமாறன் அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கருணாநிதி நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதை தடுப்பதற்குத் தவறிவிட்ட தனது மாபெரும் துரோகத்தை மறைப்பதற்காக தொடர்ந்து பொய்யான தகவல்களைக் கொண்ட அறிக்கைகளைக் கருணாநிதி வெளியிட்டு வருகிறார்.

1986ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற டெசோ பேரணி மாநாட்டில் பிரபாகரன் கலந்து கொள்ளாமல் தனது பிரதிநிதியாக திலகர், பேபி சுப்பிரமணியம் ஆகியோரை அனுப்பியதைக் குறைகூறியிருக்கிறார். ஆனால் அம்மாநாட்டில் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பாலகுமரன், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பத்மநாபா, பிளாட் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்தார்கள் என்ற உண்மையை மறைத்து பிரபாகரன் மீது வீண்பழியைச் சுமத்தியிருக்கிறார். அந்த மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் என்ற முறையில் இதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கூறியுள்ள சில செய்திகளின் உண்மைத் தன்மையைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படாமல் புலிகள் மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவதற்கு ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

2003ஆம் ஆண்டு நடைபெற்ற சமரசப் பேச்சு வார்த்தையின் போது பிரபாகரன் தாமாகவே வெளியேறினார் என்று ரணில் கூறியுள்ள பொய்யான தகவலையே தனக்கு ஆதாரமாக கருணாநிதி பயன்படுத்தியிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நோர்வே பிரதிநிதிகள் முன்னிலையில் ஆறுகட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் இலங்கை அரசு 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் தற்காலிக நிர்வாகக் குழுத் திட்டத்தை அறிவித்தது. இதன்படி நிலம், காவல்துறை, பாதுகாப்பு, வரிவசூலித்தல் ஆகியவை தொடர்பாக எந்த அதிகாரமும் இந்த அமைப்புக்கு அளிக்கப்படவில்லை.

இந்த அதிகாரங்கள் அனைத்தும் இலங்கை அரசிடமே இருக்கும். இத்திட்டத்தை பரிசீலனை செய்து ஏற்க மறுத்த புலிகள் மாற்றுத் திட்டம் ஒன்றை அளிக்க ஒப்புக்கொண்டனர்.

அதற்காக உலகெங்கிலுமுள்ள ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் பிறநாடுகளைச் சேர்ந்த சட்ட அறிஞர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று அதன்பின்னரே மாற்றுத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டுமென பிரபாகரன் கருதினார்.

அதற்கிணங்க புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒரு குழு உலக நாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஈழத்தமிழர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.

பிறகு டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளில் உள்ள கூட்டாட்சி முறைப்பற்றி நேரில் கண்டறிந்தது. அதன் பிறகு உருவாக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தை 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியன்று நார்வே பிரதிநிதிகள் மூலமாக சிங்கள அரசுக்கு பிரபாகரன் அனுப்பி வைத்தார்.

இந்த உண்மையை ரணில் அடியோடு மறைத்து கூறிய பொய்யையே கருணாநிதி திரும்பவும் கூறியுள்ளார். புலிகள் அளித்த மாற்றுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சிங்கள அரசு ஏற்க மறுத்த காரணத்தினால்தான் பேச்சுவார்த்தை முறிந்தது.

பேச்சுவார்த்தை தொடங்கியபோதே தனிநாடு கோரிக்கைக்கு மாற்றாக கூட்டாட்சி முறையை பரிசீலிக்க விடுதலைப்புலிகள் ஒப்புக்கொண்டது மிகப்பெரிய விட்டுக்கொடுத்தல் ஆகும். ஆனால் சிங்கள அரசு பிடிவாதமாக ஒற்றையாட்சி முறையிலிருந்து விலகி நிற்க மறுத்ததுதான் பேச்சுவார்த்தை முறிவுக்கு காரணமே தவிர பிரபாகரன் காரணம் அல்ல.

2005ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதை பிரபாகரன் தவிர்த்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும். டோக்கியோவில் ஜப்பானிய அரசு முன் நின்று நடத்திய சக தலைமை நாடுகளின் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அரசின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வதால் விடுதலைப்புலிகள் அம்மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை.

அழைப்பில்லாத மாநாட்டில் புலிகள் கலந்துகொள்ளவில்லை என்று கூறுவதைப்போன்ற அறியாமை வேறு இருக்க முடியாது. பாங்காக், டோக்கியோ, பெர்லின், ஒஸ்லோ ஆகிய நான்கு இடங்களில் நார்வே பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிங்கள அரசின் பிரதிநிதிகளும் புலிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

ஆனால் இரண்டாம் முறையாக டோக்கியாவில் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தைக்கு புலிகளை அழைக்காதது மிகப்பெரிய தவறாகும். இந்தத் தவறை மூடி மறைத்து ரணில் கூறியவற்றையே கருணாநிதி திரும்பவும் கூறியிருப்பது வேண்டுமென்றே புலிகளை அவதூறு செய்வதாகும்.

1989ஆம் ஆண்டில் ராசீவ் காந்தி கருணாநிதியையும் மாறனையும் அழைத்துப் பேசி பிரபாகரனுடன் இந்தப் பிரச்சினைக் குறித்துப் பேசி முடிவு காண வழிகாணுங்கள் என்று கூறியதாக கருணாநிதி கூறியிருக்கிறார்.

அதற்கிணங்க இவர் செய்தது என்ன? இலங்கை சென்று பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியதற்காக வைகோ அவர்கள் மீது அடாத பழியை இவர் சுமத்தினார். புலிகள் உதவியோடு தன்னைக் கொலை செய்யச் சதி நடைபெறுவதாகவும் புலம்பினார். இத்தகையவரா அப்பிரச்சினை தீருவதற்கு வழிகாணுபவர்?
பிரதமராக வி.பி.சிங் இருக்கும்போது ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி என்ன சொல்கிறாரோ அதற்கேற்ப இந்திய அரசு நடந்துகொள்ளும் என்று கூறி இவரிடம் பொறுப்பை ஒப்படைத்தபோது இவர் செய்தது என்ன?

ஈழத்தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகளான புலிகளுடன் மற்ற துரோக இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு இவர் செய்த முயற்சியை புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே திட்டமிட்டு அதைச் சீர்குலைத்தவர் கருணாநிதியே ஆவார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிப்பதற்கு புலிகள் தவறிவிட்டார்கள் என்பதும் கருணாநிதியின் மற்றொரு குற்றச்சாட்டாகும். போர் நிறுத்த உடன்பாட்டில் பிரதமர் ரணிலும் பிரபாகரனும் கையெழுத்திட்டனர். ஆனால் அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் பிரதமராக இருந்த ரணில் அந்த உடன்பாட்டில் எந்தவொரு அம்சத்தையும் நிறைவேற்றாமல் காலங்கடத்தினார்.

இடைக்காலத்தில் சிங்கள இராணுவ வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி அவர்களுக்குப் பயிற்சி அளிக்கச் செய்தார். உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்தார். புலிகள் இயக்கத்தை பிளவு படுத்த சதிச் செய்தார். இந்தக் காரணங்களினால் அவரை தமிழர்கள் ஆதரிக்க விரும்பவில்லை. சிங்களர் தங்கள் தலைவர் யார் என்பதை முடிவுசெய்ய நடைபெறும் தேர்தலில் பங்கேற்பதால் எந்த பயனும் விளையப்போவதில்லை எனத் தமிழர்கள் கருதினர்.

தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் கூற புலிகள் விரும்பவில்லை. திரும்பத் திரும்பச் சகோதரச் சண்டை என்னும் புளித்துப்போனப் பொய்யையே கருணாநிதி கூறிவருகிறார். போராளி இயக்கங்களுக்குள் மோதலைத் திட்டமிட்டு உருவாக்கியது இந்திய உளவுத் துறையே என்ற உண்மையை மறைப்பதற்கு அவர் இவ்வாறு செய்கிறார்.

அவருடைய சொந்தக் கட்சியில் முக்கியமான தலைவர்கள் பலர் உட்கட்சி சண்டையில் படுகொலை செய்யப்பட்டதை தடுக்க முடியாத இவர் சகோதரச் சண்டையைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியற்றவர்.

இலங்கைப் போரில் சிங்களப் படைக்கு இந்தியா இராணுவ ரீதியாக அளித்த உதவிகளை அறிந்திருந்தும் அதைத் தடுத்து நிறுத்த முன்வராமல் மறைப்பதற்கு துணைநின்ற துரோகத்தை மறைத்து பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக கருணாநிதி தொடர்ந்து செய்யும் முயற்சிகள் ஒருபோதும் பயனளிக்கப்போவதில்லை. உலகத் தமிழர்கள் அவரை மன்னிக்கப்போவதுமில்லை. என அவர் அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.

Read more...

தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று கருணாநிதியை வரலாறு தூற்றும்

முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் விடுதலைப்புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக அழுவதாகப் புலம்புகிறார்.

இது தொடர்பாக இந்திய நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி:-

மௌனத்தின் வலி: கருணாநிதி வேதனை

இலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின என்பதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? என்று முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், அந்த மௌனத்தின் வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது.

நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகி விட்டன. வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு, இதுபோன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். அதை நாம் தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தாலோ என்னவோ அலட்சியப்படுத்தி விட்டார்கள்.

"எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ?' என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்த போதுகூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றது.

"இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். அமைதி முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார் அவர். தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். மேலும், 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தமிழ் மக்களை தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால், தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்' என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இலங்கை அதிபர் தேர்தலில் 1.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் விக்ரமசிங்கே தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை.

இதை எண்ணிப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின, எங்கே போய் முடிந்தன என்பதை நினைத்துப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? நம்முடைய மௌன வலியாருக்குத் தெரியப் போகிறது?'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். (Dinamani - November 18,2009)

கருணாநிதியின் மேற்படி பாசாங்கு அறிக்கை தொடர்பாக "நக்கீரன்" வெளியிட்டுள்ள விளக்கம்

கருணாநிதிக்கு அறளை பிறந்துவிட்டது என்பதற்கு அவரது இந்த அறிக்கை நல்ல சான்று. இல்லை பாசாங்கு செய்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை எப்போதோ விலக்கிக் கொண்டுவிட்டோம். விடுதலைப்புலிகளோடான அணுகுமுறையில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அணுகுமுறைதான் எங்களது அணுகுமுறை என்று நாக்கூசாமல் - வெட்கமோ துக்கமோ சிறிதளவுமின்றி - தமிழக சட்டசபையில் பேசிய கருணாநிதி இப்போது "விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது" எனப் புதுக் கதை பேசுகிறார்.

வி.புலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு கட்டளை போட்டு காவல்துறை கைது செய்த நூற்றுக் கணக்கான வி.புலிகள் என அய்யப்பட்டவர்களை இன்றும் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து அழகு பார்க்கும் கருணாநிதி "ஆதரவு வழங்கினோம்" என அப்பட்டமான பொய் சொல்கிறார்.

இப்போது கருணாநிதிக்கு ரணில் விக்கிரமசிங்க மீது அளவுகடந்த பாசம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. அவரைப் புலிகள் தோற்கடித்துவிட்டார்கள் என்று கருணாநிதி ஒப்பாரி வைக்கிறார்.

இந்த விக்கிரமசிங்கவும் அவரது கட்சிக்காரரும்தான் கருணாவை விலைபேசி புலிகளிடம் இருந்து பிரித்தார்கள். தேர்தலின் போது அதைச் சொல்லித்தான் பரப்புரை செய்தார்கள்.

இந்த ரணில் விக்கிரமசிங்கதான் . தீர்வு எதனையும் முன்வைக்காமல் பேச்சுவார்த்தையை இழுத்தடித்தவர். 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் 05 ஆம் நாள் ஒஸ்லோவில் நடந்த மாநாட்டில் விடுதலைப்புலிகள் உள்ளக தன்னாட்சி யோசனையை முன்வைத்தார்கள். அதனை அவரது பதவி காலத்தில் நடைமுறைப்படுத்த ஒரு சின்ன அசைவைக்கூடச் செய்யாதவர்.

விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்தியாவின் துணையோடு மூழ்கடித்தவர். அந்தச் சாதனையை நாடாளுமன்றத்தில் பெருமையாகப் பேசியவர்.

மேற்குநாடுகளின் செல்லப்பிள்ளையாக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க மேற்குநாடுகளின் துணையோடு விடுதலைப்புலிகளை வீழ்த்த சதிசெய்தார். விடுதலைப் புலிகளை சிக்க வைக்க வலை பின்னினார்.

இது போன்ற காரணங்களின் அடிப்படையில்தான் தேர்தலை விடுதலைப்புலிகள் புறக்கணித்தார்கள். இரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசும் வேண்டாம் என்பதே அவர்களது கணிப்பாக இருந்தது. ஏனென்றால் ரணில் விக்கிரமாசிங்கவும் ராஜபக்சவும் அடிப்படையில் சிங்கள - பெளத்த இனமத வெறியர்கள்.

விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்திய அரசு செய்த சதிதான் காரணம். அதில் பங்காளியாக இருந்த திமுக கட்சியும் காங்கிரஸ் கட்சியும்தான் காரணம். இந்தியா மட்டும் ஒதுங்கி இருந்திருந்தால் விடுதலைப்புலிகளை போர்க்களத்தில் வீழ்த்தியிருக்க முடியாது.

இதனை நேற்றுக் கூட இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார். இலங்கையை காப்பாற்றியது இந்தியாதான் என மீண்டும் சத்தியம் செய்திருக்கிறார். இதோ கருணாநிதிக்கு பல்லக்குத் தூக்கும் விடுதலையில் (17-11-2009) வந்த செய்தி.

கொழும்பு, நவ. 17_- விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக்கட்ட போரின்போது இந்தியா அளித்த ஆதரவு காரணமாகவே இலங்கை மீதான உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயல-ரும், அதிபர் ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், இந்தியா அளித்த ஆதரவினால்தான் போரை நிறுத்தக்-கோரும் உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்து, தொடர்ந்து தாக்குதலை நடத்த முடிந்ததாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா என்று கூறிய கோத்தபாய, கடந்த நான்காண்டுகளில் இந்த நட்பு மேலும் நெருக்கமானதாகவும், புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா பல வகைகளில் உதவிபுரிந்ததாகவும் தெரிவித்தார்.

எனவேதான் கருணாநிதியின் கைகளில் தமிழீழ மக்களது குருதி தோய்ந்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம். வரலாறு தலைவர் பிரபாகரனை தமிழன் மானம் காத்த சுத்த வீரன் என்று போற்றும். கருணாநிதியை தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று தூற்றும். வரலாற்றின் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும்.

நக்கீரன்

Read more...

தமிழர்களை மீட்க மறுத்த இந்தியா ராஜபக்சேவை மட்டும் காப்பாற்ற துடிப்பதா - பழ.நெடுமாறன்

இலங்கையில் தமிழர்களை மீட்க மறுத்த இந்தியா ராஜபக்சேவை மட்டும் காப்பாற்ற துடிப்பது ஏன்? என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், தனது ஆட்சியைக் காப்பாற்ற இந்தியப் படையை அனுப்புமாறும் இந்திய அரசுக்கு ராஜபக்சே விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்தியப் படை அக்டோபர் 15ஆம் தேதி ஆயத்த நிலையில் வைக்கப்பட்டதாக இலங்கை கூட்டுப்படைத் தளபதி பொன்சேகா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பாக ராஜபக்சேயை நேரில் சந்தித்த போதும் பொன்சேகா கூறியபோது அதை மறுக்கும் வகையில் ராஜபக்சே எதுவும் கூறவில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்கள ராணுவத்தினால் சுற்றி வளைத்துக் கொல்லப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக தலையிடுமாறு இந்திய அரசை தமிழக மக்கள் ஒன்றுபட்டு வற்புறுத்தியபோது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிட முடியாது என இந்தியப் பிரதமர் மறுத்தார்.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் பதைக்க பதைக்க படுகொலை செய்யப்பட்டபோதும், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தொடர்ந்து கொல்லப்பட்ட போதும் ராணுவ ரீதியாகத் தலையிட மறுத்து இந்திய அரசு ராஜபக்சேயைக் காப்பாற்ற படையை ஆயத்த நிலையில் வைத்தது என்ற செய்தி தமிழர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

மேலும் இலங்கைக்கு ராணுவ ரீதியாக உதவி எதுவும் செய்யவில்லை என்று இடைவிடாமல் மறுத்த வந்த இந்திய அரசு, தான் கொடுத்த இரு போர்க்கப்பல்களை திரும்பக் கேட்டுள்ளது என்ற செய்தியும் இந்திய அரசின் உண்மை உருவத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.

தமிழக மக்கள் இனியாவது இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று தனது அறிக்கையில் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP