கரும்புலிகள் நாள் - 2011

உன் வசமாகும் உலகு.. கரும்புலிகள் உயிராயுதம்



காற்று நடக்கிறது கை வீசீ
பால் நிலவு பூத்துக் கிடக்கிறது பாலைப் பொழிந்தபடி..
நேற்றிரவைப் போல
நெடுங்கேணி குலுங்குகிறது
துரத்தே வெடிக்கும் சுடு குண்டின் அதிர்வினுக்கே
ஈரக்குடல் வற்றியிருக்கிறது...

நெஞ்சுக்குள்ளே எதோ திரண்டு எழும் மூச்சை அடைக்கிறது
சேதாரமாச்சா
எம் திருவாழ்வு
கைப் பிடிக்குள் மலந்திருந்த வாழ்வின்
மகிமை
வேரறுந்து தளர்ந்துள்ளதாதென்று...

சாவே எம் நாளாந்தம் என்றாச்சா
எமையேன்
இந்த இடரேன் தொடர்கின்றது
குன்றாய் நிமிர்ந்த
குலம் இடிந்து
பள்ளத்தில் விழும்படியான விதியேன் கவிழ்ந்துள்ளது...

பாழும் இருள் விலக்கும்
பருதியும் வானத்தில் ஏன் இன்னும் வந்தெழவில்லை
எம் தலையில் மானத்துக்கு அணியும் மகுடம்
ஏன் கிடைக்கவில்லை...

வேறொன்றுமில்லை விடுதலையின் மீது
எமக்கு ஆராத காதல் அனுபவமில்லை
அவதரித்த தாய் நிலத்தின்மீது
தனி அன்பு பெருக வில்லை
தீயுண்ட நெஞ்சம் சினம் கொண்டு சீறவில்லை
போத்தல் அடைத்த புலனாய்
நேற்று இரவு கூத்து முடிந்த கூத்தரங்காய் பேசாமல் போர்த்துக் கிடக்கிறோம்...

புதுவாழ்வு கை வருமா
வாராது காணும்
வல்லமைக்கு திலகமிட்டு போராட வேண்டும்
புறப்படுமோய் புறப்படுமோய்.. ஏன் காணோம் வானத்து அரசன் வந்திறங்கி
எம் கையில் தானமென விடுதலை தருவான...

நாமேதான் எழுந்தெமக்கு
எதிரான எதையும் சரித்துவிடும் பலத்தோடு எழுந்து பகை விழுத்தவேண்டும் காண்
அஞ்சாமை ஆற்றல்
அடங்காவலு வாழ்வை பஞ்சைப் போல எண்ணும் பக்குவம் இவை வேண்டும் நம்பிக்கை
வேண்டும்...

நாளை நமக்கெனும்
தென்பு எமக்கு வேண்டும் துணிவெனும் பலமுடைய தும்பிக்கை வேண்டும்
தொடர்ந்து அலைக்கும்
துயர் இருளை கண்டு சிரிக்கின்ற கனிவான மனம் வேண்டும்
தொண்டு தொழும்பறியாய் சுடரொளியாய்
என் நாளும் நடக்கும் பலம் வேண்டும்
நடுவழியில் விட்டகலா பிடைக்கும் தோள் வேண்டும்
பிறகெல்லாம் உன் வசமே.....!

புதுவை இரத்தினதுரை

Read more...

ஈழத்தில் புலி கொடி பறக்கும்; தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும் : மதிமுக

மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சியில் உள்ள ஹோட்டல் பெமினாவில் இன்று காலை தொடங்கியது. 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


இம்மாநாட்டில் புலிகள் மீதான தடை குறித்து மாநில மாணவர் அணி அமைப்பாளர் பாசறை பாபு பேசினார்.


அவர், ’ஹிலாரி கிளிண்டன் உட்பட அனைத்து தலைவர்களும் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கிறார்கள்.


இந்திரா காந்தியை கொன்ற அமைப்புக்கு தடை இல்லை. இந்தியாவில் பல தீவிரவாத செயல்களை செய்த காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை இல்லை.

புலிகள் என்ன தவறு செய்தார்கள் இந்த மண்ணில். ஈழத்தில் புலி கொடி பறக்கும் ..... தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும்.

இலங்கை அரசு 2009க் கு பிறகு எங்கள் மண்ணில் புலிகள் இல்லை என்று சொல்லிய பிறகும் இந்த மண்ணில் புலிகளுக்கு தடை நியாயமா.


எங்கள் தலைவர் தலைமையில் நீதிமன்றத்தில் புலிகளுக்கான தடை நீங்கும்....பல லச்சம் மக்களை கொன்ற ராஜபக்சே கொல்லப்பட வேண்டும்’’ என்று பேசினார்.

Read more...

சானல் 4-ன் ‘கொலைக்களம்’ - வீடியோ

இலங்கையில் ராஜபக்சவின் இனவெறி இராணுவம் நடத்திய தமிழின அழிப்பின் காணொளி பதிவு ஒன்றை ‘கொலைக்களம்’ என்ற பெயரில் சானல் 4 தொலைக்காட்சி இன்று வெளியிட்டது.

இலங்கையில் தமிழினம் எப்படியெல்லாம் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு உடபடுத்தப்பட்டது என்பதை பல காணொளிகள் மூலம் உலகின் பார்வைக்குக் கொண்டு வந்த சானல் 4, அங்கு நடந்த மிகப் பெரிய படுகொலைக்கு ஆதாரமான மிகப் பெரிய காணொளியை இன்று (14-06-2011 இரவு 11.00 மணிக்கு) வெளியிட்டது.
காட்சிகளை பார்க்கும் அதிகாரிகள் கூட கண்கலங்கும் காட்சிகள் பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.

அந்த வீடியோ காட்சிகள் :



கொலை பாதகன் ராஜபக்சே சர்வச குற்றவாளி கூண்டில் எப்போது ஏற்றப்படுவான்..இனப் படுகொலைக்கு என்று வரும் ஒரு தீர்வு...
தன் சொந்த மண்ணில் உரிமைகள் இழந்து உணர்வுகள் இழந்து இலங்கை ராணுவ துப்பாக்கிகளுக்கு இறையாகும் தம் இனம் என்றுதான் சுதந்திர காற்றை தனிஈழம் அமைத்து சுவாசிக்குமோ...

நன்றி - கவிதை வீதி சௌந்தர்

Read more...

ஐரோப்பிய நாடாளுமன்றில் வைகோ

ஜூன் 1ம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வரலாறு படைக்கும் தீர்மானம் ஒன்றை தமிழர்கள் நிறைவேற்றவுள்ளனர். இதற்கான அனைத்து வேலைகளும் பூர்த்தியாகிவிட்ட நிலையில், தற்போது சென்னையில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பெல்ஜியம் சென்றுள்ளார்.



சற்று முன்னர் அவர் பிரசில்ஸ் நகரில் இறங்கியுள்ளதாகவும், ஜூன் 1ம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றில் உரை நிகழ்த்தவுள்ளதாகவும் அறியப்படுகிறது. பிரித்தானியா தமிழர் பேரவையின்(BTF solidarity group) கருத்தாதரவுக் குழு குழுவால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தீர்மானம் நிறைவேற்றும் நிகழ்வு, ஐரோப்பிய பாராளுமன்றில் பல நடாளுமன்ற உறுப்பினர்கள் முந் நிலையில் நடைபெறவுள்ளது.



பிரித்தானியாவில் உள்ள மூன்று மாபெரும் கட்சிகளை உள்ளடக்கி, பல நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழர்களுக்காக இணைத்து, தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அமைப்பு முன்னர் உருவாக்கப்பட்டது. அதன்மூலம் பிரித்தானியாவில் இருந்து ராஜதந்திர மட்டத்தில் பல நகர்வுக்ளை பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட பல அமைப்புகள் நகர்த்திவந்தது. இவ்வமைப்பு அரசியல் மட்டத்தில் பலம்பொருந்திய அமைப்பாகத் திகழ்வதோடு, பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை குறித்து விவாதிக்கவும் தமிழர்களின் நலன்கள் குறித்து பேசவும் பேருதவியாக அமைந்தது.



அது பிரித்தானியாவில் மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது பல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைச் சேர்த்து தமிழர்களுக்கான அனைத்து ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் குழு என்று ஒரு அமைப்பு உருவாக்கப்படவுள்ளது. இந்து ஒரு வரலாறு படைக்கும் நிகழ்வாகக் கருத்தப்படுகிறது. புலம்பெயர் தமிழர்கள் பல கட்டங்களில் பல ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டிருந்தாலும், காலத்தின் தேவை கருதி இதுபோன்ற ஒரு பாரிய நகர்வையும் தமிழர்கள் மேற்கொண்டுள்ளது பாராட்டப்படவேண்டிய விடையமாக உள்ளது. இக் குழுவை நியமிப்பதன் மூலம் ஐரோப்பிய பாராளுமன்றில் தமிழர்களுக்கான குரல் ஓங்கி ஒலிக்கவுள்ளது என்பது நிச்சயமாகியுள்ளது என்றே கூறவேண்டும். பல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெற்றது போர் குற்றம்தான் என்ற மன நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு முழுமையான தரவுகளோ இல்லை அதுகுறித்த செய்திகளோ தெரியாத நிலை காணப்படுகிறது.

இவ்வாறு தமிழர்களுக்கு என்று ஒரு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அமைவதால், தமிழர் தரப்பு அவர்களோடு நெருங்கிய உறவைப் பேண முடிவதோடு நடைபெறும் அநியாயங்களையும், நடந்து முடிந்த கொடூரங்களையும் அவர்களுக்கு தெளிவுபடுத்த முடிவதோடு தமிழர்களுக்காக குரல்கொடுக்க அவர்களை தயார்ப் படுத்தவும் முடியும். இதுபோன்ற குழு ஒன்று அமையவுள்ளதும், மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றில் தமிழர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளமையும் இலங்கை அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக அறியப்படுகிறது. முடிந்தவரை இதனைத் தடுக்க இலங்கை அரசு பெரும் பிரயத்தனத்தை காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றில் சிறப்புரையாற்ற வைகோவும் வந்துள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவையின் கருத்தாதரவுக் குழு(BTF solidarity group) குழு முன்னேடுத்துள்ள இந்த வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நகர்வுக்கு புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

Read more...

கருணாநிதி டிராமா... குடும்பசாட்சி



2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு, சென்னையில் இருந்த அமெரிக்க துணைத் தூதர்ஆண்ட்ரூ சிம்கின் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் தயாநிதி மாறனுடன் தான் பேசிய விவரத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், தயாநிதி மாறன் மற்றும் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருடன் தான் பேசியதை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தனது கட்சி எம்.பிக்கள், மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்யப் போவதாக கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு நாடகம் என்று தயாநிதி மாறன் அப்போது தெரிவித்தார். மின் வெட்டுப் பிரச்சினை, அதனால் ஏற்பட்டுள்ள மக்களின் கடும் கோபம் ஆகியவற்றிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே கருணாநிதி இவ்வாறு அறிவித்துள்ளார்.



காங்கிரஸ் கட்சியின் செயலுக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்பதாக காட்டிக் கொள்ளும் நாடகமே இது. தானும் இதில் பங்கேற்று ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விட தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் நோக்கமே கருணாநிதியிடம் இருந்தது.

மேலும் கருணாநிதி அரசு இதுவரை எந்த அரசு மீதும் இல்லாத அளவுக்கு மக்கள் மிகவும் கோபமாக இருப்பதாகவும் தயாநிதி மாறன் கூறினார்.

ஆனால் கருணாநிதி நடத்திய நாடகத்தால், திமுகவிடமிருந்து காங்கிரஸ் குறிப்பாக சோனியா காந்தி விலகத் தொடங்கினார். கருணாநிதியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் சரியான பதிலடியை பொருத்தமான நேரத்தில் கொடுக்கும். அதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

கருணாநிதியின் மகள் கனிமொழியை சமீபத்தில் சந்திக்க மறுத்தார் சோனியா. இதற்கு திமுக மீதான சோனியா காந்தியின் அதிருப்தி அதிகரித்ததே காரணம்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்குப் பழி வாங்க வேண்டும், பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உறுதியாக உள்ளனர் என்றும் தயாநிதி மாறன் கூறியிருந்தார்.




பீ்ட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து தனது எம்.பிக்களை வாபஸ் பெற மாட்டார் கருணாநிதி என்று உறுதிபடக் கூறியிருந்தார். தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக, தான் வலுவாக இருப்பதாக காட்டிக் கொள்ளவே இவ்வாறு அறிவித்தார் (எம்.பிக்கள் ராஜினாமா செய்வதாக) கருணாநிதி. மற்றபடி, அனைத்துக் கட்சிக் கூட்டம், தீர்மானம் என்பதெல்லாம் சப்பைக் கட்டுதான்.

காங்கிரஸுடனும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனும் இணைந்து இருப்பது ஒன்றுதான் திமுகவுக்கு உள்ள ஒரே வழி என்று கூறியிருந்தார் பீட்டர்.

ஆனால் தாங்கள் ராஜினாமா செய்யப் போவதாக திமுக கூறியது காங்கிரஸ் மேலிடத்தை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியது உண்மை. மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பாதையில் திமுக திரும்புகிறதோ என்று காங்கிரஸ் கருதியது என்று கூறியுள்ளார் பீட்டர்.

இந்த இருவரின் பேச்சுக்களையும் வைத்துப் பார்க்கும்போது இரு கட்சிகளுமே ஒரு சுயநலத்தோடுதான் உறவு வைத்துள்ளன என்பது தெரிய வருகிறது. முதல்வர் பதவியில் தான் நீடிக்க காங்கிரஸின் தயவு கருணாநிதிக்குத் தேவை. அதேபோல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு டெல்லியில் நீடிக்க கருணாநிதியின் தயவு காங்கிரஸுக்குத் தேவை.

இதன் விளைவாகவே இந்த அரசியல் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றியிருப்பதாக தெரிகிறது. உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து சில மணி நேரங்களில் அதை அவர் முடித்துக் கொண்டார். அதேபோல ராஜினாமா செய்யப் போவதாக கூறினார். ஆனால் யாருமே ராஜினாமா செய்யவில்லை.

கருணாநிதியின் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் போதிய அவகாசம் கொடுத்ததால் தனது நாடகங்களை முடித்துக் கொண்டார் கருணாநிதி என்று அந்த கேபிளில் சிம்கின் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

கருணாநிதியின் உண்ணாவிரதம் ஒரு மிகப் பெரிய நாடகம் என்று முதல்வர் ஜெயலலிதா அப்போதே கூறியிருந்தார். பல்வேறு கட்சிகளும் கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தை கண்டித்திருந்தன. இந்த நிலையில் கருணாநிதி நாடகமாடினார் என்று தயாநிதி மாறனே அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP