மக்களாட்சியை மன்னராட்சியாக்கும் கருணாநிதி...
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது முதல்வர் பதவியிலிருந்தும், அரசியலிலிருந்தும், வரும் ஜுன் மாதத்தின் பின் ஒய்வு பெறலாம் எனத் தமிழகச் செய்திகள தெரிவிக்கின்றன.
நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அருந்ததியர் சமூககத்தினரினால் நடத்தபட்ட பாராட்டுவிழாவில் உரையாற்றும் போது அவர் இதனை மறைமுகமாகத் தெரியப்படுத்தினார் என மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்கு அவர் ஆற்றிய உரையில், தன் வாழ்நாளில் செய்யவேண்டும் என நினைத்த விடயங்களை சரிசரச் செய்திருப்பதாகவும், அந்த வகையிலேயே அருந்ததியர் சமூகத்துக்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டிருப்பதாகவும், தெரிவித்தார். இனி வரும் நாட்களில் தான் செயவேண்டிய சில பணிகளே உள்ளன. அவைகளில் முக்கிய மானவை, புதிய சட்டமன்ற வளாகம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், உலகச் செம்மொழி மாநாடு, என்பனவே அவைய. இவற்றினை நிறைவேற்றி முடிந்து விட்டால், அதன் பின் அரசியல், அமைச்சர் பதவிகளை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடன் இன்னும் நெருக்கமாக வருவேன் எனத்தெரிவித்தார்.
இவ்வாறு முதல்வர் கூறியிருப்பது அரசியலை விட்டு அவர் ஓய்வெடுக்க முடிவு செய்திருப்பதாக கருதப்படுகிறது. இதன்மூலம் தனது மகனுக்கு மகுடம் சுட்டி மக்களாட்சியை மன்னராட்சியாக மாற்றவுள்ளார். முதல்வரின் மறைமுகமான இந்தத் திடீர் அறிவிப்பு திமுகவினரிடையே சிறிமது சலசலப்பினை ஏற்படுத்தியள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே திமுகவில் நடைமுறைப்படுத்தப்படும் அதிகார மாற்றத்தின் ஒரு பகுதியாகவே முதல்வர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment