சென்னையில் பரபரப்பு சிங்களவர்கள் மீது தாக்குதல்


சென்னை எழும்பூர் கென்னத் லேனில், சிங்களர்களின் மகாபோதி சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கு இலங்கை அரசு நிதியுதவி செய்கிறது. இங்கு ஒரு புத்தர் கோவிலையும் வைத்துள்ளனர். இங்கு இலங்கையைச் சேர்ந்தவர்கள் தவிர நேபாள நாட்டினரும் வருவார்கள்.
Ancient ghosts Pictures, Images and Photos

நேற்று இரவு இங்கு திடீரென பத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். உள்ளே வந்தவர்கள், சரமாரியாக கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அலுவலக கண்ணாடி, கோவிலுக்குள் இருந்த கண்ணாடி, டிவி உள்ளிட்டவை உடைந்து சிதறின. கல்வீச்சில், புத்த பிக்குகள் மைதிலி, சமீத தேரா, வஜ்ர தேரா உள்ளிட்ட ஐவர் காயமடைந்தனர். அவர்களையும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தாக்கினர். இதையடுத்து அவர்கள் அலறியடித்தபடி உள்ளே ஓடினர். மேலும் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் அலறி அடித்து ஓடினர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் போனது. அதேபோல இலங்கை துணைத் தூதரகத்திற்கும் தகவல் போனது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அவர்களால் தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முடியவில்லை. சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை துணைத்தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார்? ஏன்? எதற்காக தாக்கினார்கள் என்று விசாரித்து வரும் போலீசார், தாக்குதல் நடத்திய கும்பலை தேடும் பணியையும் முடுக்கிவிட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை கடந்த பத்து நாட்களில் 2 தமிழக மீனவர்களை கொடூரமாகக் கொன்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொதிப்பான நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கு. இந்தப் பின்னணியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது


நன்றி
- தமிழ் கூடல்
- போட்டோ பக்கட்

Read more...

தமிழக கடல் வழியே இலங்கைக்கு 1000 வாட் மின்சாரம் - ஷாக் ரிப்போர்ட்

"எல்லாத்துக்கும் மேல் மின் பற்றாக் குறையால் தமிழகமே தத்தளிக்கும் போது.... ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சிங்களவனுக்கு மின்சாரம் தருவதை ஏற்கவே முடியாது. போராட் டம் பெரியளவில் வெடிக்கும்'' என்கின்றனர்."

இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு பிறகு அந்த நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டிருக்கும் இந்திய அரசு, தற்போது தமிழகம் வழியாக இலங்கைக்கு மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது கண்டு தமிழர் அமைப்புகளும் மீனவர் அமைப்புகளும் கொதித்துப்போயிருக்கின்றன.

இந்திய மின் தொகுப்பு கழகமும் (பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இண்டியா) இலங்கை மின்சார வாரியமும் இணைந்து, தமிழகத்திலுள்ள ராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கடலுக்கடியில் மின்கேபிள்கள் மூலம் மின் பகிர்மா னம் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான அகழாய்வு பணிகளை துவங்க திட்டமிடப் பட்டுள்ளன.


இதுகுறித்து தெரிவித்துள்ள இலங்கை மின் வாரிய சேர்மன் வித்ய அமரபால,’""அரசின் ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் இந்த பணி துவங்கும்'' ’என்றிருக்கிறார்.

இந்த திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது பா.ம.க., மற்றும் இந்து மக்கள் கட்சி. இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப் பாளர் கண்ணன்,’’""இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ள இந்த மின் திட்டத்திற்கான மொத்த தூரம் 125 கிலோமீட்டர். இதில் கடலுக்கடியில் மட்டும் 50 கிலோ மீட்ட ருக்கு மின்சார கேபிள்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் திட்டச்செலவு 4 ஆயிரம் கோடி ரூபாய்.


இதில் 1 கோடி ரூபாய் செலவில் கடலுக்கடியில் மின்கேபிள்கள் அமைப்பதற்கான ஆய்வுகள் செய்ய மத்திய அரசின் மின் தொகுப்பு கழகம் முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டம் செயல் படுத்தப்படும்போது இலங்கைக்கு 1000 மெகா வாட் மின்சாரத்தை இந்தியா வழங்கும். தமிழகத் தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர் களை வகைத்தொகையாக படுகொலை செய்த இலங்கைக்கு மின்சாரம் வழங்க இந்தியா முடிவு செய்திருப்பது கண்டு நெஞ்சு பொறுக்கவில்லை.

நீதிமன்றத்தின் மூலம் இதனை தடுத்து நிறுத்துவதற்கு வழி உண்டா என்று சட்ட நிபு ணர்களுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருக் கிறோம். தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் காங்கிரஸை வேரறுக்க தமிழர் களுக்கு ரோஷம் வரவேண்டும். அப்போதுதான் தமிழர்களுக்கு எதிராக சிந்திப்பதை காங்கிரஸ் தலைமை நிறுத்தும்''’’என்கிறார் ஆவேசமாக.

இந்திய அரசின் இந்த திட்டத்தை அறிந்து பதட்டமடைந்திருக்கிறார்கள் தமிழக மீனவர்கள் சங்கத்தினர். நம்மிடம் பேசிய இந்திய மீனவர் பேரவை நிறுவனத் தலைவர் ஆவின் பாபு, தமிழ் நாடு மீன வர் முன் னேற்ற சங் கத்தின் தலை வர் கோசு மணி, தென் னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் கு.பாரதி, ""160 கிலோ மீட்டர் பரந்து விரிந்துள்ள மன்னார் வளைகுடா பகுதியில் 3600-க்கும் மேற்பட்ட அரிய வகையிலான கடல்வாழ் உயிரினங்களும் பவளப் பாறைகளும் உள்ளன.

under the sea Pictures, Images and Photos

இதனை ’தேசிய கடல்வாழ் உயிரின பூங்கா’என்று தமிழக அரசு பராமரித்து வருகிறது. இந்தச் சூழலில், கடல் வழியாக இலங்கைக்கு மின்சாரம் வழங்க மேற்கொள்ளப்படும் ஆய்வு பணிகளால் அரியவகை கடல்வாழ் உயிரினங்களும் தாவரங்களும் பவளப்பாறைகளும் அழிந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் மீனவர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். தவிர மின் கேபிள்கள் அமைக்கப்பட்டு மின்பகிர் மானத்தின் போது ஏதேனும் சிறிய தவறு ஏற்பட்டாலும் ஜீரணிக்க முடியாத விளைவுகளும் ஏற்பட்டு விடும். எல்லாத்துக்கும் மேல் மின் பற்றாக் குறையால் தமிழகமே தத்தளிக்கும் போது.... ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சிங்களவனுக்கு மின்சாரம் தருவதை ஏற்கவே முடியாது. போராட் டம் பெரியளவில் வெடிக்கும்'' என்கின்றனர்.

இந்த மின்சார திட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும்

தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு,’’""யுத்தம் என்கிற பேரில் ஈழத்தில் தமிழினப் படுகொலை செய்தது ராஜபக்சே அரசு. உலகின் பல்வேறு நாடுகள், "இனப்படு கொலை செய்த நாடு இலங்கை' என்று பதிவு செய்து கொண்டு வருகின்றன. ஐ.நா.மன்றமும் ராஜபக்சேவின் போர்க் குற்றங்களை விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது. இதனையெல்லாம் சிறிதும் மதிக்காமல், போரின் போது இலங்கைக்கு ஆதரவாக எப்படிப்பட்ட உதவிகளெல்லாம் செய்து ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இந்தியா துரோகம் செய்ததோ... அப்படியே போருக்கு பிறகும் செய்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகம் வழியாக இலங்கைக்கு மின்சாரம் என்பது தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் இந்தியா செய்கிற ஜீரணிக்க முடியாத பெரிய துரோகம். முளையிலேயே இதனை கிள்ளி எறிய தமிழர்கள் ஒன்று திரள வேண்டும். இல்லையேல் தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸின் நடவடிக்கைகள் அதிகரிக்கவே செய்யும்''’என்கிறார்.

தமிழகம் வழியாக மின்சாரம் என்பதால் தமிழகத்திற்கான மின் ஒதுக்கீட்டிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்கப்படும் என்கிற சந்தேகம் பலருக்கும் இருப்பதால், இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மன் கபிலனிடம் கேட்டபோது,’’" "இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தும் மின் தொகுப்புக்குள் கொண்டு வரப்பட்டு... மின் தொகுப்பி லிருந்துதான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு மின்சாரம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டு அதற்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது.


இலங்கைக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பாக இந்திய மின்தொகுப்பு கழகம் எந்த மாதிரியான செயல்முறைகளை கையாளுகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால்... தமிழகத்திற்கான மின் ஒதுக் கீட்டிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்கப் படாது என்பதை மட்டும் உறுதியாக தெரிவிக்க முடியும். அதனால் அந்த சந் தேகம் யாருக்கும் வேண்டாம்''’’என்கின்றார்.நன்றி - Tamilcanadian

Read more...

சினைமுட்டை விற்கும் இளம்பெண்கள்! புதுச்சேரிவியாபாரவிபரீதம்!

மாநிறமான பெண்ணின் சினைமுட்டை ரூ. 10 ஆயிரம்... சிவப்பான இளம்பெண்ணின் சினைமுட்டை ரூ. 50 ஆயிரம்... லட்சணமான, கல்லூரி மாணவியின் சினைமுட்டை ரூ. ஒரு லட்சம்... கேரளப் பெண்ணின் சினைமுட்டை ரூ. 3 லட்சம்...

இப்படி சினைமுட்டை வியாபார விபரீதம் மேலை நாடுகளில் அல்ல... நமது புதுச்சேரியில்தான் ஜரூராய் நடக்கிறது.

‘‘குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு உருவாக்க வாடகைத் தாய், சினைமுட்டை தானம் போன்ற முறைகள் மருத்துவத் துறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள் சிலரோ சினைமுட்டை தானத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் கரன்ஸி வேட்டைக்கு இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளை இரையாக்குகிறார்கள்’’ என்று அதிர்ச்சியோடு சொல்கிறார்கள் புதுச்சேரி சமூக ஆர்வலர்கள். இது பற்றி புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையின் சீனியர் பெண் மருத்துவர் ஒருவரிடம் பேசினோம்.

‘‘வலுவில்லாத சினைமுட்டை, ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால் சிலருக்கு பிள்ளைப் பேறு கிடைப்பதில்லை. இப்படி குழந்தைக்காக ஏங்கும் மேல்தட்டு, நடுத்தர மக்கள் லட்சக்கணக்கில் செலவு செய்ய தயாராக இருப்பதை சில மருத்துவ வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அவர்கள்தான் சினைமுட்டை குறைபாடுள்ளவர்களுக்கு குழந்தைப் பேற்றை உருவாக்க வேறொரு பெண்ணிடமிருந்து சினைமுட்டையை பணம் கொடுத்து தானமாக பெறுகிறார்கள். ஆனால், இப்போது தானம் என்ற பெயரில் இது வியாபாரமாகிவிட்டதுதான் கொடுமை.

சினைமுட்டையை தானமாகப் பெறுவதற்கு இந்திய மெடிக்கல் கவுன்சில் சில சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறது. சினைமுட்டை கொடுக்கும் பெண்ணிற்கு ஆஸ்துமா, இதயக் கோளாறு, மஞ்சள் காமாலை, ரத்த சோகை போன்ற நோய்கள் அல்லது பரம்பரை நோய் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். அதன்பிறகே சினைமுட்டையை எடுக்கவேண்டும். காரணம், ஆரோக்கியமான பெண்ணிடம் இருந்து சினைமுட்டை எடுத்தால்தான், அதைப் பெறும் பெண்ணுக்குப் பிறக்கக்கூடிய குழந்தையும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

ஆனால், பணத்தாசை பிடித்த டாக்டர்கள், சினைமுட்டை தரும் பெண்களிடம் சுகர், ரத்த அழுத்தம், எச்.ஐ.வி. மாதிரியான சில பரிசோதனைகளை மட்டும் செய்துவிட்டு, சினைமுட்டைகளை எடுத்து விற்கிறார்கள்’’ என்றார் வேதனையோடு.

அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் சிலரோ, “இந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் டாக்டர்களில் பலர் சொந்தமாக கிளினிக்குகள் நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களிடம் பணிபுரியும் நர்ஸ்கள், கம்பவுண்டர்களையே சினைமுட்டை புரோக்கர்களாக பயன்படுத்துகிறார்கள்.

சினைமுட்டை கொடுக்கும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளம் விதவைகளுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையும், சிவப்பான இளம் பெண்களுக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையும், அழகான காலேஜ் பெண்களுக்கோ ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரையும், கேரளப் பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரையும் கொடுக்கப்படுகிறது.

சினைமுட்டையை விற்பதில் பெரும்-பாலோர் காலேஜ் பெண்கள்தான். இது-போன்ற சினைமுட்டை விற்பதால், உடம்பில் வெளிப்படை-யாக எந்த மாற்றமும் தெரியாது என்பதால் இடைவெளி விட்டு இந்த பெண்கள் சினைமுட்டைகளை தொடர்ந்து விற்றுவருகிறார்கள்.

சினைமுட்டையை, ஒரு பெண்ணிடமிருந்து எடுப்பதற்கு 10 நாட்கள் முன்பிருந்தே தொடர்ந்து ரூ. 600 மதிப்புள்ள ஹார்மோன் ஊசிகளைப் போடவேண்டும். அந்த ஊசிகளையும் இந்த அரசு ஆஸ்பத்திரியில் ஓசியில் போடுகிறார்கள். பிறகு தங்­­­­­களுடைய கிளினிக்குக்கு வரச் சொல்லி, சினைமுட்டையை எடுத்துவிடுகிறார்கள். சினைமுட்டை கொடுப்பவர்களிடம் முதலில் பெரிய தொகையைக் கொடுப்பதாகச் சொல்கிற டாக்டர்கள், பின்பு குறைந்த தொகையைக் கொடுத்து ஏமாற்றிவிடுகிறார்கள்.

புதுச்சேரியை அடுத்துள்ள ஒரு கிராமத்துப் பெண்ணிடம் சினைமுட்டை பெறுவதில் இந்த ஆஸ்பத்திரி டாக்டர்களான ஒரு பெண் டாக்டருக்கும் ஒரு ஆண் டாக்டருக்கும் கடந்த வாரம் பிரச்னை வெடித்து, அது வடக்கு பகுதி எஸ்.பி.வரை போய், அவர் தலையிட்டு ஒரு வகையாக அமுக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு டாக்டருக்கு மெமோ கொடுக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்கள்.

இதுபற்றி புதுவையின் பிரபல பாலியல் குறைபாடு சிறப்பு மருத்துவரான பீட்டர் பால் அல்போன்-ஸிடம் பேசினோம். “சினைமுட்டை தானம் வெளிநாடுகளில் சாத்தியம். அங்கு சினைமுட்டை தானம் பண்ணுகிற பெண்களே இன்டர்நெட்டில் தன்னோட கூந்தல், தோல் நிறம், உருவ அமைப்பு போன்றவற்றையெல்லாம் சொல்லி விளம்பரம் செய்வார்கள். அதேபோல, இங்கே அந்த வேலையைச் செய்ய புரோக்கர்கள் இருப்பது வேதனையான விஷயம்.

திருமணமாகாத பெண்கள் பணத்திற்காக சினைமுட்டை கொடுக்க, அடிக்கடி ஹார்மோன் ஊசி போட்டுக்கொள்வதால்... பிற்காலத்தில் அப்பெண்களுக்கு உடல்ரீதியாகப் பல பிரச்னைகள் ஏற்படுவதோடு, அவர்களுக்கு பிள்ளை பிறக்கிற வாய்ப்புமில்லாமல் போகலாம்...’’ என்று எச்சரித்தார்.

இந்தச் சினைமுட்டை வியாபாரம் குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் திலிப்குமார் பாலிகாவின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். “சினைமுட்டை பிஸினஸ் பற்றி எந்த புகாரும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. இருந்தாலும், இனி கவனமாக செயல்படுவோம்...” என்றார்.

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் வல்சராஜிடம் பேசினோம். “இது சம்பந்தமாக இயக்குனர் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி, இம்முறைகேட்டைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்கிறேன்’’ என்றார்.

இளம் பெண்களின் எதிர்-காலத்தையே ‘முட்டை’யாக்கக் கூடிய இந்த சினைமுட்டை வியாபார விபரீதத்தை உடனடியாக தடுக்காமல் இருப்பது, எதிர்கால சந்ததிகளுக்கு செய்யும் துரோகம்!
- நன்றி - தமிழக அரசியல்

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP