தமிழக கடல் வழியே இலங்கைக்கு 1000 வாட் மின்சாரம் - ஷாக் ரிப்போர்ட்
"எல்லாத்துக்கும் மேல் மின் பற்றாக் குறையால் தமிழகமே தத்தளிக்கும் போது.... ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சிங்களவனுக்கு மின்சாரம் தருவதை ஏற்கவே முடியாது. போராட் டம் பெரியளவில் வெடிக்கும்'' என்கின்றனர்."
இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு பிறகு அந்த நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டிருக்கும் இந்திய அரசு, தற்போது தமிழகம் வழியாக இலங்கைக்கு மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது கண்டு தமிழர் அமைப்புகளும் மீனவர் அமைப்புகளும் கொதித்துப்போயிருக்கின்றன.
இந்திய மின் தொகுப்பு கழகமும் (பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இண்டியா) இலங்கை மின்சார வாரியமும் இணைந்து, தமிழகத்திலுள்ள ராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கடலுக்கடியில் மின்கேபிள்கள் மூலம் மின் பகிர்மா னம் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான அகழாய்வு பணிகளை துவங்க திட்டமிடப் பட்டுள்ளன.
இதுகுறித்து தெரிவித்துள்ள இலங்கை மின் வாரிய சேர்மன் வித்ய அமரபால,’""அரசின் ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் இந்த பணி துவங்கும்'' ’என்றிருக்கிறார்.
இந்த திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது பா.ம.க., மற்றும் இந்து மக்கள் கட்சி. இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப் பாளர் கண்ணன்,’’""இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ள இந்த மின் திட்டத்திற்கான மொத்த தூரம் 125 கிலோமீட்டர். இதில் கடலுக்கடியில் மட்டும் 50 கிலோ மீட்ட ருக்கு மின்சார கேபிள்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் திட்டச்செலவு 4 ஆயிரம் கோடி ரூபாய்.
இதில் 1 கோடி ரூபாய் செலவில் கடலுக்கடியில் மின்கேபிள்கள் அமைப்பதற்கான ஆய்வுகள் செய்ய மத்திய அரசின் மின் தொகுப்பு கழகம் முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டம் செயல் படுத்தப்படும்போது இலங்கைக்கு 1000 மெகா வாட் மின்சாரத்தை இந்தியா வழங்கும். தமிழகத் தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர் களை வகைத்தொகையாக படுகொலை செய்த இலங்கைக்கு மின்சாரம் வழங்க இந்தியா முடிவு செய்திருப்பது கண்டு நெஞ்சு பொறுக்கவில்லை.
நீதிமன்றத்தின் மூலம் இதனை தடுத்து நிறுத்துவதற்கு வழி உண்டா என்று சட்ட நிபு ணர்களுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருக் கிறோம். தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் காங்கிரஸை வேரறுக்க தமிழர் களுக்கு ரோஷம் வரவேண்டும். அப்போதுதான் தமிழர்களுக்கு எதிராக சிந்திப்பதை காங்கிரஸ் தலைமை நிறுத்தும்''’’என்கிறார் ஆவேசமாக.
இந்திய அரசின் இந்த திட்டத்தை அறிந்து பதட்டமடைந்திருக்கிறார்கள் தமிழக மீனவர்கள் சங்கத்தினர். நம்மிடம் பேசிய இந்திய மீனவர் பேரவை நிறுவனத் தலைவர் ஆவின் பாபு, தமிழ் நாடு மீன வர் முன் னேற்ற சங் கத்தின் தலை வர் கோசு மணி, தென் னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் கு.பாரதி, ""160 கிலோ மீட்டர் பரந்து விரிந்துள்ள மன்னார் வளைகுடா பகுதியில் 3600-க்கும் மேற்பட்ட அரிய வகையிலான கடல்வாழ் உயிரினங்களும் பவளப் பாறைகளும் உள்ளன.
இதனை ’தேசிய கடல்வாழ் உயிரின பூங்கா’என்று தமிழக அரசு பராமரித்து வருகிறது. இந்தச் சூழலில், கடல் வழியாக இலங்கைக்கு மின்சாரம் வழங்க மேற்கொள்ளப்படும் ஆய்வு பணிகளால் அரியவகை கடல்வாழ் உயிரினங்களும் தாவரங்களும் பவளப்பாறைகளும் அழிந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் மீனவர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். தவிர மின் கேபிள்கள் அமைக்கப்பட்டு மின்பகிர் மானத்தின் போது ஏதேனும் சிறிய தவறு ஏற்பட்டாலும் ஜீரணிக்க முடியாத விளைவுகளும் ஏற்பட்டு விடும். எல்லாத்துக்கும் மேல் மின் பற்றாக் குறையால் தமிழகமே தத்தளிக்கும் போது.... ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சிங்களவனுக்கு மின்சாரம் தருவதை ஏற்கவே முடியாது. போராட் டம் பெரியளவில் வெடிக்கும்'' என்கின்றனர்.
இந்த மின்சார திட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும்
தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு,’’""யுத்தம் என்கிற பேரில் ஈழத்தில் தமிழினப் படுகொலை செய்தது ராஜபக்சே அரசு. உலகின் பல்வேறு நாடுகள், "இனப்படு கொலை செய்த நாடு இலங்கை' என்று பதிவு செய்து கொண்டு வருகின்றன. ஐ.நா.மன்றமும் ராஜபக்சேவின் போர்க் குற்றங்களை விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது. இதனையெல்லாம் சிறிதும் மதிக்காமல், போரின் போது இலங்கைக்கு ஆதரவாக எப்படிப்பட்ட உதவிகளெல்லாம் செய்து ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இந்தியா துரோகம் செய்ததோ... அப்படியே போருக்கு பிறகும் செய்து கொண்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகம் வழியாக இலங்கைக்கு மின்சாரம் என்பது தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் இந்தியா செய்கிற ஜீரணிக்க முடியாத பெரிய துரோகம். முளையிலேயே இதனை கிள்ளி எறிய தமிழர்கள் ஒன்று திரள வேண்டும். இல்லையேல் தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸின் நடவடிக்கைகள் அதிகரிக்கவே செய்யும்''’என்கிறார்.
தமிழகம் வழியாக மின்சாரம் என்பதால் தமிழகத்திற்கான மின் ஒதுக்கீட்டிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்கப்படும் என்கிற சந்தேகம் பலருக்கும் இருப்பதால், இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மன் கபிலனிடம் கேட்டபோது,’’" "இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தும் மின் தொகுப்புக்குள் கொண்டு வரப்பட்டு... மின் தொகுப்பி லிருந்துதான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு மின்சாரம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டு அதற்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது.
இலங்கைக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பாக இந்திய மின்தொகுப்பு கழகம் எந்த மாதிரியான செயல்முறைகளை கையாளுகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால்... தமிழகத்திற்கான மின் ஒதுக் கீட்டிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்கப் படாது என்பதை மட்டும் உறுதியாக தெரிவிக்க முடியும். அதனால் அந்த சந் தேகம் யாருக்கும் வேண்டாம்''’’என்கின்றார்.
நன்றி - Tamilcanadian
0 comments:
Post a Comment