வைகோவின் பொருளாதார முற்றுகைப்போராட்டம் - வெற்றி

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் முற்றுகை போராட்டம் நடத்தி கேரளாவுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று மதிமுக போது செயலாளர் வை.கோ விடுத்துள்ள அழைப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்று ஆதரவு தெரிவித்து உள்ளனர்.தாங்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை லாரிகளை கேரளாவுக்கு ஓட்ட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் நல்லதம்பி அறிவித்துள்ளார்.


தமிழக லாரி முன்பதிவு அலுவலகங்கள் சங்கமும் கேரளாவுக்கு நாளை முதல் காலவரையறை இன்றி முன்பதிவை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்கள்.


கேரளாவுக்கு சரக்கு எடுத்து செல்லும் லாரிகளை மலையாள மக்கள் தாக்குவதால் லாரிகள் சேதமடைகின்றன, ஓட்டுனர் மற்றும் கிளீனர்கள் தாக்கப்படுகின்றர்கள். பல இடங்களில் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுதத்தப்படுகின்றது, அதனால், சரக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் எங்களால் கொண்டுபோய் சேர்க்க முடியவில்லை. மேலும் கொண்டு போகும் காய்கறி, பழங்கள் எல்லாம் அழுகிவிடுகின்றது.


இதனால், நாளை காலை முதல் (21.12.2011) தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் லாரிகளை நிறுத்த முடிவு செய்துள்ளார்கள், எனவே கேரளாவுக்கு செல்லும் சரக்குகளை முன்பதிவு செய்வதும் நாளை முதல் நிறுத்தப்படும். கேரள மற்றும் தமிழகத்திற்கு இடையே முல்லை பெரியாறு அனை விவகாரத்தில் நல்லிணக்கம் ஏற்ப்பட்டு மக்களின் வாழ்க்கை முறை சுமூகமடையும் வரை கேரளாவுக்கு நாங்கள் சரக்குகளை அனுப்பமாட்டோம் என்று தமிழக லாரி புக்கிங் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜவடிவேல் நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இதன் மூலம், தினமும் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு சரக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படும், கோழி, மாட்டு இறைச்சி, பால், காய்கறிகள், சர்க்கரை, பழங்கள் உள்ளிட்ட பலவகையான அவசியமான பொருட்களில் தட்டுப்பாடு கேரளாவில் ஆரம்பிக்கும் இதன் மூலம் அங்கு பெரிய அளவில் விலையேற்றம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் வைகோ அறிவித்துள்ள முற்றுகைபோராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

Read more...

மாவீரர் தினம் 2011 - விடுதலைப் புலிகள்

எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள். எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிருக்குயிரான வீரமறவர்களை நினைவு கூர்ந்து மதிப்பளிக்கும் புனித நாள்.இது உலகத்தமிழினம் விடுதலை வேட்கை கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். தமிழரெல்லாம் தமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது விடுதலைப் பயணத்தின் முக்கியமான கட்டத்தில் இன்று நாம் நிற்கின்றோம். போராட்டம் இன்னும் ஓயவில்லை. தமிழீழத் தாகம் தீரவில்லை. மிகவும் கொடுங்கோன்மையான இராணுவச் சர்வாதிகார ஆட்சி தமிழர் தாயகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆயுத பலத்தின் மூலம் தமிழீழ மக்களைச் சிங்களப் பேரினவாதம் அடக்கியாண்டு நிற்கின்றது.

துவளாத போராட்டம்

போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை. இழப்புக்களை எண்ணிச் சோர்வடையாமல் இலட்சியப் போராட்டத்தைத் தொடரும் பணி எமதாகும். இன்று தமிழீழத்துக்கான போராட்டம் தாயகத்தில் மட்டுமன்றி உலகளவில் தமிழர்கள் வாழ்கின்ற எல்லாக் களங்களிலும் முனைப்புப்பெற்று நிற்கின்றது.

நீண்டதும் கடினமானதுமான தமிழீழத்துக்கான விடுதலைப் போரில் நாம் சந்தித்த இன்னல்கள், இடையூறுகள் ஏராளம். ஆனாலும் நாம் மனம் துவண்டு விடவில்லை. சவால்கள் நிறைந்த காலகட்டமாக இன்றைய நாள் இருப்பினும் அதுவே எமது நம்பிக்கைக்கான காலகட்டத்தின் திருநாளாகவும் இருக்கிறது.

பிரபாகரனால் தெரிவு செய்யப்பட்ட நாள்

தமிழர் வரலாற்றின் வழிவந்த வீரமரபை அடியொற்றிக் களமாடி மடிந்த விடுதலை வீரமறவர்களை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து மதிப்பளிக்கும் மாவீரர் நாளாக, எமதியக்கத்தின் முதல் மாவீரர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நாளான நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தெரிவு செய்யப்பட்டது.
தமிழர் தாயகம் எதிரியின் பிடியில் வந்த பின்பு மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தும் எதிரிப் படைகளால் சிதைத்தழிக்கப்பட்டன.

சிங்களத்தின் காட்டுமிராண்டித்தனம்

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மணலாறு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்த அனைத்துத் துயிலுமில்லங்களும் சிதைக்கப்பட்டதோடு அவற்றின் மேல் இராணுவத்தினருக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் ஆறாத ரணத்தையும் சினத்தையும் ஏற்படுத்திய இந்தக் காட்டுமிராண்டிச் செயலுக்கு நிகரானதொன்றை நாகரிக உலகின் பிறிதெந்தப் பாகத்திலும் காணமுடியாது.

ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்தாலும் கூட...

ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழித்தாலன்றித் தமிழீழத் தாகத்தை யாராலும் அழித்துவிட முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டம் 2009 இல் முள்ளிவாய்க்காலைக் கடந்தும் தீராத தமிழீழத் தாகத்துடன் இன்னும் முனைப்புப் பெற்று நிற்கின்றது.

நவம்பர் 2011 இல் சிறிலங்கா அரசு நியமித்த 'உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு' அண்மையில் தனது அறிக்கையை வெளியிட்டது. குற்றவாளிகளை இனங்காண்பதற்கும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த அறிக்கை வழிகோலும் எனக் கூறப்பட்டது.

குற்றவாளிகளாகக் காண்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதி கூறினார். ஆனால் சிறிலங்கா அரசு நியமித்த ஆணைக்குழுவானது சிங்கள அரசின் தேவைக்கு உதவும் அறிக்கையையே வெளியிட்டது.

உண்மையான போர்க்குற்றவாளி ராஜபக்சேவும் அவர் தம்பிகளும்

உண்மையான குற்றவாளிகளான சிறிலங்கா அதிபர் ராஜபக்ச உட்பட அவருடைய சகோதரர்களையும் கொலைவெறியோடு தமிழ்மக்களைக் கொன்ற இராணுவத் தலைமையையும் அந்த ஆணைக்குழுவால் எப்படிக் குற்றவாளிகளாகக் காண முடியும்? இலங்கை அரசியல் வரலாற்றில் ஆணைக்குழுக்களும் அறிக்கைகளும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை மாத்திரமே.

ஐ.நா. மனித உரிமைச் சட்டங்கள், போர் நெறிமுறைகள் மற்றும் உலக இராசதந்திர ஒழுங்குகள் போன்றவற்றையெல்லாம் சிறிலங்கா அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், போர்க்குற்றம் புரிந்த தனது இராணுவ அதிகாரிகளை இராசதந்திரிகளாகவும் தூதரக அதிகாரிகளாகவும் வெளிநாடுகளிலுள்ள சிறிலங்காவின் தூதரகங்களில் துணிச்சலாக அமர்த்தியுள்ளது.

இராணுவத்தளம், கடற்படைத்தளம், விமானப் படைத்தளம் உட்படப் பொருளாதார மையங்களையும் சிறிலங்காவில் அமைக்க உலகின் சில வல்லாதிக்க சக்திகள் போட்டியில் ஈடுபடுகின்றன. இதன்காரணமாகச் சிறிலங்கா அரசு செய்த போர்க் குற்றங்களை இந்நாடுகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த விழைகின்றன.

சேனல் 4-க்கு நன்றி

சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட “சிறிலங்காவின் கொலைக்களம்” என்ற ஆவண ஒளிப்படத் தொகுப்பு உலக மனச்சாட்சியின் பார்வையை எம் மக்களின் பக்கம் திருப்பியிருப்பது நல்லதொரு அறிகுறியாகவே உள்ளது. அனைத்துலக ஊடகங்களால் கவனிக்கப்படாதிருந்த எமது மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்த சனல் 4 தொலைக்காட்சிக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் ஆர்வலர்களுக்கும் எமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதோடு தமிழர்களுக்கான ஓர் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை அனைத்துலகச் சமுகத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தமிழீழம் மது கட்டுப்பாட்டில் இருந்தபோது....

தமிழீழம் எமது கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு மரியாதை கிடைத்திருந்தது. முப்பத்து மூன்று ஆண்டுகளாகச் சிங்கள மொழித்திணிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. சிங்களக் குடியேற்றம் முற்றுமுழுதாகத் தடுக்கப்பட்டிருந்தது.

தமிழீழத்தின் மீதான சிங்களப்படை வெறியர்களின் அடக்குமுறை, பொதுமக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் என்பன தடுக்கப்பட்டிருந்தன.

ஆனால் தந்தை செல்வாவின் காலத்தில் தமிழர்களுக்கு இருந்த அறப்போராட்ட உரிமைகூட இன்று மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்க்கட்சிகள் உண்ணாநிலைப் போராட்டமோ – சட்டமறுப்போ – மறியல் போராட்டமோ – கதவடைப்போ – ஒத்துழையாமையோ – ஏன் ஒரு பொதுக்கூட்டம்கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. உலகச் சட்டங்கள் வழங்கியுள்ள அறவழியிலான போராட்ட உரிமை – கருத்துத் தெரிவிக்கும் உரிமை அனைத்தும் எமது தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.

தமிழர் பூர்வீகங்கள் அழிப்பு

சிங்கள ஆட்சியாளர்கள், தமிழீழ மக்களின் கோரிக்கையை மட்டுமல்ல தமிழீழ மக்களின் உரிமை தொடர்பான உலகநாடுகளின் வேண்டுகோள்களையும் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தமிழரின் தாயகப் பிரதேசமான வடக்குக்கிழக்கில் பூர்வீக அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன.

மூன்று இலட்சம் சிங்களப் படைகளாலும் அவர்களின் இராணுவக் காவலரண்களாலும் இன்றுவரை குடியேறிக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான சிங்களக் குடியேறிகளாலும் தமிழீழம் ஆக்கிரமிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னான இந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழீழ மக்களின் அரசியல் தீர்வுக்கான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாமல் அவர்களை இன்னமும் ஒரு அரசியல் வெறுமைக்குள் வைத்திருக்கவே சிறிலங்கா அரசாங்கம் முனைகிறது.

ஏற்கனவே இருந்த உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் எமது மக்கள் மீண்டும் குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் மேலும்பல தமிழர் வாழ்விடங்கள் இராணுவப் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுத் தமிழ்மக்கள் தமது வாழ்விடங்களுக்குச் செல்லமுடியாமல் தடுக்கப்படுகின்றனர்.

தமிழர் வாழ்விடங்களில் திட்டமிடப்பட்ட முறையில் கலாச்சாரச் சீரழிவு சிங்கள அரசால் பரப்பப்படுகிறது. கிறீஸ் மனிதன் போன்ற அசாதாரண சம்பவங்களை உருவாக்கித் தமிழ்மக்கள் மீது உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியும் போரற்ற சூழ்நிலையிலுங்கூட மக்;கள் வாழ்விடங்களில் படையினரின் பிரசன்னத்தை அதிகரித்தும் எமது மக்களின் நாளாந்த வாழ்வியலைக் குழப்பி அவர்களைப் பதட்டநிலைக்குள் வைத்து அரசியல் செய்வதே இந்தச் சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கமாகும்.

எம் மீதான தடைகளை நீக்குங்கள்

தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும் புரிந்துகொண்டு அழிக்கப்படும் ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடிவரும் எமதியக்கத்தின் மீது போடப்பட்டுள்ள தடைச்சட்டங்களை நீக்கி எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.

இனப்படுகொலையைப் புரிந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் பொய்ப் பரப்புரைகளைச் செவிமடுக்காமல் தமிழீழத்துக்கான தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்குமாறு இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்தையும் வேண்டிநிற்கின்றோம்.

எமது விடுதலைக்கான போராட்டம் இன்று தமிழகம் தொட்டுத் தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும் எழுச்சி பெற்றுள்ளது. இன உணர்வும் மொழிப்பற்றும் மேலோங்கியுள்ளன. தமிழர் என்ற பெருமிதம் தமிழர் நெஞ்சில் ஊற்றெடுத்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்குத் தமிழுணர்வும் தமிழீழ மக்கள் மீதான ஆதரவும் தமிழ்நாட்டிலே வலுப்பெற்றுள்ளன.

தாயகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் ஒன்றிணைவதைத் தடுப்பதற்குச் சிங்களப்பேரினவாத அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது. பலம் பொருந்திய சக்தியாக உலகத்தமிழர் உருவாவதைத் தடுக்க உலக நாடுகளின் ஆதரவையும் வேண்டி நிற்கின்றது. புலம்பெயர் தமிழர்களின் பலத்தைக் குறைப்பதற்காகவும் மனிதநேயப் பணிகளை முடக்குவதற்காகவும் சதித்திட்டங்களும் சூழ்ச்சிகளும் அரங்கேற்றப்படுகின்றன.

இளையோர் மீது பிரபாகரன் வைத்துள்ள நம்பிக்கை

புலம்பெயர் தேசங்களில் அறிவாளிகளாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் வளர்ந்துவரும் தமிழ் இளையோர் தம்மீது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் வைத்துள்ள அபரிமிதமான நம்பிக்கையை உணர்ந்து தமிழீழத்தின் விடியலுக்காகத் தொடர்ந்தும் அயராது உழைக்கவேண்டும்.

எமது தாயகத்தில் சிங்கள இராணுவ நெருக்குவாரத்துக்குள்ளும் சிறிலங்கா அரசின் சிறைகளுக்குள்ளும் வாடும் தமது வயதையொத்த இளையவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கும் பொறுப்பும் கடமையும் தமக்கு உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு தாயக விடுதலைக்கான தமது முழுமையான பங்களிப்பை ஆர்வமுடன் செய்ய விரைந்து முன்வரவேண்டுமென அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்;.

எமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து தமிழரின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடுவோம்.

இழப்புக்களைக் கண்டு அஞ்சாமல் தளராத உறுதியுடன் தொடர்ந்து போராடும் மக்களே இறுதியில் வெற்றிபெறுவாரென்ற உண்மையை நெஞ்சில் நிறுத்தி நாம் செயலுறுதியுடன் போராடுவோம்.

காலம் இட்ட கட்டளைப்படி தமிழ்மக்களின் இருப்பைத் தக்கவைக்கும் தீர்வான தமிழீழத் தனியரசு கிடைக்கும் வரை நாம் எல்லா வழிகளிலும் தொடர்ந்து போராடுவோம்.

எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும் எமது விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான ஈகங்களையும் நினைவுகூரும் இன்றைய நாளில் எத்தகைய துன்பங்களும் சவால்களும் எதிர்வந்தாலும் தமிழீழத் தனியரசை வென்றெடுக்கும் வரை தளராது போராடுவோம் என்று நாம் உறுதி கூறுகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்”

Read more...

ஈழத்தில் ராஜீவ் நிகழ்த்திய போர்க் குற்றங்கள்

ராஜீவ் காந்தி ஈழத்துக்கு அனுப்பி வைத்த இந்திய ராணுவம் 1987 ஆம் ஆண்டில் நிகடிநத்திய போர்க் குற்றங்கள் இனப் படுகொலைகள் பற்றிய ஒரு தொகுப்பு: அக்டோபர் 10 ஆம் தேதிக்கு முன்னரே முல்லைத் தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றைச் சுற்றி வளைத்த இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு முகாமை வெடி வைத்துத் தகர்த்தனர்.

10.10.87
இன்று அதிகாலை 5 மணியளவில் யாடிந
நகருக்குள் உள்ள ஈழ முரசு, முரசொலி ஆகிய 2
தினசரித் தமிடிநப் பத்திரிகை அலுவலகங்களுக்கு
புகுந்த இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கு
வேலை செடீநுது கொண்டிருந்த ஊழியர்களை ஆயுத
முனையில் கைது செடீநுததுடன் அலுவலகங்களை
யும், அச்சு இயந்திரங்களையும் வெடிகுண்டுகள்
வைத்துத் தகர்த்தனர்.
அதே தினத்தில் கொக்குவில் என்னும் இடத்தில்
இருந்த விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி
சேவையான ‘நிதர்சனம்’ தொலைக்காட்சி நிலையத்
துக்குள் புகுந்து அங்கிருந்த தொலைக்காட்சி
ஒளிபரப்பு உபகரணங்களை அபகரித்துச் சென்றனர்.
(விடுதலைப் புலிகள் திருட்டுத்தனமாக வைத்
திருந்த ரேடியோ சாதனங்களைத் தாம் கைப்பற்றி
யதாகவும், இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத்
தூண்டிப் பிரசுரங்களை வெளியிட்டு வந்த
அச்சகங்களைத் தாம் முடக்கி வைத்திருப்பதாகவும்
இந்திய அமைதி காக்கும் படையினர் தம்
நடவடிக்கைகள் குறித்து சமாதானம் கூறினர்.)1. விடுதலைப் புலிகள் தங்களது ரேடியோ,
தொலைக்காட்சி சேவைகளைப் பல
ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். விடுதலைப்
புலிகளின் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சி
சேவையில் ஒளிபரப்பப்பட்ட பல நிகடிநச்சிகளை
இந்திய அரசு அதிகாரிகள் வேண்டிப் பெற்று
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில்கூட ஒளிபரப்பி
யிருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென்று
எந்தவித தகவலும் கொடுக்காமல் தொலைக்
காட்சி நிலையத்தினுள் புகுந்து அங்குள்ள
சாதனங்களை அத்துமீறித் தூக்கிச் சென்றதானது
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக
எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையேயாகும்.
2. இலங்கை அரசினால் செடீநுதிப் பத்திரிகைகளாகப்
பதிவு செடீநுயப்பட்டு, பல ஆண்டுகளாக வெளி
வந்து கொண்டிருந்த ஈழ முரசு, முரசொலி ஆகிய
பத்திரிகை அலுவலகங்களை இந்திய அமைதி
காக்கும் படையினர் தாக்கித் தகர்த்ததாவது, தமது
ஜனநாயக உரிமைகளை நசுக்கிய செயலாகவே
ஈழத் தமிடிந மக்கள் கருதுகின்றனர்.
மதியம் 2.15 மணியளவில் இந்திய அமைதி
காக்கும் படையினர் கோட்டைப் பக்கமாகவும்,
கோப்பாடீநு பக்கமாகவும், முத்திரைச் சந்திப்
பக்கமாகவும் துப்பாக்கிப் பிரயோகம் செடீநுதபடி
முன்னேறியதைத் தொடர்ந்து, மக்களையும்,
தங்களையும் பாதுகாக்கும் நோக்குடன் விடுதலைப்
புலிகள் தற்காப்பு யுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய
கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். யாடிந குடா நாடு
முழுவதிலும் இந்திய இலங்கை இராணுவம்
கூட்டாகத் தேடுதல் வேட்டை நடத்தியதில் 100-க்கும்
மேற்பட்ட பொது மக்கள் கைது செடீநுயப்பட்டனர்.
வடமராட்சிப் பகுதியில் தேடுதல் வேட்டை
நடத்திய இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கு
பத்துப்பொது மக்களைச் சுட்டுக் கொன்றனர்.
11.10.87
இன்று காலையில், இந்திய அமைதி காக்கும்
படையினரால் ஏவப்பட்ட செல் கைலாசப்
பிள்ளையார் கோவில் மீது விழுந்து வெடித்ததில் 12
பொது மக்கள் கொல்லப்பட்டனர். 20 பேர்
காயமுற்றனர்.
பனையில் விடுதலைப் புலிகளின் வேன் ஒன்றை
விரட்டிச் சென்றும் பிடிக்க முடியாமற் போகவே
ஆத்திரமுற்ற இந்திய அமைதி காக்கும் படையினர்
திரும்பிச் செல்லும் வழியில், எதிர்ப்பட்ட
மக்களையெல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டனர்.
இதில் இரு குழந்தைகள் உட்பட 13 பேர் இறந்தனர்.
இரவு யாடிநப்பாணத்தைக் கைப்பற்றும்
முயற்சியில் இந்திய அமைதி காக்கும் படையினர்
முழு மூச்சாக இறங்கினர். இரவு 1 மணியளவில்
யாடிநப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடப்
பகுதியில் ஏராளமான இந்திய அமைதி காக்கும்
படையினர் கெலிகாப்டர்கள் மூலம் வந்திறங்கினர்.
அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில்
8 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற கடும்
சண்டையில் 40க்கும் மேற்பட்ட இந்திய அமைதி
காக்கும் படையினர் கொல்லப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 20 எ°.எம்.ஜி., 6
எ°.எல்.ஆர்., 3 எல்.எம்.ஜீ., 2 ஜி.பி.எம்.ஜீ., ஒரு
ராக்கட், லோஞ்சர் உட்பட ஏராளமான ஆயுதங்
களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.
அதனால் ஆத்திரமுற்ற இந்திய அமைதி காக்கும்
படையினர் பொது மக்களைத் தாக்கினர். அதில் 30
பொது மக்கள் கொல்லப்பட்டனர். 250 பேர்
காயமுற்றனர்.
12.10.87
இன்று நடைபெற்ற சண்டையிலும் ஏராளமான
இந்திய அமைதி காக்கும் படையினர் கொல்லப்
பட்டனர். இந்திய அமைதி காக்கும் படையினர்
மேற்கொண்ட மோட்டார் பீரங்கித் தாக்குதல்களின்
போது பல பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்திய அமைதி காக்கும் படையினர் பொது
மக்களை வீதியில் நிறுத்தி மிகக் கொடூரமான
முறையில் அவர்கள் மீது கவச வாகனங்களையும், ஜீப்
வண்டிகளையும் ஏற்றி நசுக்கிக் கொன்றனர். சுமார் 40
பொது மக்களின் சடலங்கள் உருத் தெரியாதவாறு
சிதைந்து அப்புறப்படுத்த முடியாத நிலையில்
காணப்பட்டன.
யாடிந பல்கலைக்கழகத்தினுள் விடுதலைப் புலி
களிடம் சிக்கியவர்களை மீட்க என பாராசூட்டின்
மூலம் இறக்கப்பட்ட இந்திய அதிரடிப் படையினர்
படுமோசமான செயல்களில் இறங்கினர். அவர்கள்
திரும்பிச் செல்லும்போது 12 சடலங்களை மட்டுமே
எடுத்துச் சென்றனர்.
விடுதலைப் புலிகள் தங்களிடம் சிக்கிய இந்தியப்
படையினரின் 29 சடலங்களை செஞ்சிலுவைச்
சங்கத்தின் மூலம் இந்தியத் தரப்பினரிடம் கொடுக்கும்
ஒழுங்குகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த 29
பேரின் சடலங்கயையும் அப்போது இருந்த
சூடிநநிலையில் தாங்கள் பொறுப்பெடுத்துச் செல்வது
சாத்தியமில்லை என்று இந்திய இராணுவப்
பொறுப்பதிகாரி யாடிந மாவட்ட அரசாங்க அதிபர்
மூலம் விடுதலைப் புலிகளுக்குத் தெரிவித்ததைத்
தொடர்ந்து 29 சடலங்களும் அங்கேயே தகனம்
செடீநுயப்பட்டன.
பாராசூட் மூலம் இறங்கிய இந்திய அதிரடிப்
படையினர் படுதோல்வியுடன் திரும்பி ஓடினர்.
உரும்பராயில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில்
இந்தியப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய
தாக்குதலின்போது அப்பாவிப் பொது மக்கள் பலர்
(இரு மூதாட்டிகள், இரு குழந்தைகள் உட்பட)
கொல்லப்பட்டனர்.
12 ஆம் தேதி மாத்திரம் 104 பொது மக்கள்
செல்காயங்களினால் பாதிக்கப்பட்டு யாடிந
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியப்
படையினர் பெண்களைக் கொடூரமான முறையில்
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பின்னர் கொலை
செடீநுதுள்ளனர். பெற்றோருக்கு முன்பாகவே
அவர்களது பிள்ளைகள் பயங்கரமான முறையில்
கொலை செடீநுயப்பட்டனர். உடம்பின் பல பகுதிகள்
கெட்டுப் போன நிலையில் இவர்கள் இறந்து கிடக்கக்
காணப்பட்டனர்.
சுதுமலை, உரும்பராடீநு, கொக்குவில் ஆகிய பகுதி
களில் ஏராளமான பெண்கள் இந்தியப் படையின
ரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக்
கொல்லப்பட்டனர். உயிர் தப்பிய 13 பெண்கள்
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணம் பொத்துவிலில் பேச்சு
வார்த்தைக்கு வருமாறு விடுதலைப் புலிகளின்
அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரை ஒரு
கோயிலுக்கு அழைத்த இந்திய அமைதி காக்கும்
படையினர் அவரைக் கைது செடீநுது கொண்டு
சென்று விட்டனர்.
13.10.87
இன்று யாடிந கோட்டை இராணுவ முகாமி
லிருந்து ஏவப்பட்ட மோட்டார் செல்கள் விழுந்து
வெடித்ததனால் யாடிந போதனா வைத்திய சாலையில்
3 இடங்கள் பெரும் சேதமுற்றன. கூரைகள் உடைந்து
மருந்துப் பொருட்களும் பெருமளவில் சேதமுற்றன.
மருத்துவமனை வீதியிலுள்ள மாதா கோயில் வளவில்
பாதிரியார் தங்கும் விடுதியும் செல் விழுந்து சேத
முற்றது. யாடிந நகரில் பரவலாகப் பல இடங்களிலும்
செல் விழுந்து வெடித்ததனால் ஏராளமான பொது
மக்கள் கொல்லப்பட்டனர். வீதிகளில் மக்கள்
நடமாட்டம் இல்லை.
அதிகாலையிலேயே தேடுதல் வேட்டை என்ற
பெயரில் வீடுவீடாகச் சென்ற இந்திய அமைதி
காக்கும் படையினர் குழந்தை, சிறுவர், முதியோர்,
பெண்கள் என்று பாராமல் 60 அப்பாவிப் பொது
மக்களைக் கொன்று குவித்தனர். வீடுகள், வீதிகள்
எனக் காணும் இடமெங்கும் பிணங்களே
தென்பட்டன. வீதிகளில் கிடந்த பிணங்கள்
அனேகமாக எல்லாமே இராணுவ வாகனங்களினால்
நசுக்கப்பட்டுச் சிதைவுற்றுக் காணப்பட்டன.
14.10.87
இன்று திருகோணமலை மாவட்டம் சாம்பல்
தீவுப் பாலத்துக்கு அண்மையில் வைத்து விடுதலைப்
புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 15
இந்திய அமைதி காக்கும் படையினர் பலியாயினர்.
உடுவிலில் 15 பெண்கள் இந்திய அமைதி காக்கும்
படையினரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி
கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெண்களின்
அங்கங்கள் கடித்துக் குதறப்பட்டிருந்ததாகவும்,
உடல் முழுவதும் இரத்தக் காயங்கள் இருந்ததாகவும்
பின்னர் இவர்களது உடல்கள் செயின் பொருத்திய
கவச வாகனங்களில் கீடிந போடப்பட்டு நசுக்கப்
பட்டதனால் உடல்கள் ரொட்டி போலச் சிதைந்து
விட்டதாக இவற்றை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
இந்த வெறிச் செயலைச் செடீநுத இந்திய அமைதி
காக்கும் படையினர் திரும்பிச் செல்கையில்
விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடித்
தாக்குதலில் அவர்கள் சென்ற கவச வாகனம் முற்றாக
வெடித்துச் சிதறியது. அதில் சென்ற அனைவரும்
கொல்லப்பட்டனர்.
வடமராட்சியிலுள்ள தொண்டமானாறு
முகாமிலிருந்து யாக்கரைக்கு வந்த இந்திய அமைதி
காக்கும் படையினரின் டிரக் வண்டி ஒன்றுக்கு,
இராணுவ முகாமிலிருந்து 500 மீட்டர் தூரத்திலுள்ள
யாக்கரைப் பிள்ளையார் கோயிலுக்கருகில் வைத்து
விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடித்
தாக்குதலில் வண்டியில் வந்த 8 இந்திய அமைதி
காக்கும் படையினரும் கொல்லப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிரான்
எனுமிடத்தில் வைத்து இந்திய அமைதி காக்கும்
படையினரை இடை மறித்து விடுதலைப் புலிகள்
நடத்திய தாக்குதலில் 3 இந்திய படையினர்
கொல்லப்பட்டனர். நால்வர் காயமடந்தனர்.
இந்திய இராணுவத்துக்கு உதவியாக குண்டுவீச்சு
விமானங்களும் கெலிகாப்டர்களும் டாங்குகளும்
வந்தன. ஏராளமான இந்தியப் படை வீரர்கள் யாடிந
முற்றுகைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டு
வருகின்றனர். 14.10.87 அன்று மட்டும் நகரை நோக்கி
70 மோட்டார் செல்கள் இந்தியப் படையினரால்
ஏவப்பட்டன. குண்டு வீச்சு விமானங்களிலிருந்தும்
கெலிகாப்டர்களில் இருந்தும் 90 கலிபர், 50 கலிபர்
கனரக இயந்திரத் துப்பாக்கிகளினால் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டன. விமானத்திலிருந்து குண்டு
களும் போடப்பட்டன.
14 ஆம் தேதி வரை 21 இந்திய அமைதி காக்கும்
படையினர் விடுதலைப் புலிகளால் கைது
செடீநுயப்பட்டனர். 40 எ°.எல்.ஆர். 20க்கும்
மேற்பட்ட எ°.எம்.ஜி, 2 ராக்கட் சோலஞ்சர், ஒரு
மோட்டார், 3 கவச வாகனங்கள் என்பவற்றையும்
இந்தியப் படையினரிடமிருந்து விடுதலைப் புலிகள்
கைப்பற்றினர்.

நன்றி - புரட்சிப்பெரியார் முழக்கம்

Read more...

என் குரல்வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?- பேரறிவாளன்

நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் போதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

பேரன்புமிக்க அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகளே,

வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவாய் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள் முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும் அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.

தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன் என்பதால் மனிதநேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின் அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என் மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களையெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காக தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப்பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.

1. திரு. ராஜீவ் அவர்களின் கொலையை நியாயப்படுத்துவதல்ல இக்கடிதத்தின் நோக்கம். மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்புமில்லாத நானும், என்னைப் போன்றவர்களும் மரண தண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.

2. திரு. ராஜீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11.06.1991 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.

3. அக்கொலைக்கு பயன்பட்ட ‘பெல்ட் பாம்’ செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழி வகுத்தக் குற்றச்சாட்டு. இதற்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. ‘இந்தியா டுடே’ நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், “சி.பி.ஐ.யால் இறுதி வரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தவர் யார் என்பதே” என்று.

விடை தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா?

4. அந்த ‘பெல்ட் பாமிற்கு’ 9வி பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வாங்கித் தந்த 9வி பேட்டரிதான் பெல்ட் பாம் வெடிக்கப் பயன்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.

5. உண்மை என்னவெனில் நான் 9வி பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவுமில்லை. ஆனால் நான் 9வி பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கிலுள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டிக் கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி, பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்ல வைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.

6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதே தவறு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. காரணம் இந்தக் கொலைக் குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர்களைத் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்வதோ நோக்கமாக இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது. அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, பெறப்பட்ட வாக்கு மூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?

மேலும் நம் நாட்டில் வாக்கு மூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்துதான் பல வாக்குமூலங்கள் ரத்தத்தால் கையெழுத்தாகின்றன. பொதுவாக அப்படிப் பெறப்படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினை தருவது கிடையாது. ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது.

7. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு. தியாகராஜன் என்ற அதிகாரி கேரள மாநிலத்தில் 1993 இல் நடைபெற்ற அருட்சகோதரி அபயா கொலை வழக்கை ‘தற்கொலை’ என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும், அவரது முறைகேட்டை எதிர்த்ததால், அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தாமஸ் வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இந்த வழக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் 23.06.2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்க வேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள்தானே இவர்கள்....

8. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதால், பெரும் பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப்பட்டன. அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற முடியாமல் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர்நீதிமன்றம், பிறகு உச்சநீதிமன்றம் என்று இருமுறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது.

இந்த செயலபாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவியது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர் நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைக்கப்பட்டுப்போனது. இப்பொழுது தடா சட்டம் தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ் பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? எப்பொழுது கிடைக்கும்?

9. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.

10. அவர் அதற்கு முன்னால் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.

11. குற்றப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிறது தடா சட்டம்.

12. எனக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்.

13. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் அதில் 22 பேர் தூக்குத் தண்டனையை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒரு தலைப்பட்சமாக, முன் முடிவுகளுடன் விசாரிக்கப்பட்டதென்பதை புரிந்து கெள்ள முடியும்.

சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை கொல்லப்பட்டவர் ராஜீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைபட்சமாகவே பார்க்கப்பட்டது. இன்னொரு வாய்ப்பு கிடைக்கப் பெற்று, நடுநிலையுடன் விசாரிக்கப்பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம். ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப் போனோம் நாங்கள். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?

14. திருமதி சோனியா காந்தி, இவ்வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களுக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை என ஏற்கனவே கூறியுள்ளார்.

15. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்குக் கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.

16. 1980களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களைப் போலவே நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மீதும் பற்றுக் கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலைப் போராட்டத்திற்காக உதவி வந்தார்கள்.

ஒரு நாள் ஊதியத்தையும் கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய, மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தன? ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப் போனேன்?? ஏன் தனிமைப்படுத்தப்பட்டேன்?? உங்களில் ஒருவன் தானே நானும்??

தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்.

செய்த குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்கு தண்டனையையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?

- முடிவுறா விசாரணையில், முடிவினை நோக்கித் தள்ளப்பட்டுள்ள அப்பாவி

இவ்வாறு அவர் அந்த கடித்தத்தில் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

Read more...

ஒரே குடும்பத்தால் சுருட்டப்பட்டுள்ள - தமிழர் சொத்துக்கள்

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.

இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

அந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியல்:

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது.

Read more...

இன்று தென்சூடான், நாளை தமிழீழம்...

50 ஆண்டு கால ரத்தம் சிந்தியப் போராட்டத்தின் விளைவாக பிறந்த தெற்கு சூடான் இன்று தனி நாடாக உதயமானது. ஆப்ரிக்காவில் உள்ள சூடான் நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு, தெற்கு சூடான் இன்று புதிய நாடாக உதயமாகிறது. "சூடான் நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்' என்று கோரி, கடந்த 20 ஆண்டுகளாக அந்நாட்டில் உள்நாட்டு போர் நடந்தது.வடக்கு பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தெற்கு பகுதியில் பழங்குடி மக்கள் அதிகம் உள்ளனர். உள்நாட்டு சண்டையில் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

கடந்த 2005ல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டின் பேரில், சூடானை இரண்டாக பிரிக்க திட்டமிடப்பட்டது. கடந்த ஜனவரியில் இதற்கான ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

சூடானை இரண்டாக பிரிக்க பெருவாரியான மக்கள் ஓட்டளித்தனர். இதையடுத்து, வடக்கு சூடான், சூடான் என்ற பெயரிலேயே அழைக்கப்படும்.


புதிய சூடான் தெற்கு சூடான் என்ற பெயரில் அழைக்கப்பட உள்ளது. தெற்கு சூடானின் தலைநகராக ஜூபா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று உலகின் 193வது நாடாக உதயமாகும் தெற்கு சூடானை சிறப்பிக்கும் வகையில் நடக்கும் விழாவில், உலக நாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.சூடானிய அரசுக்கும், சூடானிய மக்கள் விடுதலை ராணுவத்துக்கும் கடந்த 2005 ம் ஆண்டில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் காலின் பவல் ஆகியோரின் முன்னிலையில், அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.


இதனால், தெற்கு சூடானுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. அங்கு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது.

வடக்கில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெறுவதற்காக, கடந்த ஜனவரி மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தெற்கு சூடான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.


உலகில், 193வது சுதந்திர நாடான தெற்கு சூடானின், முதல் சுதந்திர தின கொண்டாட்டம், தலைநகர் ஜூபாவில் இன்று நடக்கிறது. இந்த விழாவில் கலந்துக் கொள்வதற்காக, இந்திய துணை ஜனாதிபதி அமீது அன்சாரி நேற்று அந்நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.


ஆசிய நாடுகளில், முதன் முதலாக இந்தியாதான், தெற்கு சூடான் தலைநகர் ஜூபாவில், கடந்த 2007 ம் ஆண்டு துணைத் தூதரக அலுவலகம் திறந்தது. இதேபோல் தமிழீழத்திலும் இந்தியா தூதரகத்தை திறக்கும் காலம் வரும்... அது காலத்தின் கட்டாயம்...நாளை தமிழீழம் மலரும்...தெற்கு சூடான் இன்று புதிய நாடாக மலருவதை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பெரும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தமிழீழமும் நாளை இதே போல் தனி நாடாக மலரும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்...

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்....

Read more...

கரும்புலிகள் நாள் - 2011

உன் வசமாகும் உலகு.. கரும்புலிகள் உயிராயுதம்காற்று நடக்கிறது கை வீசீ
பால் நிலவு பூத்துக் கிடக்கிறது பாலைப் பொழிந்தபடி..
நேற்றிரவைப் போல
நெடுங்கேணி குலுங்குகிறது
துரத்தே வெடிக்கும் சுடு குண்டின் அதிர்வினுக்கே
ஈரக்குடல் வற்றியிருக்கிறது...

நெஞ்சுக்குள்ளே எதோ திரண்டு எழும் மூச்சை அடைக்கிறது
சேதாரமாச்சா
எம் திருவாழ்வு
கைப் பிடிக்குள் மலந்திருந்த வாழ்வின்
மகிமை
வேரறுந்து தளர்ந்துள்ளதாதென்று...

சாவே எம் நாளாந்தம் என்றாச்சா
எமையேன்
இந்த இடரேன் தொடர்கின்றது
குன்றாய் நிமிர்ந்த
குலம் இடிந்து
பள்ளத்தில் விழும்படியான விதியேன் கவிழ்ந்துள்ளது...

பாழும் இருள் விலக்கும்
பருதியும் வானத்தில் ஏன் இன்னும் வந்தெழவில்லை
எம் தலையில் மானத்துக்கு அணியும் மகுடம்
ஏன் கிடைக்கவில்லை...

வேறொன்றுமில்லை விடுதலையின் மீது
எமக்கு ஆராத காதல் அனுபவமில்லை
அவதரித்த தாய் நிலத்தின்மீது
தனி அன்பு பெருக வில்லை
தீயுண்ட நெஞ்சம் சினம் கொண்டு சீறவில்லை
போத்தல் அடைத்த புலனாய்
நேற்று இரவு கூத்து முடிந்த கூத்தரங்காய் பேசாமல் போர்த்துக் கிடக்கிறோம்...

புதுவாழ்வு கை வருமா
வாராது காணும்
வல்லமைக்கு திலகமிட்டு போராட வேண்டும்
புறப்படுமோய் புறப்படுமோய்.. ஏன் காணோம் வானத்து அரசன் வந்திறங்கி
எம் கையில் தானமென விடுதலை தருவான...

நாமேதான் எழுந்தெமக்கு
எதிரான எதையும் சரித்துவிடும் பலத்தோடு எழுந்து பகை விழுத்தவேண்டும் காண்
அஞ்சாமை ஆற்றல்
அடங்காவலு வாழ்வை பஞ்சைப் போல எண்ணும் பக்குவம் இவை வேண்டும் நம்பிக்கை
வேண்டும்...

நாளை நமக்கெனும்
தென்பு எமக்கு வேண்டும் துணிவெனும் பலமுடைய தும்பிக்கை வேண்டும்
தொடர்ந்து அலைக்கும்
துயர் இருளை கண்டு சிரிக்கின்ற கனிவான மனம் வேண்டும்
தொண்டு தொழும்பறியாய் சுடரொளியாய்
என் நாளும் நடக்கும் பலம் வேண்டும்
நடுவழியில் விட்டகலா பிடைக்கும் தோள் வேண்டும்
பிறகெல்லாம் உன் வசமே.....!

புதுவை இரத்தினதுரை

Read more...

ஈழத்தில் புலி கொடி பறக்கும்; தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும் : மதிமுக

மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சியில் உள்ள ஹோட்டல் பெமினாவில் இன்று காலை தொடங்கியது. 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


இம்மாநாட்டில் புலிகள் மீதான தடை குறித்து மாநில மாணவர் அணி அமைப்பாளர் பாசறை பாபு பேசினார்.


அவர், ’ஹிலாரி கிளிண்டன் உட்பட அனைத்து தலைவர்களும் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கிறார்கள்.


இந்திரா காந்தியை கொன்ற அமைப்புக்கு தடை இல்லை. இந்தியாவில் பல தீவிரவாத செயல்களை செய்த காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை இல்லை.

புலிகள் என்ன தவறு செய்தார்கள் இந்த மண்ணில். ஈழத்தில் புலி கொடி பறக்கும் ..... தமிழ் மக்கள் ஆட்சி பிரபாகரன் தலைமையில் அமையும்.

இலங்கை அரசு 2009க் கு பிறகு எங்கள் மண்ணில் புலிகள் இல்லை என்று சொல்லிய பிறகும் இந்த மண்ணில் புலிகளுக்கு தடை நியாயமா.


எங்கள் தலைவர் தலைமையில் நீதிமன்றத்தில் புலிகளுக்கான தடை நீங்கும்....பல லச்சம் மக்களை கொன்ற ராஜபக்சே கொல்லப்பட வேண்டும்’’ என்று பேசினார்.

Read more...

சானல் 4-ன் ‘கொலைக்களம்’ - வீடியோ

இலங்கையில் ராஜபக்சவின் இனவெறி இராணுவம் நடத்திய தமிழின அழிப்பின் காணொளி பதிவு ஒன்றை ‘கொலைக்களம்’ என்ற பெயரில் சானல் 4 தொலைக்காட்சி இன்று வெளியிட்டது.

இலங்கையில் தமிழினம் எப்படியெல்லாம் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு உடபடுத்தப்பட்டது என்பதை பல காணொளிகள் மூலம் உலகின் பார்வைக்குக் கொண்டு வந்த சானல் 4, அங்கு நடந்த மிகப் பெரிய படுகொலைக்கு ஆதாரமான மிகப் பெரிய காணொளியை இன்று (14-06-2011 இரவு 11.00 மணிக்கு) வெளியிட்டது.
காட்சிகளை பார்க்கும் அதிகாரிகள் கூட கண்கலங்கும் காட்சிகள் பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.

அந்த வீடியோ காட்சிகள் :கொலை பாதகன் ராஜபக்சே சர்வச குற்றவாளி கூண்டில் எப்போது ஏற்றப்படுவான்..இனப் படுகொலைக்கு என்று வரும் ஒரு தீர்வு...
தன் சொந்த மண்ணில் உரிமைகள் இழந்து உணர்வுகள் இழந்து இலங்கை ராணுவ துப்பாக்கிகளுக்கு இறையாகும் தம் இனம் என்றுதான் சுதந்திர காற்றை தனிஈழம் அமைத்து சுவாசிக்குமோ...

நன்றி - கவிதை வீதி சௌந்தர்

Read more...

ஐரோப்பிய நாடாளுமன்றில் வைகோ

ஜூன் 1ம் திகதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வரலாறு படைக்கும் தீர்மானம் ஒன்றை தமிழர்கள் நிறைவேற்றவுள்ளனர். இதற்கான அனைத்து வேலைகளும் பூர்த்தியாகிவிட்ட நிலையில், தற்போது சென்னையில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பெல்ஜியம் சென்றுள்ளார்.சற்று முன்னர் அவர் பிரசில்ஸ் நகரில் இறங்கியுள்ளதாகவும், ஜூன் 1ம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றில் உரை நிகழ்த்தவுள்ளதாகவும் அறியப்படுகிறது. பிரித்தானியா தமிழர் பேரவையின்(BTF solidarity group) கருத்தாதரவுக் குழு குழுவால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள தீர்மானம் நிறைவேற்றும் நிகழ்வு, ஐரோப்பிய பாராளுமன்றில் பல நடாளுமன்ற உறுப்பினர்கள் முந் நிலையில் நடைபெறவுள்ளது.பிரித்தானியாவில் உள்ள மூன்று மாபெரும் கட்சிகளை உள்ளடக்கி, பல நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழர்களுக்காக இணைத்து, தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அமைப்பு முன்னர் உருவாக்கப்பட்டது. அதன்மூலம் பிரித்தானியாவில் இருந்து ராஜதந்திர மட்டத்தில் பல நகர்வுக்ளை பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட பல அமைப்புகள் நகர்த்திவந்தது. இவ்வமைப்பு அரசியல் மட்டத்தில் பலம்பொருந்திய அமைப்பாகத் திகழ்வதோடு, பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை குறித்து விவாதிக்கவும் தமிழர்களின் நலன்கள் குறித்து பேசவும் பேருதவியாக அமைந்தது.அது பிரித்தானியாவில் மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது பல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களைச் சேர்த்து தமிழர்களுக்கான அனைத்து ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் குழு என்று ஒரு அமைப்பு உருவாக்கப்படவுள்ளது. இந்து ஒரு வரலாறு படைக்கும் நிகழ்வாகக் கருத்தப்படுகிறது. புலம்பெயர் தமிழர்கள் பல கட்டங்களில் பல ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டிருந்தாலும், காலத்தின் தேவை கருதி இதுபோன்ற ஒரு பாரிய நகர்வையும் தமிழர்கள் மேற்கொண்டுள்ளது பாராட்டப்படவேண்டிய விடையமாக உள்ளது. இக் குழுவை நியமிப்பதன் மூலம் ஐரோப்பிய பாராளுமன்றில் தமிழர்களுக்கான குரல் ஓங்கி ஒலிக்கவுள்ளது என்பது நிச்சயமாகியுள்ளது என்றே கூறவேண்டும். பல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெற்றது போர் குற்றம்தான் என்ற மன நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு முழுமையான தரவுகளோ இல்லை அதுகுறித்த செய்திகளோ தெரியாத நிலை காணப்படுகிறது.

இவ்வாறு தமிழர்களுக்கு என்று ஒரு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அமைவதால், தமிழர் தரப்பு அவர்களோடு நெருங்கிய உறவைப் பேண முடிவதோடு நடைபெறும் அநியாயங்களையும், நடந்து முடிந்த கொடூரங்களையும் அவர்களுக்கு தெளிவுபடுத்த முடிவதோடு தமிழர்களுக்காக குரல்கொடுக்க அவர்களை தயார்ப் படுத்தவும் முடியும். இதுபோன்ற குழு ஒன்று அமையவுள்ளதும், மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றில் தமிழர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளமையும் இலங்கை அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக அறியப்படுகிறது. முடிந்தவரை இதனைத் தடுக்க இலங்கை அரசு பெரும் பிரயத்தனத்தை காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றில் சிறப்புரையாற்ற வைகோவும் வந்துள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவையின் கருத்தாதரவுக் குழு(BTF solidarity group) குழு முன்னேடுத்துள்ள இந்த வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த நகர்வுக்கு புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

Read more...

கருணாநிதி டிராமா... குடும்பசாட்சி2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு, சென்னையில் இருந்த அமெரிக்க துணைத் தூதர்ஆண்ட்ரூ சிம்கின் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் தயாநிதி மாறனுடன் தான் பேசிய விவரத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், தயாநிதி மாறன் மற்றும் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருடன் தான் பேசியதை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தனது கட்சி எம்.பிக்கள், மத்திய அமைச்சர்களும் ராஜினாமா செய்யப் போவதாக கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு நாடகம் என்று தயாநிதி மாறன் அப்போது தெரிவித்தார். மின் வெட்டுப் பிரச்சினை, அதனால் ஏற்பட்டுள்ள மக்களின் கடும் கோபம் ஆகியவற்றிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே கருணாநிதி இவ்வாறு அறிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் செயலுக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்பதாக காட்டிக் கொள்ளும் நாடகமே இது. தானும் இதில் பங்கேற்று ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விட தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் நோக்கமே கருணாநிதியிடம் இருந்தது.

மேலும் கருணாநிதி அரசு இதுவரை எந்த அரசு மீதும் இல்லாத அளவுக்கு மக்கள் மிகவும் கோபமாக இருப்பதாகவும் தயாநிதி மாறன் கூறினார்.

ஆனால் கருணாநிதி நடத்திய நாடகத்தால், திமுகவிடமிருந்து காங்கிரஸ் குறிப்பாக சோனியா காந்தி விலகத் தொடங்கினார். கருணாநிதியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் சரியான பதிலடியை பொருத்தமான நேரத்தில் கொடுக்கும். அதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

கருணாநிதியின் மகள் கனிமொழியை சமீபத்தில் சந்திக்க மறுத்தார் சோனியா. இதற்கு திமுக மீதான சோனியா காந்தியின் அதிருப்தி அதிகரித்ததே காரணம்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்குப் பழி வாங்க வேண்டும், பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உறுதியாக உள்ளனர் என்றும் தயாநிதி மாறன் கூறியிருந்தார்.
பீ்ட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து தனது எம்.பிக்களை வாபஸ் பெற மாட்டார் கருணாநிதி என்று உறுதிபடக் கூறியிருந்தார். தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக, தான் வலுவாக இருப்பதாக காட்டிக் கொள்ளவே இவ்வாறு அறிவித்தார் (எம்.பிக்கள் ராஜினாமா செய்வதாக) கருணாநிதி. மற்றபடி, அனைத்துக் கட்சிக் கூட்டம், தீர்மானம் என்பதெல்லாம் சப்பைக் கட்டுதான்.

காங்கிரஸுடனும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனும் இணைந்து இருப்பது ஒன்றுதான் திமுகவுக்கு உள்ள ஒரே வழி என்று கூறியிருந்தார் பீட்டர்.

ஆனால் தாங்கள் ராஜினாமா செய்யப் போவதாக திமுக கூறியது காங்கிரஸ் மேலிடத்தை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியது உண்மை. மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பாதையில் திமுக திரும்புகிறதோ என்று காங்கிரஸ் கருதியது என்று கூறியுள்ளார் பீட்டர்.

இந்த இருவரின் பேச்சுக்களையும் வைத்துப் பார்க்கும்போது இரு கட்சிகளுமே ஒரு சுயநலத்தோடுதான் உறவு வைத்துள்ளன என்பது தெரிய வருகிறது. முதல்வர் பதவியில் தான் நீடிக்க காங்கிரஸின் தயவு கருணாநிதிக்குத் தேவை. அதேபோல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு டெல்லியில் நீடிக்க கருணாநிதியின் தயவு காங்கிரஸுக்குத் தேவை.

இதன் விளைவாகவே இந்த அரசியல் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றியிருப்பதாக தெரிகிறது. உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து சில மணி நேரங்களில் அதை அவர் முடித்துக் கொண்டார். அதேபோல ராஜினாமா செய்யப் போவதாக கூறினார். ஆனால் யாருமே ராஜினாமா செய்யவில்லை.

கருணாநிதியின் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் போதிய அவகாசம் கொடுத்ததால் தனது நாடகங்களை முடித்துக் கொண்டார் கருணாநிதி என்று அந்த கேபிளில் சிம்கின் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

கருணாநிதியின் உண்ணாவிரதம் ஒரு மிகப் பெரிய நாடகம் என்று முதல்வர் ஜெயலலிதா அப்போதே கூறியிருந்தார். பல்வேறு கட்சிகளும் கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தை கண்டித்திருந்தன. இந்த நிலையில் கருணாநிதி நாடகமாடினார் என்று தயாநிதி மாறனே அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more...

காங்கிரஸ் கட்சியுடன் சுமூக உறவு - கருணாநிதி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ கைது செய்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அதே போல கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டார்.இதனால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த திமுகவும் அதன் தலைவர் கருணாநிதி குடும்பமும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுச் சதியாளராக அவரது பெயரை குற்றப் பத்திரிக்கையில் சிபிஐ சேர்த்துள்ளது. முறைகேடாக ஸ்பெக்டரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டிபி ரியாலிட்டியின் (இதன் இயக்குனர் ஷாகித் உசேன் பல்வா) இன்னொரு நிறுவனமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இது கனிமொழிக்குத் தரப்பட்ட லஞ்சம் தான் என்று சிபிஐ கூறியுள்ளது. கனிமொழி தவிர கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கனிமொழி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து மே 6ம் தேதி கனிமொழியும், சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம், கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடி விட மாட்டார். எனவே முன் ஜாமீன் தர வேண்டும் என்று வாதிட்டார்.

அடுத்த நாளும் விசாரணை நடந்தது.அதன் பின்னர் மே 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக மே 20ம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சிபிஐ கோர்ட்டுக்கு வந்திருந்தார் கனிமொழி. அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நீதிபதி ஷைனியிடம் தெரிவிக்கப்பட்டது. தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கனிமொழி கூறவே அதை ஏற்ற நீதிபதி அவர் புறப்பட்டுச் செல்ல அனுமதித்தார். இதையடுத்து அவர் கிளம்பிச் சென்றார். ஓய்வுக்குப் பின்னர் மதியம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த நிலையில் இன்று கனிமொழி முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஷைனி அறிவித்தார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு கனிமொழி நீதிமன்றம் வந்தார். அவருடன் கணவர் அரவிந்தனும் உடன் வந்திருந்தார்.

காலையில் நீதிபதி ஓ.பி.ஷைனி கூறுகையில், பிற்பகல் 1 மணிக்கு மேல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். இந் நிலையில் இந்தத் தீர்ப்பு 2.30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்ட்டது.

அதன்படி பிற்பகல் இரண்டரை மணியளவில் நீதிபதி தனது உத்தரவைப் பிறப்பித்தார். அப்போது கனிமொழியின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார் நீதிபதி. மேலும் கனிமொழியை உடனடியாக கைது செய்து 15 நாட்கள் சிறையில் வைக்க சிபிஐக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து பாடியாலா நீதிமன்ற லாக்-அப்பில் கனிமொழி அடைக்கப்பட்டார். அங்கிருந்து மாலை 4.45 மணியளவில் அவர் அங்கிருந்து திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பெண்கள் பகுதி உள்ள 6வது வார்டில் அடைக்கப்படுகிறார்.

உளவாளி அறைக்கு அருகில் கனிமொழி:

கனிமொழி அடைக்கப்படவுள்ள அறைக்கு அருகில்தான் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் கைதான மாதுரி அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில் கனிமொழிக்கு டிவி, மின்விசிறி, கட்டில் ஆகிய வசதிகள் கிடைக்கும். மேலும் அந்த அறையிலேயே குளியலறையும் இணைக்கப்பட்டுள்ளது.

கனிமொழியைப் போலவே கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் முன்ஜாமீன் கோரியிருந்தார். அந்த மனுவையும் நீதிபதி ஷைனி நிராகரித்து விட்டார். இதனால் அவரும் கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு வார்ட் நம்பர் 4ல் அடைக்கப்பட்டார். இந்த வார்டில் தான் காமன்வெல்த் ஊழலில் கைதான காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கல்மாடி அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதே சிறையில் தான் திமுக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண் கலங்கிய கனிமொழி-ஆறுதல் கூறிய ராசாவின் மனைவி:

முன்னதாக நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியவுடன் கனிமொழி கண் கலங்கினார். தனது கணவர் அரவிந்தன் பக்கம் திரும்பிய அவரது கண்களில் நீர் வழிந்தது. அவருக்கு அரவிந்தன் சமாதானம் கூறினார். அதேபோல அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ராசாவின் மனைவி பரமேஸ்வரியும் கனிமொழிக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தன்னை கைது செய்ய உத்தரவிட்டவுடன், மூக்குக் கண்ணாடி, மருந்துகள், புத்தகங்களை கொண்டு செல்லவும் அனுமதிக்க வேண்டும் என கனிமொழி நீதிபதியிடம் கோரி்க்கை வைத்தார். அதை நீதிபதி அனுமதித்தார்.

முன்னதாக இன்று காலை கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பு ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பாதகமாக அமையுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த கனிமொழி, எந்த உத்தரவு வந்தாலும் அதை சந்தித்தாக வேண்டிய நிலையில் நான் உள்ளேன். உத்தரவுக்காக காத்திருக்கிறேன். நான் நன்றாகவே இருக்கிறேன், எந்தப் பதட்டமும் இல்லை என்றார் அவர்.

சிறையில் யார் யார்?:

இதுவரை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர் ஷாஹித் பல்வா, அதன் இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் தொலைத் தொலைத் தொடர்பு அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திரா பொபாரா, கெளதம் ஜோஷி, டிபி ரியாலிட்டியின் நிர்வாகியும் ஷாகித் உசேன் பல்வாவின் உறவினருமான ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரிசையில் தற்போது கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோர் இணைகின்றனர்.

இந்த நிலையிலும் கொஞ்சமும் அலுத்துக்கொள்ளாத கருணாநிதி ‘’காங்கிரஸ் கட்சியுடன் சுமூக உறவு நீடிக்கிறது’’ என்று கூறினார்.
சோகமாக உணர்கிறேன்

கனிமொழி கைது குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு கருணாநிதி பதிலளிக்கையில், எல்லா தந்தைகளையும் போலவே, நானும் சோகமாக உணர்கிறேன் என்றார் கருணாநிதி.

Read more...

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2011

அன்பான தமிழ் மக்களே,

காலங்காலமாகத் தமிழர் தேசத்தின் மீது அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் எம்மினம் அழிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தமிழின அழிப்பின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என நினைவு கொள்ளப்படுகின்றது.

பன்னாட்டு ஆதரவுடன் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதானச் சூழலை ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட சிங்கள அரசு தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது ஆக்கிரமிப்புப் படையெடுப்புக்களை மேற்கொண்டது. இதனைச் சர்வதேசத்தினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவேதான் தங்களுக்கான பாதுகாப்பை மக்கள் தாங்களே தேடிக்கொண்டார்கள். இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி, மருத்துவ உதவியின்றி மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் மக்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இத்தகைய மனித அவலங்கள் எதனையும் கருத்தில் எடுக்காது தொடர்ச்சியான விமானத்தாக்குதல்கள், எறிகணைத்தாக்குதல்கள், பல்குழல் பீரங்கித் தாக்குதல்கள், போர் நெறிகளுக்கு மாறான கொத்துக்குண்டுத் தாக்குதல்கள், இரசாயன எரிகுண்டுத் தாக்குதல்கள் எனச் சிங்கள அரச படைகளினால் திட்டமிட்டுப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன.பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் உட்பட நடுநிலையான அமைப்புக்களையோ சுதந்திரமான ஊடகவியலாளரையோ அனுமதிக்காது தன் கொடுமைகளை உலகம் அறியாது இருக்க இருட்டடிப்புச் செய்துகொண்டு மிகப்பெரும் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு.

எனினும் மக்களோடு மக்களாக வாழ்ந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள், மனிதநேயப் பணியாளர்கள் அன்றாடம் நடக்கும் கொடுமைகளை உலகத்திற்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தபோதும் உலகம் அதனைப் பக்கச்சார்பானது எனப் புறந்தள்ளியது. இதன் விளைவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குறுகிய காலத்தில் சிங்கள ஆயுதப்படைகளினால் வேட்டையாடப்பட்டனர்.

போர் நிகழ்ந்துகொண்டிருந்தபொழுது எமது மக்களும் எமது அமைப்பும் உலகை நோக்கி எழுப்பிய குரல்களை அந்நேரத்தில் செவிமடுக்காது பாராமுகமாக இருந்த உலகு இன்று விழித்தெழுந்துள்ளது. அன்று எமது குரல்களை நம்பாமல், பக்கச்சார்பானவையென்றும், உறுதிப்படுத்த முடியாத தகவல்களென்றும் சொல்லித் தட்டிக்கழித்துக் கொண்டிருந்தவர்கள் இன்று அவற்றை உண்மையென்று ஏற்றுக்கொள்ளும் நிலையைக் காலம் ஏற்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்த உறவுகளும், மிகப்பெரும் கொலை வலையத்திற்குள் இருந்த பொதுமக்களும் தமக்கு நேர்ந்த இன்னல்களைப் பல்வேறு வழிகளிலும் முறையிடத் தொடங்கினர். அத்துடன் உலகளாவிய தமிழர்கள் தம் உறவுகளுக்கு நியாயம் வேண்டிப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் விளைவாகவே ஐக்கிய நாடுகள் சபை போர்க்குற்ற விசாரணை தொடர்பான நிபுணர்குழுவை அமைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்த நிபுணர் குழு அறிக்கையினைத் தமிழ் மக்களும் நாமும் வரவேற்கின்றோம். இவ்வறிக்கையில் எம் மக்களிற்கு சிங்கள அரசினால் இழைக்கப்பட்ட கொடுமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே அறிக்கையில் எமது அமைப்பு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எமது அமைப்பு தனது தரப்பு நியாயங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான சூழலை ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தித் தரவேண்டும் என இந்நாளில் கேட்டுக்கொள்கின்றோம்.

எம் அன்பிற்குரிய தமிழக மக்களே,

எமது விடுதலைப் போராட்டத்திற்கும், போராட்டத்தில் உறுதியாக இருக்கும் எம் மக்களுக்கும் எம் தொப்புள் கொடி உறவை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள். தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத 2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழர் இனவழிப்பிற்குத் துணைபோனவர்களைப் புறந்தள்ளும் வாய்ப்பினைக் காலம் உங்களுக்கு வழங்கியுள்ளது. இதுவே காலச்சக்கரத்தின் நியதியாகும்.

எம்மக்களின் சாவோலங்களின் ஒலிகள் இன்னும் உங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன என்பதனையும், முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட எம்மக்களின் ஆத்மாக்கள் உங்களை இரத்த உறவாக இணைத்துக் கொண்டுள்ளன என்பதனையும் நடந்து முடிந்த தேர்தலில் நீங்கள் உலகத்திற்கு உரத்துக்கூறி இருக்கின்றீர்கள். விடுதலை வேள்வியில் அயராது போராடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழினம் தனது விடுதலையை வென்றெடுக்கும்வரை எமது தமிழக உறவுகள் தொடர்ந்தும் பக்கபலமாக இருக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அன்பான உலகத்தமிழ் உறவுகளே,

தமிழீழத் தாயகமண்ணில் வாழ்கின்ற எமது மக்களுக்கு 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாளுக்குப்பின் எந்தவிதமான பாதுகாப்புமற்ற நிலையில் அவர்கள் சிங்கள அரசபடைகளின் திறந்தவெளிச் சிறையிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். பேச்சுச் சுதந்திரமோ எழுத்துச் சுதந்திரமோ அற்றநிலையில் உலகத்திற்கு அவர்களின் உண்மைநிலையினை வெளிப்படுத்தமுடியாத அடக்குமுறைக்குள் தொடர்ந்தும் இனவழிப்பை எதிர்கொண்டிருக்கின்ற இன்றைய காலப்பகுதியில் இனவெறியரசு சொல்வதைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள்.

இந்நிலையில், இன்றைய உலக ஒழுங்குக்கு ஏற்ப தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு புலம்பெயர் தமிழரின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இன்று உலகம் எப்படி ஏற்றுக்கொண்டதோ, அதேபோல் எமது மக்களின் உரிமைகளையும் ஏற்கும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது காலத்தின் கட்டளையாக அமையும். அதுவரையும் ஜனநாயக வழியிலான போராட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

Read more...

மீண்டும் வைகோ விசுவரூபம்

மீண்டும் தமிழகம் தேர்தலை சந்திக்கும் நிலை உருவாகும். அப்போது வைகோ விசுவரூபம் எடுப்பார் என, நாஞ்சில் சம்பத் பேசினார்.

ம.தி.மு.க.வின் 18வது ஆண்டு தொடக்க விழா கோவை மாவட்ட ம.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி பேசுகையில்,

அட்சய திருதியை நாளில் எதை தொடங்கினாலும் நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இதனால் ம.தி.மு.க.வின் 18ம் ஆண்டு விழாவும் நன்மையை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க. தொண்டர்களிடம் எந்த ஒரு சலிப்பும், தவிப்பும் இல்லை. மேலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. தாய் மகன் உறவு போல் வைகோவுக்கும் தொண்டர்களுக்கும் உறவு நீடித்து வருகிறது.

முக்கிய கால கட்டத்தை மே 13ல் கடக்க இருக்கிறோம். தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிட்டு கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லலாம் என்ற கனவில் கல் விழுந்து விட்டது. இதனால் உடைந்து போனது உண்மைதான். காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலாவது போட்டியிடலாம் என நினைத்தோம். அவ்வாறு போட்டியிட்டால் மும்முனை போட்டி ஏற்பட்டு காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதால் போட்டியிடவில்லை.

சட்டசபை தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது. மீண்டும் தமிழகம் தேர்தலை சந்திக்கும் நிலை உருவாகும். அப்போது வைகோ விசுவரூபம் எடுப்பார். அ.தி.மு.க. தொண்டர்கள் மீது எந்த கோபமும் இல்லை. அ.தி.மு.க. தொண்டர்களும் எங்கள் மீது அனுதாபமாக உள்ளனர். மே 13ந் தேதிக்கு பிறகு இளைஞர்கள் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை வைகோ தொடங்கி வைப்பார் என்றார்

Read more...

ஈழத்தமிழர்களின் இனப் படுகொலைக்கு காரணம் கருணாநிதியே! பழ.நெடுமாறன்

வாக்கும் வாழ்வும் ஒன்று என வாழும் நவீன காந்தி... ஈழத் தமிழர்களுக்கு மனப்பூர்வமாக ஆதரவு அளிப்பவர்... அவர்களின் குரலாய் இந்திய அளவில் ஒலித்துக் கொண்டு இருப்பவர்...பழம் பெரும் தமிழ்த் தேசியவாதி, நாடறிந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் என எத்தனையோ பரிமாணங்கள் உடையவர்..

அவரை தமிழ் சி.என்.என் இணையத்தளத்துக்காக பெங்களூரில் சந்தித்தோம். நாங்கள் சந்திக்கும் போது ஐயாவுக்கு நன்றாக வேர்த்திருந்தது.. விமானம் வர பிந்திவிட்டதா நன்றாகக் களைத்துப் போய்விட்டீர்கள் என வினவினோம்..

(சிரித்துவிட்டு..) தம்பி நான் விமானத்திலே வாற அளவுக்கு பெரிய அரசியல்வாதி எல்லாம் கிடையாது.. ரெயிலிலேயே வருகிறேன் என்று கூறினார்.. வயது முதிர்ந்த நேரத்திலும் அவரின் எளிமை எங்களுக்குப் பிடித்துவிட்டது...

அவருடன் ஆன அந்த அழகிய தருணங்கள் இதோ...எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துப் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர், போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களில் ஈழத்தமிழர்களின் மேல் உண்மையான பாசமும் பற்றும் கொண்டு அவர்களின் பிரச்சினையை அரசியல் ஆக்காமல் போராடிக் கொண்டிருப்பவர் நீங்கள் மாத்திரம் தான் என்ற வகையில் ஈழத்தமிழர்களின் சார்பாக உங்களுக்கு நன்றி...

தம்பி, நன்றி தெரிவிப்பதன் மூலம் நீங்கள் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் தூரத்தை ஏற்படுத்துகின்றீர்கள். நீங்கள் எமது சகோதரங்கள். சகோதரர்களுக்கிடையில் நன்றி தெரிவிப்பது அழகில்லை. (அழகாகச் சிரிக்கிறார்..)


ஈழத்திலே போர்க் கொடுமை நடந்தது. ஈழத்துக்கு அருகிலே 32 கிலோமீற்றர் தூரத்தில் இந்தியா உள்ளது. இங்கே 7 கோடித் தமிழர்கள் பார்த்துக் கொண்டு இருக்க... வெறும் 2 கோடி சிங்களவர்களால் 50000 தமிழ் மக்களை கொல்லக் கூடியதாக இருந்தது. அப்போதிருந்த போது உங்களின் மனநிலை எவ்வாறு இருந்தது?

நாம் கண்ணைக் கட்டி காட்டிலே விட்ட நிலையிலே இருந்தோம். எம்மால் செய்யக் கூடிய அத்தனை முயற்சிகளையும் நாம் செய்து கொண்டிருந்தோம். அத்தனை போராட்டங்களையும் செய்து கொண்டிருந்தோம்.

ஆனால் பதவி ஆசை பிடித்து வெறும் உப்புச் சப்பற்ற முதல்வர் பதவிக்காகவும் பணமீட்டுவதை மட்டும் கருத்தாகக் கொண்ட கருணாநிதி எங்களுடைய அத்தனை போராட்டங்களையும் மழுங்கச் செய்வதில் தன்னுடைய படை பலம் அதிகார பலம் அத்தனையையும் 100 வீதம் பாவித்து அதிலே வெற்றியும் கண்டார். ஆகவே இது எங்களுடைய தோல்வி அல்ல...

ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கு யார் காரணம் என்று என்னைக் கேட்டால் அது இந்தியாவிலே இருக்கின்ற கருணாநிதி என்று தான் சொல்வேன்.


முத்துக்குமாரின் அந்த துக்க கரமான மரணத்தின் பின்பு தமிழகத்திலே ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் அவ்வாறானதொரு மாற்றத்தை எழுச்சியை ஏற்படுத்த முடியவில்லையே என்று ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடும் அமைப்புக்கள் மீது ஒரு பொதுவான குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

முத்துக்குமாரின் மரணத்தை துருப்புச் சீட்டாக வைத்து நாங்களனைவரும் போராட்டங்களுக்களிலும் முஸ்தீபுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மேற்சொன்ன இதே கருணாநிதி தனது படை பலத்தை ஏவி முத்துக் குமாரின் சடலத்தை வெளியே எங்கேயும் வைக்க விடாமல் போலிஸ் பாதுகாப்பிலே புதைப்பதற்கான அத்தனை நடவடிக்கையிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

ஏலாக் கட்டத்திலே நான் தம்பி வைகோ, போன்ற ஈழ ஆதரவாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியில் பெற்று அடக்கம் செய்யக் கூடியதாக இருந்தது. அதற்கு மேலே தமிழக அரசு ஒன்றும் செய்ய விடவில்லை. ஆகவே இதன் முழுக் குற்றச்சாட்டும் கருணாநிதியையே சென்றடையும்.


ஈழத்திலே இன்னொரு போராட்டம் சாத்தியமாகுமா? சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் முகாம்களில் வாடி இருக்கும் மக்களால் அப்போரை வழிநடத்தி செல்லக் கூடியதாக இருக்குமா?

சாத்தியமாக வேண்டும்.. அழுத்தமாகக் கூறுகின்றார்... தம்பி நீங்களே குறிப்பிட்டீர்கள் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் இருக்கிறார்கள் என்று. சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கும் போது தான் அதை உடைத்துக் கொண்டு வெளியே வரும் உணர்வு வரும்.. இவ்வளவு இழப்புக்களுடன் புலிகள் மாத்திரம் 30000 பேருக்கு மேலே வீரச்சாவடைந்துள்ள இந்த நேரத்திலே விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு பாதியிலே விட முடியும்.. ஆகவே விடுதலைப் போராட்டம் நடக்கும்..நடந்தே தீரும்..


நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர். அவரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள்? அந்த அனுபவம் குறித்துக் கூறுங்கள்?

(அழகாகச் சிரிக்கிறார்...) அது ஒரு பெரிய கதை தம்பி 80 களில் சில ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க இளைஞர்கள் என்னுடைய வீட்டிலேயே தங்கியிருந்தனர்.

அந்த நேரம் இந்திரா காந்தியின் ஆட்சி அவர்களிலே யோகி மாஸ்டர் என்பவர் தான் எனக்கு மிகவும் பழக்கமானவர். அவரிடம் ஒரு நாள் நான் உங்களுடைய தலைவரைச் சந்திக்க வேணும் சந்திக்க என்னை அழைத்துச் செல்ல முடியுமா எனக் கேட்டேன்.

ஒருநாள் அதே போல் என்னை ஒரு இடத்துக்கு அழைத்தும் சென்றார். ஆனால், அங்கே காணப்படுகின்ற இளைஞர்கள் எனக்கு மிகவும் பரிச்சயமானவர்கள், தெரிந்தவர்கள். அப்போது நான் சொன்னேன் தம்பி நான் தலைவரைச் சந்திக்க வேணும், இவர்களைச் சந்திக்க வரவில்லை என்று கூறினேன்.

அப்போது அங்கே நின்ற ஒரு குள்ளமானவரை சுட்டிக் காட்டி இவர் தான் தலைவர் எனக் கூறினார். அப்போது நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன் ஏனென்றால் அவர் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தவர்., என்னோடு ஒன்றாகச் சாப்பிட்டவர்.

ஆனால் அவர் தான் தலைவர் என்பது அன்று வரைக்கும் தெரியவில்லை. அப்போது பக்கத்தில் வந்த தலைவர் மன்னிக்க வேண்டும் ஐயா இது இயக்க இரகசியம் வெளியாலே சொல்ல முடியாது எனக் கூறினார்.


ஒரு மில்லியன் டொலர் கேள்வி அனைவரும் எதிர்பார்க்கும் கேள்வி.. பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா?

இருக்கிறார். (அழகாகச் சிரிக்கிறார்...), மிகவும் பத்திரமாக இருக்கிறார், பாதுகாப்பாக இருக்கிறார். 5 ஆம் கட்ட ஈழப்போருக்கான அனைத்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். விரைவில் ஈழப்போர் வெடிக்கும். மிக விரைவில் தமிழீழம் மலரும்.


எதனடிப்படையில் நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள்? அதாவது 2009 மே 15 நான்காம் கட்ட ஈழப் போரின் முடிவின் பின்னர் நீங்கள் பிரபாகரனுடன் தொடர்பில் இருக்கிறீர்களா?

என்ன தம்பி கேட்கிறீர்.. மீண்டும் அதே சிரிப்பு... என்னுடைய தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் இந்திய புலனாய்வுப் பிரிவினரால் ஒட்டுக் கேட்க்கப்படுகின்றது. நான் எங்கே இருக்கிறேன். எங்கே போகிறேன். நான் மலசலகூடத்துக்கு சென்றால் கூட அவர்கள் அங்கேயும் கண்காணிப்பு வைத்திருக்கின்றனர். ஆகவே இப்படிப்பட்ட 100 சத வீத கண்காணிப்பில் இருக்கின்ற ஒருவனோடு எப்படி தலைவர் பேச முடியும். இதனால் நான் பேசவில்லை...


உங்களுடன் பேசவில்லை என்கிறீர்கள்.. பிறகு எவ்வாறு அவர் உயிருடன் உள்ளார் என ஆணித்தரமாக அடித்துக் கூறுகின்றீர்கள்?

எனக்குக் கிடைத்த தரவுகள், எனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் உயிரோடு இருக்கிறார். மிகவிரைவில் ஈழப்போர் வெடிக்கும் . ஈழப்போருக்கான அடுத்த கட்ட முயற்சிகள், ஒருங்கிணைப்புக்கள் அனைத்திலும் தலைவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.


ஈழத்தமிழர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

அன்புச் சகோதரர்களே, துக்கம் வேண்டாம். நீங்கள் தனியே போராடிக் கொண்டிருந்தீர்கள், இப்போது உங்கள் போராட்டம் உலகத் தமிழர்களுக்கு மத்தியிலே எடுத்துச் செல்லப்படுகின்றது.

உலகமெங்கும் வாழ்கின்ற சுமார் 10 கோடி மக்கள் உங்களுக்குப் பின்னால் நிற்கின்றார்கள். ஆகவே உங்களின் துயரத்தை விடுங்கள். துன்பத்தை விடுங்கள் நாங்கள் எப்போதுமே உங்களுடன் இருப்போம்...கை கூப்பி அழகாக முடிக்கிறார்...
Share100

Read more...

பிசாசு எங்களை பிராண்டி விட்டது -நாஞ்சில் சம்பத்

பிசாசு எங்களை பிராண்டி விட்டது :
ஜெ.மீது நாஞ்சில் சம்பத் ஆவேசம்ம.தி.மு.க., வுக்கு சீட் வழங்காதது குறித்து நாஞ்சில் சம்பத் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர், ‘’ அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா எங்கள‌ை புறக்கணித்து தற்கொலைக்கு இணையான தீங்கை தனக்கு தானே இழைத்துக் கொண்டது.

நாங்கள் 23 சீட் கேட்டிருந்தும், எந்த வித ஆலோசனையும் நடத்தாமல் வெறும் 9 சீட் மட்டுமே வழங்க அ.தி.மு.க., முன்வந்தது, திட்டமிட்டே ம.தி.மு.க., புறக்கணிக்கப்பட்டுள்ளதையே உணர்த்துகிறது. பேயிடம் இருந்து பிசாசிடம் வந்தோம், பிசாசு எங்களை பிராண்டி விட்டது.

இதற்கான பலனை அது அனுபவிக்கும். ஜெயலலிதா விலை போய் விட்டார்.

ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் 3வது அணி அமைந்தால் மட்டும் தான் அதை ஏற்றுக்கொள்வோம், விஜயகாந்த் தலைமையை ஏற்றுக் ‌கொள்ளமுடியாது.

வைகோவின் அதிரடி முடிவுகளால் தான் ம,தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதாக பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது, எனவே தான் வைகோ இம்முறை அமைதி காத்து வருகிறார். இருப்பினும் ம.தி.மு.க.,வின் இறுதி முடிவு வருகிற சனிக்கிழமை (19ம் தேதி) கட்சி உயர்நிலைக்கூட்டத்துக்ப் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று ஆவேசமாக கூறினார்.

Read more...

1 கோடி நஷ்டஈடு கேட்டு லோகு அய்யப்பன் வழக்கு

புதுச்சேரி அரசிடம் 1 கோடி நஷ்டஈடு கேட்டு பெதிக வழக்குபுதுச்சேரி மாநில பெரியார் திராவிட கழக தலைவர் லோகு அய்யப்பன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,


’’ஆஸ்ரேலியாவுக்கு இலங்கை தமிழர்களை அனுப்பி வைத்ததாக கூறி புதுச்சேரி போலீசார் என்னை கைது செய்தனர். பின்னர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைத்தனர். காலாப்பேட்டை சிறையில் நான் அடைக்கப்பட்டேன்.


தேசிய பாதுகாப்பு சட்டத்தில் என்னை சிறை வைத்ததை ரத்து செய்து மத்திய அரசு 13-12-10 அன்று உத்தர விட்டது. ஆனால் மத்திய அரசு உத்தரவிட்ட பிறகும் நான் சுமார் 30 மணி நேரம் சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டேன். இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே புதுச்சேரி அரசு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.


நீதிபதி ஜோதிமணி முன்னிலையில் இந்த மனு விசாரிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 வாரத்துக்குள் பதில் தருமாறு புதுச்சேரி அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

Read more...

உலகத்தாய்மொழி நாள்பெரியார் அறிவியல் மன்றம் சார்பில் உலகத்தாய்மொழி நாள் விழா பொதுக்கூட்டம் புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம், பெரியார் திடலில் 21.02.2011 அன்று சிறப்புற நடைபெற்றது. மன்ற நிறுவனர் தூ.சடகோபன் தலைமையில், புதுவை செந்தமிழர் இயக்கத்தோழர் ந.மு.தமிழ்மணி அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியனார். மன்ற உறுப்பினர் இல.இராமதாசு வரவேற்புரையாற்றினார். எழுகதிர் ஆசிரியர் அருகோ அவர்களும் கருத்துரை வழங்கினார். மேலும் அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர். ம.இலே.தங்கப்பா, பேராசிரியர். இரா.ச.குழந்தைவேலனார், வழக்குரைஞர். கோ.மன்றவானன், கலைமாமணி. கோவி.கலியபெருமாள் ஆகியோர் உரையாற்றினர். விழாவின் தொடக்கத்தில் புதுவை க.சுப்பையாவின் விடுதலைக்குரல் கலைக்குழுவினரின் தமிழிசை நிகழச்சி நடைபெற்றது. விழாவின் முடிவில் புதுவைக்குயில் பாசறை ச.ஆனந்தகுமார் நன்றி கூறினார்.

Read more...

சென்னையில் பரபரப்பு சிங்களவர்கள் மீது தாக்குதல்


சென்னை எழும்பூர் கென்னத் லேனில், சிங்களர்களின் மகாபோதி சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கு இலங்கை அரசு நிதியுதவி செய்கிறது. இங்கு ஒரு புத்தர் கோவிலையும் வைத்துள்ளனர். இங்கு இலங்கையைச் சேர்ந்தவர்கள் தவிர நேபாள நாட்டினரும் வருவார்கள்.
Ancient ghosts Pictures, Images and Photos

நேற்று இரவு இங்கு திடீரென பத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். உள்ளே வந்தவர்கள், சரமாரியாக கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அலுவலக கண்ணாடி, கோவிலுக்குள் இருந்த கண்ணாடி, டிவி உள்ளிட்டவை உடைந்து சிதறின. கல்வீச்சில், புத்த பிக்குகள் மைதிலி, சமீத தேரா, வஜ்ர தேரா உள்ளிட்ட ஐவர் காயமடைந்தனர். அவர்களையும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தாக்கினர். இதையடுத்து அவர்கள் அலறியடித்தபடி உள்ளே ஓடினர். மேலும் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் அலறி அடித்து ஓடினர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் போனது. அதேபோல இலங்கை துணைத் தூதரகத்திற்கும் தகவல் போனது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அவர்களால் தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முடியவில்லை. சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை துணைத்தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார்? ஏன்? எதற்காக தாக்கினார்கள் என்று விசாரித்து வரும் போலீசார், தாக்குதல் நடத்திய கும்பலை தேடும் பணியையும் முடுக்கிவிட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை கடந்த பத்து நாட்களில் 2 தமிழக மீனவர்களை கொடூரமாகக் கொன்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொதிப்பான நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கு. இந்தப் பின்னணியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது


நன்றி
- தமிழ் கூடல்
- போட்டோ பக்கட்

Read more...

தமிழக கடல் வழியே இலங்கைக்கு 1000 வாட் மின்சாரம் - ஷாக் ரிப்போர்ட்

"எல்லாத்துக்கும் மேல் மின் பற்றாக் குறையால் தமிழகமே தத்தளிக்கும் போது.... ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சிங்களவனுக்கு மின்சாரம் தருவதை ஏற்கவே முடியாது. போராட் டம் பெரியளவில் வெடிக்கும்'' என்கின்றனர்."

இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு பிறகு அந்த நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டிருக்கும் இந்திய அரசு, தற்போது தமிழகம் வழியாக இலங்கைக்கு மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது கண்டு தமிழர் அமைப்புகளும் மீனவர் அமைப்புகளும் கொதித்துப்போயிருக்கின்றன.

இந்திய மின் தொகுப்பு கழகமும் (பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இண்டியா) இலங்கை மின்சார வாரியமும் இணைந்து, தமிழகத்திலுள்ள ராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கடலுக்கடியில் மின்கேபிள்கள் மூலம் மின் பகிர்மா னம் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான அகழாய்வு பணிகளை துவங்க திட்டமிடப் பட்டுள்ளன.


இதுகுறித்து தெரிவித்துள்ள இலங்கை மின் வாரிய சேர்மன் வித்ய அமரபால,’""அரசின் ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் இந்த பணி துவங்கும்'' ’என்றிருக்கிறார்.

இந்த திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது பா.ம.க., மற்றும் இந்து மக்கள் கட்சி. இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப் பாளர் கண்ணன்,’’""இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ள இந்த மின் திட்டத்திற்கான மொத்த தூரம் 125 கிலோமீட்டர். இதில் கடலுக்கடியில் மட்டும் 50 கிலோ மீட்ட ருக்கு மின்சார கேபிள்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் திட்டச்செலவு 4 ஆயிரம் கோடி ரூபாய்.


இதில் 1 கோடி ரூபாய் செலவில் கடலுக்கடியில் மின்கேபிள்கள் அமைப்பதற்கான ஆய்வுகள் செய்ய மத்திய அரசின் மின் தொகுப்பு கழகம் முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டம் செயல் படுத்தப்படும்போது இலங்கைக்கு 1000 மெகா வாட் மின்சாரத்தை இந்தியா வழங்கும். தமிழகத் தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர் களை வகைத்தொகையாக படுகொலை செய்த இலங்கைக்கு மின்சாரம் வழங்க இந்தியா முடிவு செய்திருப்பது கண்டு நெஞ்சு பொறுக்கவில்லை.

நீதிமன்றத்தின் மூலம் இதனை தடுத்து நிறுத்துவதற்கு வழி உண்டா என்று சட்ட நிபு ணர்களுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருக் கிறோம். தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் காங்கிரஸை வேரறுக்க தமிழர் களுக்கு ரோஷம் வரவேண்டும். அப்போதுதான் தமிழர்களுக்கு எதிராக சிந்திப்பதை காங்கிரஸ் தலைமை நிறுத்தும்''’’என்கிறார் ஆவேசமாக.

இந்திய அரசின் இந்த திட்டத்தை அறிந்து பதட்டமடைந்திருக்கிறார்கள் தமிழக மீனவர்கள் சங்கத்தினர். நம்மிடம் பேசிய இந்திய மீனவர் பேரவை நிறுவனத் தலைவர் ஆவின் பாபு, தமிழ் நாடு மீன வர் முன் னேற்ற சங் கத்தின் தலை வர் கோசு மணி, தென் னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் கு.பாரதி, ""160 கிலோ மீட்டர் பரந்து விரிந்துள்ள மன்னார் வளைகுடா பகுதியில் 3600-க்கும் மேற்பட்ட அரிய வகையிலான கடல்வாழ் உயிரினங்களும் பவளப் பாறைகளும் உள்ளன.

under the sea Pictures, Images and Photos

இதனை ’தேசிய கடல்வாழ் உயிரின பூங்கா’என்று தமிழக அரசு பராமரித்து வருகிறது. இந்தச் சூழலில், கடல் வழியாக இலங்கைக்கு மின்சாரம் வழங்க மேற்கொள்ளப்படும் ஆய்வு பணிகளால் அரியவகை கடல்வாழ் உயிரினங்களும் தாவரங்களும் பவளப்பாறைகளும் அழிந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் மீனவர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். தவிர மின் கேபிள்கள் அமைக்கப்பட்டு மின்பகிர் மானத்தின் போது ஏதேனும் சிறிய தவறு ஏற்பட்டாலும் ஜீரணிக்க முடியாத விளைவுகளும் ஏற்பட்டு விடும். எல்லாத்துக்கும் மேல் மின் பற்றாக் குறையால் தமிழகமே தத்தளிக்கும் போது.... ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சிங்களவனுக்கு மின்சாரம் தருவதை ஏற்கவே முடியாது. போராட் டம் பெரியளவில் வெடிக்கும்'' என்கின்றனர்.

இந்த மின்சார திட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும்

தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு,’’""யுத்தம் என்கிற பேரில் ஈழத்தில் தமிழினப் படுகொலை செய்தது ராஜபக்சே அரசு. உலகின் பல்வேறு நாடுகள், "இனப்படு கொலை செய்த நாடு இலங்கை' என்று பதிவு செய்து கொண்டு வருகின்றன. ஐ.நா.மன்றமும் ராஜபக்சேவின் போர்க் குற்றங்களை விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது. இதனையெல்லாம் சிறிதும் மதிக்காமல், போரின் போது இலங்கைக்கு ஆதரவாக எப்படிப்பட்ட உதவிகளெல்லாம் செய்து ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இந்தியா துரோகம் செய்ததோ... அப்படியே போருக்கு பிறகும் செய்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகம் வழியாக இலங்கைக்கு மின்சாரம் என்பது தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் இந்தியா செய்கிற ஜீரணிக்க முடியாத பெரிய துரோகம். முளையிலேயே இதனை கிள்ளி எறிய தமிழர்கள் ஒன்று திரள வேண்டும். இல்லையேல் தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸின் நடவடிக்கைகள் அதிகரிக்கவே செய்யும்''’என்கிறார்.

தமிழகம் வழியாக மின்சாரம் என்பதால் தமிழகத்திற்கான மின் ஒதுக்கீட்டிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்கப்படும் என்கிற சந்தேகம் பலருக்கும் இருப்பதால், இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மன் கபிலனிடம் கேட்டபோது,’’" "இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தும் மின் தொகுப்புக்குள் கொண்டு வரப்பட்டு... மின் தொகுப்பி லிருந்துதான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு மின்சாரம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டு அதற்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது.


இலங்கைக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பாக இந்திய மின்தொகுப்பு கழகம் எந்த மாதிரியான செயல்முறைகளை கையாளுகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால்... தமிழகத்திற்கான மின் ஒதுக் கீட்டிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்கப் படாது என்பதை மட்டும் உறுதியாக தெரிவிக்க முடியும். அதனால் அந்த சந் தேகம் யாருக்கும் வேண்டாம்''’’என்கின்றார்.நன்றி - Tamilcanadian

Read more...

சினைமுட்டை விற்கும் இளம்பெண்கள்! புதுச்சேரிவியாபாரவிபரீதம்!

மாநிறமான பெண்ணின் சினைமுட்டை ரூ. 10 ஆயிரம்... சிவப்பான இளம்பெண்ணின் சினைமுட்டை ரூ. 50 ஆயிரம்... லட்சணமான, கல்லூரி மாணவியின் சினைமுட்டை ரூ. ஒரு லட்சம்... கேரளப் பெண்ணின் சினைமுட்டை ரூ. 3 லட்சம்...

இப்படி சினைமுட்டை வியாபார விபரீதம் மேலை நாடுகளில் அல்ல... நமது புதுச்சேரியில்தான் ஜரூராய் நடக்கிறது.

‘‘குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு உருவாக்க வாடகைத் தாய், சினைமுட்டை தானம் போன்ற முறைகள் மருத்துவத் துறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள் சிலரோ சினைமுட்டை தானத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் கரன்ஸி வேட்டைக்கு இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளை இரையாக்குகிறார்கள்’’ என்று அதிர்ச்சியோடு சொல்கிறார்கள் புதுச்சேரி சமூக ஆர்வலர்கள். இது பற்றி புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையின் சீனியர் பெண் மருத்துவர் ஒருவரிடம் பேசினோம்.

‘‘வலுவில்லாத சினைமுட்டை, ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால் சிலருக்கு பிள்ளைப் பேறு கிடைப்பதில்லை. இப்படி குழந்தைக்காக ஏங்கும் மேல்தட்டு, நடுத்தர மக்கள் லட்சக்கணக்கில் செலவு செய்ய தயாராக இருப்பதை சில மருத்துவ வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அவர்கள்தான் சினைமுட்டை குறைபாடுள்ளவர்களுக்கு குழந்தைப் பேற்றை உருவாக்க வேறொரு பெண்ணிடமிருந்து சினைமுட்டையை பணம் கொடுத்து தானமாக பெறுகிறார்கள். ஆனால், இப்போது தானம் என்ற பெயரில் இது வியாபாரமாகிவிட்டதுதான் கொடுமை.

சினைமுட்டையை தானமாகப் பெறுவதற்கு இந்திய மெடிக்கல் கவுன்சில் சில சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறது. சினைமுட்டை கொடுக்கும் பெண்ணிற்கு ஆஸ்துமா, இதயக் கோளாறு, மஞ்சள் காமாலை, ரத்த சோகை போன்ற நோய்கள் அல்லது பரம்பரை நோய் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். அதன்பிறகே சினைமுட்டையை எடுக்கவேண்டும். காரணம், ஆரோக்கியமான பெண்ணிடம் இருந்து சினைமுட்டை எடுத்தால்தான், அதைப் பெறும் பெண்ணுக்குப் பிறக்கக்கூடிய குழந்தையும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

ஆனால், பணத்தாசை பிடித்த டாக்டர்கள், சினைமுட்டை தரும் பெண்களிடம் சுகர், ரத்த அழுத்தம், எச்.ஐ.வி. மாதிரியான சில பரிசோதனைகளை மட்டும் செய்துவிட்டு, சினைமுட்டைகளை எடுத்து விற்கிறார்கள்’’ என்றார் வேதனையோடு.

அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் சிலரோ, “இந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் டாக்டர்களில் பலர் சொந்தமாக கிளினிக்குகள் நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களிடம் பணிபுரியும் நர்ஸ்கள், கம்பவுண்டர்களையே சினைமுட்டை புரோக்கர்களாக பயன்படுத்துகிறார்கள்.

சினைமுட்டை கொடுக்கும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளம் விதவைகளுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையும், சிவப்பான இளம் பெண்களுக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையும், அழகான காலேஜ் பெண்களுக்கோ ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரையும், கேரளப் பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரையும் கொடுக்கப்படுகிறது.

சினைமுட்டையை விற்பதில் பெரும்-பாலோர் காலேஜ் பெண்கள்தான். இது-போன்ற சினைமுட்டை விற்பதால், உடம்பில் வெளிப்படை-யாக எந்த மாற்றமும் தெரியாது என்பதால் இடைவெளி விட்டு இந்த பெண்கள் சினைமுட்டைகளை தொடர்ந்து விற்றுவருகிறார்கள்.

சினைமுட்டையை, ஒரு பெண்ணிடமிருந்து எடுப்பதற்கு 10 நாட்கள் முன்பிருந்தே தொடர்ந்து ரூ. 600 மதிப்புள்ள ஹார்மோன் ஊசிகளைப் போடவேண்டும். அந்த ஊசிகளையும் இந்த அரசு ஆஸ்பத்திரியில் ஓசியில் போடுகிறார்கள். பிறகு தங்­­­­­களுடைய கிளினிக்குக்கு வரச் சொல்லி, சினைமுட்டையை எடுத்துவிடுகிறார்கள். சினைமுட்டை கொடுப்பவர்களிடம் முதலில் பெரிய தொகையைக் கொடுப்பதாகச் சொல்கிற டாக்டர்கள், பின்பு குறைந்த தொகையைக் கொடுத்து ஏமாற்றிவிடுகிறார்கள்.

புதுச்சேரியை அடுத்துள்ள ஒரு கிராமத்துப் பெண்ணிடம் சினைமுட்டை பெறுவதில் இந்த ஆஸ்பத்திரி டாக்டர்களான ஒரு பெண் டாக்டருக்கும் ஒரு ஆண் டாக்டருக்கும் கடந்த வாரம் பிரச்னை வெடித்து, அது வடக்கு பகுதி எஸ்.பி.வரை போய், அவர் தலையிட்டு ஒரு வகையாக அமுக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு டாக்டருக்கு மெமோ கொடுக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்கள்.

இதுபற்றி புதுவையின் பிரபல பாலியல் குறைபாடு சிறப்பு மருத்துவரான பீட்டர் பால் அல்போன்-ஸிடம் பேசினோம். “சினைமுட்டை தானம் வெளிநாடுகளில் சாத்தியம். அங்கு சினைமுட்டை தானம் பண்ணுகிற பெண்களே இன்டர்நெட்டில் தன்னோட கூந்தல், தோல் நிறம், உருவ அமைப்பு போன்றவற்றையெல்லாம் சொல்லி விளம்பரம் செய்வார்கள். அதேபோல, இங்கே அந்த வேலையைச் செய்ய புரோக்கர்கள் இருப்பது வேதனையான விஷயம்.

திருமணமாகாத பெண்கள் பணத்திற்காக சினைமுட்டை கொடுக்க, அடிக்கடி ஹார்மோன் ஊசி போட்டுக்கொள்வதால்... பிற்காலத்தில் அப்பெண்களுக்கு உடல்ரீதியாகப் பல பிரச்னைகள் ஏற்படுவதோடு, அவர்களுக்கு பிள்ளை பிறக்கிற வாய்ப்புமில்லாமல் போகலாம்...’’ என்று எச்சரித்தார்.

இந்தச் சினைமுட்டை வியாபாரம் குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் திலிப்குமார் பாலிகாவின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். “சினைமுட்டை பிஸினஸ் பற்றி எந்த புகாரும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. இருந்தாலும், இனி கவனமாக செயல்படுவோம்...” என்றார்.

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் வல்சராஜிடம் பேசினோம். “இது சம்பந்தமாக இயக்குனர் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி, இம்முறைகேட்டைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்கிறேன்’’ என்றார்.

இளம் பெண்களின் எதிர்-காலத்தையே ‘முட்டை’யாக்கக் கூடிய இந்த சினைமுட்டை வியாபார விபரீதத்தை உடனடியாக தடுக்காமல் இருப்பது, எதிர்கால சந்ததிகளுக்கு செய்யும் துரோகம்!
- நன்றி - தமிழக அரசியல்

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP