வைகோவின் பொருளாதார முற்றுகைப்போராட்டம் - வெற்றி
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் முற்றுகை போராட்டம் நடத்தி கேரளாவுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று மதிமுக போது செயலாளர் வை.கோ விடுத்துள்ள அழைப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்று ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
தாங்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை லாரிகளை கேரளாவுக்கு ஓட்ட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் நல்லதம்பி அறிவித்துள்ளார்.
தமிழக லாரி முன்பதிவு அலுவலகங்கள் சங்கமும் கேரளாவுக்கு நாளை முதல் காலவரையறை இன்றி முன்பதிவை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்கள்.
கேரளாவுக்கு சரக்கு எடுத்து செல்லும் லாரிகளை மலையாள மக்கள் தாக்குவதால் லாரிகள் சேதமடைகின்றன, ஓட்டுனர் மற்றும் கிளீனர்கள் தாக்கப்படுகின்றர்கள். பல இடங்களில் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுதத்தப்படுகின்றது, அதனால், சரக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் எங்களால் கொண்டுபோய் சேர்க்க முடியவில்லை. மேலும் கொண்டு போகும் காய்கறி, பழங்கள் எல்லாம் அழுகிவிடுகின்றது.
இதனால், நாளை காலை முதல் (21.12.2011) தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் லாரிகளை நிறுத்த முடிவு செய்துள்ளார்கள், எனவே கேரளாவுக்கு செல்லும் சரக்குகளை முன்பதிவு செய்வதும் நாளை முதல் நிறுத்தப்படும். கேரள மற்றும் தமிழகத்திற்கு இடையே முல்லை பெரியாறு அனை விவகாரத்தில் நல்லிணக்கம் ஏற்ப்பட்டு மக்களின் வாழ்க்கை முறை சுமூகமடையும் வரை கேரளாவுக்கு நாங்கள் சரக்குகளை அனுப்பமாட்டோம் என்று தமிழக லாரி புக்கிங் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜவடிவேல் நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதன் மூலம், தினமும் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு சரக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படும், கோழி, மாட்டு இறைச்சி, பால், காய்கறிகள், சர்க்கரை, பழங்கள் உள்ளிட்ட பலவகையான அவசியமான பொருட்களில் தட்டுப்பாடு கேரளாவில் ஆரம்பிக்கும் இதன் மூலம் அங்கு பெரிய அளவில் விலையேற்றம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் வைகோ அறிவித்துள்ள முற்றுகைபோராட்டம் வெற்றி பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment