பாரதிதாசனின் தமிழின மீட்பு அடையாளம்


    இருபதாம் நுாற்றாண்டுக் கவிஞா்களுள் ஒருவரான பாரதிதாசன் தமிழ்ச் சமுதாயப் பார்வை கொண்டிருந்தமைக்கு  அவரது படைப்புக்களே சான்று பகர்கின்றன.  தம்முடைய கவிதை நுால்கள் பெரும்பாலனவற்றில் வாய்ப்பமைந்த இடங்களில் எல்லாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அறிவியல் உண்மைகளைத் தொட்டுக் காட்டவும் அவா் தவறவேயில்லை, மேலோட்டப் பார்வையில் எளிதாக தோன்றினாலும் அறிவியல் நோக்கோடு அணுகிப்பார்ப் போருக்கு அவா் தம் கருத்துக்கள் காலத்திற்கு ஏற்றவை என்பது புலப்படும்.

   இவரிடம் அயல் மொழி எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு என்பவை தாய் மொழிக் காப்பாகப் புலப்படுகின்றன.  தமிழ் இருப்புக்கு எதிரானவை பார்ப்பன மேலாண்மையும், வடமொழி ஆதிக்கம் என்பது கவிஞார் கொண்ட உறுதியான முடிவு, அத்துடன் புராணப் பரப்புதலும், வடமொழி வழிநடக்கும் மந்திரப் புசையும்  கூடத் தமிழ் வளா்ச்சிக்கு எதிரானவை தடையானவை என்று கருதினார்.  எனவே இவற்றை கையாள்பவா் தமிழை வளர்ப்பதில்லை அழிப்பா் என்று கூறி , சிறுதுளியாக இருந்த இவ்வுணா்ச்சி பிற்காலத்தில் பெரிதாக வளா்ந்த போது எதிர்ச்சியாக மாறியது.  இவருடைய பார்ப்பன எதிர்ப்புணர்ச்சியாக மாறியது. இவருடைய பார்ப்பன எதிர்ப்புணர்ச்சிக்கும் பெரியாரின் தொடர்பே காரணம். அதனால் தான் பார்ப்பன, வடமொழி எதிர்ப்பைப் பாரதிதாசன் தெளிவாக படைத்திருக்கிறார்.

    அவா் வடமொழியை ஆதரிப்பவா்களை நரிகளென்றும், நாய்களென்றும் கூறும் போது அவரது கருத்து வெளிப்படுவதைக் காணமுடிகிறது.
அதனால் தான் 1948 ஆம் ஆண்டில் வெளிவந்த பாரதிதாசனின்அகத்தியன் விட்ட புதுக்கரடிஎன்னும் பாடல் ஆரியக் கொள்கைகள் தமிழகத்தில் எவ்வாறு நுழைந்தன என்பதை அகத்தியன் பற்றிய தொன்மம் மூலம் விளக்குகிறது.  செந்தமிழ்ப் பொன்னேட்டில் ஆரியர் வாழ்வியலைப் புகுத்தியவன் அகத்தியன்  என்பது நீண்டநாள் கருத்து, பழைய திராவிடம் செழுமைமிக்கது, செந்தமிழ் இலக்கணச் சிறப்
புடையது.  செந்தமிழ் இலக்கணச் சிறப்புடையது, வாணிகமாட்சி கொண்டது, தொழிற்சிறப்பும், கலைப்பெருமையும் கொண்டதால் பெரும் பெரும் புகழுக்குரியது என்பதைப் பாரதிதாசன் கூறுகிறார்.

    திராவிட நாட்டில் அகத்தியன் சந்தனப் பொதிகையில் தங்கித் தமிழ் பயின்று மன்னின் ஆதரவு பெற்று நச்சுக் கொள்கைகளைக் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாகப் பரப்பினார்.  இவற்றை நம்விய மன்னன் அடிமையானான்.  இதனால் தமிழ்க்கலை மாண்பு ஒழுக்கம் யாவும் தகா்ந்தன, பழந்தமிழ் நுால்கள் எரிந்தன, இதனால் அருந்தமிழகத்தில் அகத்தியம் பிறந்தது.  தமிழனின் வாழ்க்கை நோக்கு ஆரியப்  பண்பாட்டின் தாக்கத்தால் உருமாறிச் சிதைந்து போனதென்பதை இதன்மூலம் வலியுறுத்துகிறார். இவ்வாறு செழுமை மிகுந்த திராவிடநாட்டில் வேதக்காலத்திலேயே நாரதா், அகத்தியா் முதலிய ஆரியா் தென்னாடு வந்து முத்தமிழையும் கற்றனா் என்கிறார்.

   கம்பனும், ஆரணியகாண்டத்தில் அகத்தியா் வருமுன்னே தமிழ் இருவகை வழக்கிலும் சிறந்து இருந்தது, வேதமொழியாக உயபடந்திருந்ததென்பது அகத்தியா் இறைவனருளைப் பெற்றுத் தமிழ் கற்று நுாலியற்றினார் என்கிறார். கம்பன் கருத்துப்படி தமிழின் தோற்றம் வரலாற்றிற்கு முற்பட்டது என்பது அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

    உலகிலேயே முதன் முதல் தோன்றிய நாடு தமிழ் நாடு என்றும் கூறப்படுகிறது. மனித மேன்மைக்கு மனித முற்போக்குக்கு ஏற்ற மொழி தமிழ், தமிழை விட மேலான ஓரு மொழி, இந்தநாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகின்றேனே தவிர, சிவபெருமான் பேசிய மொழிஅது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல எனப் பாரதிதாசன், பெரியாரின் பார்வையிலேயே தமிழ் மொழியின் பெருடைகளையும் பிறமொழி எதிர்ப்பையும் பாடல்களாக்குகிறார். 

    தமிழ் நாவலந்தீவில் தோன்றிய இயல்பான முதன்மை மொழி சிறந்த இலக்கியங்களை உடையது, பலகிளை தொழிகட்குத் தாய்மொழி, தொன்மையானது, இன்று வரையில் வழக்கழிந்து விடவில்லை., சாகாத் தமிழ் என்று கூறியவர் பாரதிதாசன்
                                                                                                              ஆதிசிவன் பெற்றுவிட்டான்என்னை
                ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
                வேதியன் கண்டு மகிழ்ந்தேநிறை
                மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்
                ---- - - - --
                ஆன்ற மொழிகளினுள்ளேஉயர்
                ஆரியத்திற்கு நிக ரென வாழ்ந்தேன்
என்னும் பாரதியாரின் பார்வையிலிருந்து மாறுபட்டு, முரண்பட்டு , பெரியாரைப் போலவே ஆதி சிவனையும், அகத்தியரையும் பாரதிதாசன் ஏற்றுக் கொள்ளவில்லை.  பாரதிதாசன் தொல்காப்பியம் அகத்தியத்திலிருந்து பிறக்கவில்லை என்பதில் உறுதியாக உள்ளார்.  அவா் கருத்தை மெய்பிக்கும் வகையில் பல இலக்கியச் சான்றுகள் உள்ளன.
    ஆதாலால் தான் அகத்தியர் மருத்துவ நுாலையும், நாரதா் இசைநுாலையும் வட மொழியில் மொழி பெயர்த்ததாகத் தெரிகின்றது,  இவ்விருவரும் முறையே அகத்தியம் என்னும் இலக்கண நுாலையும் இசைத் தமிழிலக்கணத்தையும் தமிழில் இயற்றினார். இங்ஙனம் ஆரியா் தமிழ் நாலியற்றிய செயல் தமிழ்க் கருத்தை ஆரியார் கருத்தாக மாற்றவம், ஆரியக் கருத்தைத் தமிழ் நுால்களில் சிறிது சிறிதாய்ப் புகுத்தற்குமேயன்றித் தமிழை வளர்த்தற்கன்று என்று பாவாணர் கருத்துக்குப் பாரதிதாசன் உடன் பட்டு நிற்கிறார்.

   மாணிக்கவாசகா் வரலாறும் காலமும்என்னும் நுாலில் குறிப்பிடுஞ் செய்திகள் இங்கு அறியத்தக்கன, மணிமேகலையில் அகத்தியனாரைப் பற்றிக் குறிப்புக் காணப்படினும் அவா் தமிழுக்கு இலக்கணம் செய்தார் என்றோ, தொல்காப்பியர்அவருக்கு மாணவர் என்றோ சொல்லப்படவில்லை, அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் ஒரே காலத்தேச் கோ்ந்தவர்கள் என்று கார முரணாகக் கூறியது மட்டுமல்லாமல், அகத்தியனாருடைய மாணவர்   தொல்காபியர் என்ற கருத்தை முன் வைத்த ஆரியர்கள் தாம் வாழ வழி தேடியிருக்கின்றார்கள். ஆனால் இவ்வாறு சொல்லப்பட்டு வந்த கருத்தையும் தமிழ் அறிஞர்கள் உடைத் தெரிகின்றனா்.

அதாவது பன்னிரு படலம் என்னும் புறத்திணை நுால் தொல்காப்பியா் உட்பட்ட மாணாக்கர் பன்னிருவரால் இயற்றப்பட்டது என்பது உண்மையின் அதன் கூறப்பட்ட புறத்திணை இலக்கணத்தோடு தொல்காப்பியமும் பெரிதும் ஒத்திருத்தல் வேண்டும் . ஆனால் அங்ஙனம் ஒத்துவரவில்லை என்பதே உண்மை.
   எனவே பன்னிருபடல வெட்சிப் படலம் தொல்காப்பியனார் செய்ததன்று என்பதும் அதன் கண்ணுள்ள ஏனைய படலங்களும் அகத்தியர் மாணாக்கரால் செய்யப்பட்டன அல்ல என்பதும் நன்கு பெறப்படும்.  பன்னிருபடலம் சேர்ந்து செய்தது என்பது வெறுங்கட்டுக் கதையே என்று மறைமலையடிகள் கூறியுள்ளார். அதே போல் அகத்தியத்தைப் பற்றி வெள்ளைவாரணன் குறிப்பிடும் போது, அகத்தியருக்கும் தொல்காப்பிடயருக்கும் உள்ள தொடா்பினைத் துணிதற் கேற்ற சான்று எதுவும் நுாலில் இல்லை என்றும், பின்னுள்ளோரால் காட்டப்பெறும் அகத்திய நுாற்பாக்கள் தொல்காப்பியக் காலத்திற்கு மிக மிகப் பிற்காலத்தில் இயற்றப்பட்ட பெற்றனவாதல் வேண்டும் என்று கூறுவர். இக் கருத்தையே கே.என். சிவராசப்பிள்ளை , மறைமலையடிகள், கந்தையாபிள்ளை போன்றோரும் உடன்படுகிறார்.

   நச்சினார்க்கினியர் - பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவை அகத்தியதொல்காப்பிய நெறிகளின்றும் மாறுபட்ட பிற்கால நுால்கள் என்பர். இக் கருத்துக்கு இளம்புரணாரும் உடன்படுகிறார்.  இவற்றிலிருந்து பார்க்கும் போது அகத்தியமும் தொல்காப்பியமும் மாறுபட்டு நிற்கின்றன என்பதைக் காணமுடிகிறது.  வீரசோழியத்தில்அவலோகிரிதரிடம் அகத்தியர் தமிழ் கற்றார் தமிழாகமங்களையும் கேட்டார் எனக்கூறப்பட்டுள்ளது.  இதனால் அகத்தியர் தென்பகுதிக்கும், பிறநாடுகளுக்கும் ஆரிய மதக் கோட்பாட்டுகளைப் பரப்பவே சென்றிருக்க வேண்டும் என்று கே.என். சிவராசப்பிள்ளை கூறுகிறார்.
    அகத்தியம் தமிழன் தோற்றத்துடன் இணைத்துப் பேசப்படுவதை ஏற்காத பாரதிதாசன் தமிழின் முதல் இலக்கணம் தொல்காப்பியம் என்று மறுத்து மொழிகிறார். சிவன் பார்வதி திருமணத்தைக் காண அகத்தியரும் தேவர்கள் அனைவருவம் இமயத்தில் கூடினார்கள் என்றும் அதனால் வட நிலம் தாழ்ந்து, தென்னிலம் உயர்ந்தது என்றும் ஒருகருத்து நிலவி வருகிறது.

    இந்த நிலத்தைச் சமநிலைப்படுத்தவே சிவன் அகத்தியரைத் தென்நாட்டிற்கு அணுப்பினார் என்று கூறப்படுகிறது.  ஆனால் இவற்றை பார்ப்பன மேலான்மை பார்வையில் ஆராயும் போது அவற்றில் பொதிந்து கிடக்கும் செய்திகள் நம்முடைய தொன்மத்தை அழிக்கும் செயலிலே உள்ளது.  அதாவது கலை வளமும். இலக்கிய வளமும், வனப்பும் மிக்க எல்லா நிலைகளிலும், இருந்த திராவிட நாட்டை தைப்பற்றும் விதமாக வடநாட்டிலுள்ள ஆரியா்கள் திராவிடநாட்டில் குடியேறினார், அத்தைகைய திராவிட அடையாளத்தை மறைக்கும் விதமாக அகத்தியன் தமிழ் கற்பிக்கும் திராவிட நாட்டிற்கு வந்தான் என்றும் அதனால் உயா்ந்திருந்த திராவிடநாடு சமநிலை அடைந்தது என்ற கருத்தை பாரதிதாசன்,
                  அகத்தியன் சொன்னதுமில்லைதமிழ்    
                அகத்தியமே முதல் நுால் எனப் பொய்யாம்
                நாமு தொல்காப்பிய நுாலும்இங்கு
                நம்மவர் கொள்கை நவின்றிடவில்லை
                மிகு தமிழ் நுாற் கொள்கை மாற்றிடப்பிறப்
                மேல் வைத்த நுாலே அகத்தியம் ஆகும்.    

இது போன்ற காரணங்களால் தான் தமிழ் இலக்கிய நுால்களில் ஆரியக் கலப்பு கலந்துள்ளது என்கிறார். இத் தமிழ்ச் சமுதாயத்தில் மண்டிக் கிடந்த அறியாமை மூடநம்பிக்கை, குருட்டுப் பழக்க வழக்கங்களை அகற்றிச் செம்மைப் படுத்துவதற்கு முயன்ற புரட்சிக்கவிஞருக்கு அவை ஆரியத் தாக்குரவின் கேடுகள் என்ற எண்ணமே ஏற்பட்டது,  ஆரிய இனத்தையும் பண்பாட்டையும் எதிர்ப்பது குறுகிய செயலாகச் சிலரால் கூறப்படலாம்.  ஆயின் தமிழ்ச் சமுதாயத்தின் பிற் போக்குத் தன்மைக்கும் அறிவு வளர்ச்சித் தடைக்கும், அரசியல் தேக்கு நிலைமைக்கும் காரணமாக இருந்து பெரும் பகுதித் தமிழ் மக்களை அடக்கி ஆண்டுவரும் ஆரிய வல்லாண்மை எதிர்ப்பது அறிவார்ந்த நோக்கில் தவறாகாது என்பது பாரதிதாசன் கோட்பாடு எனவே தான்
                  நான் தான் திராவிடன் என்று நவில்கையில்
                தேன் தான் நாவெல்லாம் வான் தான் என் புகழ்
                எனத் திராவிடச் சார்போடும்
                ஆரியன் அல்லேன் என்னும் போதில்
                எத்தனை மகிழ்ச்சி எத்தனை மகிழ்ச்சி
                என ஆரிய எதிர்ப்போடும் பாடுகிறார்.”                  

மனிதச் சமுதாய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் போதெல்லாம் வள்ளுவரைக் கொணரத் தவறமாட்டார். சுய மரியாதை இயக்கம் காட்டும் சமுதாயம் பொதுவுடைமைச் சமுதாயமே என்று பேசுகிறார் பாரதிதாசன்.  நம் நாட்டில் பொதுவுடைமைத் தத்துவத்திற்கு எதிரான கருத்துக்களின் தோற்றத்திற் கெல்லாம் ஆரிய சூழ்ச்சியே காரணம் என்பது இவரின் அழுத்தமான வாதம்.

                  ஆதி மனிதன் தமிழன் தான்
                அவன் மொழிந்ததும் செந்தமிழ்த் தேன்
                மூதறிஞர் ஒழுக்க நெறிகள்
                முதலிற் கண்டதும் தமிழ் தான்.”
என்றும் பாடுகிறார்.

   பாரதிதாசன், மானுட சமுதாயத்தின் கவிதை குயிலாக நின்று தமிழை மீட்டெடுப்பதன் மூலம் தான் தமிழரின் உரிமையை மீட்டெடுக்க முடியும் என்று தெளிவாக எண்ணியிருந்தார். இதே நிலையில்  உலக நோக்கிலும் தமிழரின் அடையாளாத்தை முன்னிறுத்தி உரிமைகள் கோரினார் என்று அறிய முடிகிறது.
   
         இவ்வாறு அகத்தியன் விட்ட புதுக்கரடியானது தமிழகத்தில் நிலவி வந்து தமிழனின் தொன்மையான அடையாளங்களை அழித்து ஆரிய அடையாளத்தை மீட்ருவாக்கம் செய்திருக்கின்றனர் என்பதை அறிந்தே பாவேந்தர். இத்தகைய நிகழ்வானது ஒரு கட்டுக் கதை எனவே தமிழனின் அடையாளத்தை புதிய அடையாளத்தை புதிய அடையாளத்தின் மூலம் மீட்டெடுக்க விழைகிறார்.


.ஆனந்தன் M.A.,M.A.,B.Ed.,M.Phil.,(P.hd).,                                                                                                          
விரிவுரையாளர்., ஆச்சாரியா தொழிற்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்லூரி - புதுச்சேரி

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP