கரும்புலிகள் நாள் - 2011
உன் வசமாகும் உலகு.. கரும்புலிகள் உயிராயுதம்
காற்று நடக்கிறது கை வீசீ
பால் நிலவு பூத்துக் கிடக்கிறது பாலைப் பொழிந்தபடி..
நேற்றிரவைப் போல
நெடுங்கேணி குலுங்குகிறது
துரத்தே வெடிக்கும் சுடு குண்டின் அதிர்வினுக்கே
ஈரக்குடல் வற்றியிருக்கிறது...
நெஞ்சுக்குள்ளே எதோ திரண்டு எழும் மூச்சை அடைக்கிறது
சேதாரமாச்சா
எம் திருவாழ்வு
கைப் பிடிக்குள் மலந்திருந்த வாழ்வின்
மகிமை
வேரறுந்து தளர்ந்துள்ளதாதென்று...
சாவே எம் நாளாந்தம் என்றாச்சா
எமையேன்
இந்த இடரேன் தொடர்கின்றது
குன்றாய் நிமிர்ந்த
குலம் இடிந்து
பள்ளத்தில் விழும்படியான விதியேன் கவிழ்ந்துள்ளது...
பாழும் இருள் விலக்கும்
பருதியும் வானத்தில் ஏன் இன்னும் வந்தெழவில்லை
எம் தலையில் மானத்துக்கு அணியும் மகுடம்
ஏன் கிடைக்கவில்லை...
வேறொன்றுமில்லை விடுதலையின் மீது
எமக்கு ஆராத காதல் அனுபவமில்லை
அவதரித்த தாய் நிலத்தின்மீது
தனி அன்பு பெருக வில்லை
தீயுண்ட நெஞ்சம் சினம் கொண்டு சீறவில்லை
போத்தல் அடைத்த புலனாய்
நேற்று இரவு கூத்து முடிந்த கூத்தரங்காய் பேசாமல் போர்த்துக் கிடக்கிறோம்...
புதுவாழ்வு கை வருமா
வாராது காணும்
வல்லமைக்கு திலகமிட்டு போராட வேண்டும்
புறப்படுமோய் புறப்படுமோய்.. ஏன் காணோம் வானத்து அரசன் வந்திறங்கி
எம் கையில் தானமென விடுதலை தருவான...
நாமேதான் எழுந்தெமக்கு
எதிரான எதையும் சரித்துவிடும் பலத்தோடு எழுந்து பகை விழுத்தவேண்டும் காண்
அஞ்சாமை ஆற்றல்
அடங்காவலு வாழ்வை பஞ்சைப் போல எண்ணும் பக்குவம் இவை வேண்டும் நம்பிக்கை
வேண்டும்...
நாளை நமக்கெனும்
தென்பு எமக்கு வேண்டும் துணிவெனும் பலமுடைய தும்பிக்கை வேண்டும்
தொடர்ந்து அலைக்கும்
துயர் இருளை கண்டு சிரிக்கின்ற கனிவான மனம் வேண்டும்
தொண்டு தொழும்பறியாய் சுடரொளியாய்
என் நாளும் நடக்கும் பலம் வேண்டும்
நடுவழியில் விட்டகலா பிடைக்கும் தோள் வேண்டும்
பிறகெல்லாம் உன் வசமே.....!
புதுவை இரத்தினதுரை
0 comments:
Post a Comment