1 கோடி நஷ்டஈடு கேட்டு லோகு அய்யப்பன் வழக்கு
புதுச்சேரி அரசிடம் 1 கோடி நஷ்டஈடு கேட்டு பெதிக வழக்கு
புதுச்சேரி மாநில பெரியார் திராவிட கழக தலைவர் லோகு அய்யப்பன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
’’ஆஸ்ரேலியாவுக்கு இலங்கை தமிழர்களை அனுப்பி வைத்ததாக கூறி புதுச்சேரி போலீசார் என்னை கைது செய்தனர். பின்னர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைத்தனர். காலாப்பேட்டை சிறையில் நான் அடைக்கப்பட்டேன்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் என்னை சிறை வைத்ததை ரத்து செய்து மத்திய அரசு 13-12-10 அன்று உத்தர விட்டது. ஆனால் மத்திய அரசு உத்தரவிட்ட பிறகும் நான் சுமார் 30 மணி நேரம் சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டேன். இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே புதுச்சேரி அரசு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.
நீதிபதி ஜோதிமணி முன்னிலையில் இந்த மனு விசாரிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 வாரத்துக்குள் பதில் தருமாறு புதுச்சேரி அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment