எழுச்சித்தலைவனுக்கு பாராட்டுவிழா

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாணவர் பருவத்தில் இருந்தே அரசியலில் ஈடுபட்டவர். தமிழ்நாடு முழுவதும் கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்த தலைவர்களில் வைகோவும் ஒருவர்.அரசியலில் அவரது 50 ஆண்டு கால பணியை பாராட்டி சென்னையில் ம.தி.மு.க. வினர் பிரம்மாண்ட மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இது பற்றி ம.தி.மு.க. தென்சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன்,

’’அரசியல்-பொது வாழ்வில் 50 ஆண்டுகள் பொன்விழா காணும் பொதுச் செயலாளர் வைகோவின் மக்கள் சேவை பணியை பாராட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமாக இந்த மாநாடு நடத்தப்படும். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் தொண்டர்களை திரட்டி வெற்றி மாநாடாக இதை நடத்த உள்ளோம்.

இந்த மாநாட்டில் வைகோவின் சிறப்புரை மேலும் எழுச்சியை உருவாக்கும். கட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்த மாநாடு அமையும். மாநாட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’என்று கூறியுள்ளார்.

2 comments:

Bogy.in March 7, 2010 at 1:48 PM  

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

க.மணிவர்மன் October 9, 2010 at 11:01 AM  

வாழ்த்துக்கள் செழியா- உங்களுக்கு..
தங்கள் வலைப்பதிவை பார்த்து எனக்கும் ஆர்வம் ஏற்படுகிறது. வலைப்பதிவில் எழுத.

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP