புதுவையில் தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து லோகு அய்யப்பன் விடுதலை
இலங்கை அகதிகளை படகில் வெளிநாட்டுக்கு தப்ப வைக்க முயற்சி செய்ததாக புதுவை பெரியார் திக தலைவர் லோகு.அய்யப்பன் கவுன்சிலர் சக்திவேல் ஆகியோரும் டீசல் பதுக்கியதாக காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணியும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் லோகு அய்யப்பனின் தந்தை லோகநாதன் தனது மகன் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யு மாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மனு அனுப்பியிருந்தார். இதேபோல் கவுன்சிலர் சக்திவேலுவை விடுவிக்குமாறு அவரது மனைவி கயல்விழியும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மனு செய்திருந்தார். இதையடுத்து லோகு அய்யப்பன் கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை பரிசீலனை செய்து ரத்து செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது. இதையடுத்து லோகு.அய்யப்பன் சக்திவேல் ஆகியோர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதற்கான ஆவணங்களை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைக்கு தாசில்தார் தில்லைவேல் நேற்று மாலை 5.30 மணிக்கு எடுத்துச் சென்றார். நடை முறை காரணங்களால் இருவரையும் விடுதலை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. சிறை வாசலில் அவர்களை வரவேற்க காத்திருந்த ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பியதால் வடக்கு எஸ்.பி. பழனி வேலு (பொறுப்பு) தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர்இ இரவு 10.30 மணிக்கு இருவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
நன்றி தினகரன்
0 comments:
Post a Comment