அப்துல்கலாம் காங்கிரஸ் அரசின் தற்போதைய தரகரா?
இலங்கைக்கு நான்கு நாள் சுற்றுவிஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், இப்பிரடகடனத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டார். ஊர் உலகை ஏமாற்ற 10 வருட செயல் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த 'மும்மொழி இலங்கை' திட்டத்தின் தொடக்கவிழாவின் போது ஈழத்தமிழர்களின் அடிப்படைத் தன்மையை சற்றும் உணராதவராய், ஏட்டு அறிவை மட்டுமே கையாண்டு வருபவராய் உரையாற்றிய டாக்டர் அப்துல் கலாம், 'கொண்டாட்டங்களின் அடிப்படையிலேயே வேறுபாடுகளை கலைய முடியும். மோதலிலான் அல்ல. வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை இழப்பு, ஆகியன சச்சரவுகள், கோபம், வன்முறை என்பவற்றை தூண்டிவிடுகின்றன.
இவையே பழமைவாதம், வரலாற்று பகைமை, நீதி நடுநிலையின்மை, மத அடிப்படைவாதம் என்பவற்றை தூண்டிவிட்டு தீவிரவாத எழுச்சியை ஏற்படுத்துகிறது' என்றார். இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியா, இலங்கை இரு நாடுகளுமே நீண்டகாலம் நிலைத்திருக்க கூடிய ஒரு நிலையான தீர்வை தேடவேண்டும் என்றார்.
இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் இளைஞர்களுக்கான ”கனவு காணுங்கள்” என்ற திட்டத்தினை இலங்கையிலும் பிரதிபலிக்கும் வகையில் 'சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன். இலங்கையில் இணக்கம் மற்றும் செழிப்பு கொண்ட அமைதியான இலங்கையை கட்டியெழுப்ப இரு பக்க தலைவர்களையும் தான் சந்திக்கவிருக்கிறேன். மோதல்கலுக்கான தீர்வாக எந்தவொரு போரும் அமையவில்லை. குறிப்பிட்ட எந்த பிரச்சினையையும் போர் மூலம் தீர்வு காண முடியாது என்றார்.
இதேவேளை அப்துல் கலாம் கடந்த சில நாட்களுக்கு முன் கூடங்குளம் அணு உலை திட்டத்தில் தமிழர் விரோத போக்கை வெளிக்காட்டியிருப்பதன்மூலம் இவர் காங்கிரஸ் அரசின் தற்போதைய இடைத்தரகராக நியமிக்கப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.