தமிழர்க்கு ஓர் நற்செய்தி........
பத்து நாட்களுக்கு முன் நார்வே நாட்டில் உள்ள தமிழர்கள், பட்டாசு வெடித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர். காரணம், நார்வே நாட்டில் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி வெளியானது தான். புலித் தலைவர்களிடம் நெருக்கமாக இருந்த சிலரிடம் கேட்டபோது,
“இந்தோனேசியாவில் உள்ள ஆயிரக்கணக்கான தீவுகளில் மக்கள் அதிகமாகப் புழங்கும் பெரும் தீவுகள் 26 மட்டும்-தான். சில குட்டி, குட்டித் தீவுகளில் தீவிரவாத அமைப்புகள்
காலூன்றி உள்ளன. அவர்களிடம் நல்ல நட்புறவில் இருந்த பிரபாகரனும் அவரது நெருங்கிய சகாக்களும் அந்தத் தீவுகளில் ஒன்றில் பத்திரமாக இருக்கிறார்கள்” என்கிறார்கள்.
ஈழ ஆதரவாளர்கள் இதைவிட இன்னும் சற்று சந்தோஷிக்கும் விதமாக ஒரு செய்தி உலா வருகிறது, “இலங்கையிலிருந்து மிக எளிதில் தப்பிக்க வாய்ப்பு உள்ள ஒரே இடம் தமிழ்நாடுதான். எனவே, அதிராம்பட்டினம் கடற்கரை வழியாக வந்த பிரபாகரன், தற்போது திருச்சி மையப்பகுதியில் ரகசியமான இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்” என்ற செய்தியும் சமீப சில நாட்களாக உலா வரத் தொடங்கியிருக்கிறது.
“இல்லை, இல்லை மாசற்ற மாவீரன் பிரபாகரன் கோழையைப்போல் தப்பித்துச் செல்ல வாய்ப்பே இல்லை. லட்சக்கணக்கான தமிழ் ரத்த சொந்தங்களையும் ஆயிரக்-கணக்கான போராளிகளையும், மட்டுமல்ல தனது வீரமைந்தன் சார்லஸ் அந்தோணியையும் சிங்கள கொலைவெறிக்குப் பலி கொடுத்த பின்பு, தாய் மண்ணைவிட்டு வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை. இன்னமும் வன்னிகாட்டில் மக்களுடன் மக்களாக, மீண்டும் அவர்களை பாதுகாக்கும் உத்திகளுடன் பலத்த பாதுகாப்பு அரணுக்குள்தான் பிரபாகரன் இருக்கிறார்” என்றும் பேசுகிறார்கள்.
இச்சூழ்நிலையில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு விடைதேடி புறப்பட்டோம். விடுதலைப்-புலிகளுக்கும் தமிழ்நாட்டிற்கும் எப்போதுமே மிக நெருக்கமான தொடர்-புள்ள இடம் வேதா-ரண்யத்தை அடுத்த கோடியக்கரைதான்! பிரபாகரனும், மற்ற ஈழ விடுதலை அமைப்புகளும், ஆயுதப்பயிற்சி எடுத்துக் கொண்டதும் இங்குதான். மேலும் விடுதலைப்-புலிகளின் அதி நவீன விசைப்படகு இலங்கை-யிலிருந்து கோடியக்-கரைக்கு வந்து சேர வெறும் பன்னிரென்டு நிமிடங்கள்தான் ஆகும் என்பது ஆச்சர்ய-மான விஷயம். இத்தகைய அதிவேகப்-படகு இந்தியா, இலங்கை ராணுவத்திடம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத்தில் கள்ளக் கடத்தல் தொழிலாக இருந்து பிறகு, புலிகளுக்குத் தேவையான பொருள்களை சப்ளை செய்யும் தொழிலாக மாறி, அதனை செய்தவர்கள் வசிக்கும் பகுதியும், கோடியக்கரைதான். அத்தகைய தொழிலில் இருந்தவரும், இன்று-வரை புலிகளின் அசைவை அறிந்தவருமான முக்கியப் புள்ளி ஒருவரைச் சந்தித்தோம். அவரிடம் நாம் பேசியபோது, ‘நான் அறிந்த வரையில் தம்பி பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவரைத் தெரிந்தோ, தெரியா-மலோ இலங்கை அரசு இறந்ததாக அறிவித்து ஓர் உடலையும் காட்டி நாடகத்தை முடித்துவிட்டது.
ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய விடுதலைக்கு ஆயுதம் ஏந்தி போராடிய நேதாஜியைப்போல, இலங்கையின் இனவெறியை எதிர்த்து தமிழ் மக்களின் விடுதலைக்குப் போராடிய உண்மையான போராளியை சர்வதேச அளவில் கோழை மரணமாகச் சித்திரித்து அவமானப்படுத்தி-விட்டார்கள்.
இதுவும் போர்த் தந்திரத்தில் தம்பிக்கு நல்லதாகவே அமைந்துவிட்டது. படை-களை கலைத்து, ஆயுதங்களை மறைத்து மக்களுடன் மக்களாக புலிகள் இருக்கிறார்கள் அவர்களை அடையாளம் கண்டு அழிக்கிறோம் என்ற போர்வையில் அப்பாவிகளை கொன்று குவிக்கிறார்கள் இலங்கை ராணுவத்தினர்.
தமிழகத்தில் ஒரு பழக்கம் இன்னும் கிராமங்களில் உண்டு. அதாவது மரணப்படுக்கையில் உள்ளவர்-களுக்கு ‘உயிர் பால்’ ஊட்டுவார்கள். அதுபோல், இலங்கைத் தமிழர்களை கொல்ல எல்லாவித உதவி-களையும் செய்துவிட்டு, இன்று அவர்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் ‘உயிர் பால்’ ஊட்ட முயற்சி செய்கிறது இந்திய அரசு. அதனை ‘வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்று மேடைக்கு மேடை முழங்கிய தமிழக தலைவர்களும் வேடிக்கை பார்ப்பதுதான் வெட்கக்-கேடாக இருக்கிறது.
தமிழன் எரிவதையும், காடு அழிவதை-யும் காட்டுகின்ற இலங்கை ராணுவம், புலிகளின் நவீன ரக டாங்கிகளையோ, போர் விமானத்தையோ அல்லது பெருமளவில் ஆயுதங்களையோ காட்டவில்லை. ஏனென்றால் அவற்றை இன்னமும் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை என்பதுதான் உண்மை. உடைமைகள், உறவுகள், உறுப்புகள் என சகலத்தையும் இழந்து கையேந்தி வாழும் அவலத்திற்கு வந்துவிட்ட எஞ்சியிருக்கும் இலங்கைத் தமிழனுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிகள் வந்து சேரட்டும் என்பதற்காகவே, தம்பி தலைமறைவில் இருக்கிறார் என்றே எனக்குக் கிட்டும் செய்திகள் சொல்லுகின்றன” என்று கண்கள் மின்னச் சொல்கிறார் அந்தப் புள்ளி.
அடுத்து ஆறுகாட்டுத்துறை மீனவக் கிராம நாட்டாரான சேதுபதியைச் சந்தித்துப் பேசினோம். இவர் இலங்கைத் தமிழர்கள் பலரிடமும் நல்ல தொடர்பில் இருப்பவர். உணர்வுபூர்வமாகவே பேச ஆரம்பித்தார்.
“சிங்களவன் வேறு யாருமல்ல, ஒரு காலத்தில் நம் நாட்டில் உள்ள மேற்கு வங்களாத்திலிருந்து சென்றவர்கள்தான். அந்த இன உணர்வில், அதே மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்புதான், தலைமைக்குப் புலிகளைப் பற்றிய தவறான தகவலை தந்து, புலிகளை அழிப்பதாக எண்ணி, அப்பாவித் தமிழர்களை அழித்து-விட்டார்கள். போரில் வீரமரணம் அடைவது இயற்கைதான். அந்த வகையில் சார்லஸ் அந்தோணி, புலித்தேவன், நடேசன், குணா போன்றோர் இறந்திருக்கிறார்கள். ஆனால் பொட்டு அம்மான், சூசை போன்ற முக்கியத் தளபதிகளுடன் பிரபாகரன் நலமுடன், பாதுகாப்பாக இருக்கிறார் என்றே எனக்கு வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாகையிலிருந்து கன்னியாகுமரி வரை மீனவக் கிராமங்களில் பிரபாகரன்தான் அவர்களின் மனம் நிறைந்த தலைவர். அவர் இறந்திருப்பது உண்மையென்றால் எங்காவது ஓரிடத்திலாவது ஒரு படம் வைத்து மாலை போட்டு அஞ்சலி செலுத்தியிருக்க மாட்டார்களா? இலங்கை ராணுவத்தால் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் நானூறுக்கும் மேற்பட்-டோர் பலியாகி, அவர்களது குடும்பங்கள் கண்ணீரில் மிதக்கின்றன. இந்தியக் கப்பற் படையால் நமது மீனவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. எனவே, விரைவில் இங்கு முகாமிட்டுள்ள நேவியை எதிர்த்து பெரிய அளவில் கண்டன பேரணி நடத்தப் போகிறோம்” என்று முடித்தார்.
இறுதியாக இலங்கையில் நாற்பதாண்டு காலம் வசித்தவரும், பிரபாகரனிடம் 1980லிருந்து நல்ல அறிமுகத்தில் உள்ளவருமான சீத்தாராமனிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.
“எம்.ஜி.ஆர். டைரியில் என் பெயர் இருக்கும். அதுபோல் தம்பி மனதில் எனக்கு இடமிருக்கும். பதினெட்டு வயது தம்பியாக பிரபாகரனை சந்தித்தேன். அப்போதே அதிகம் பேசமாட்டார். வார்த்தைகளை தேவைக்கேற்பவே பயன்படுத்துவார். ஒப்பற்ற, ஈடு இணையற்ற மாவீரன் பிரபாகரன். வீரனுக்கு எப்போதுமே அழிவில்லை என்பது வேறு விஷயம். இதற்கு முன்பு இரண்டுமுறை ‘பிரபாகரன் கொல்லப்-பட்டார். உடல் வந்து கொண்டிருக்கிறது’ என்று அறிவித்தார்-கள். நானும்கூட அதனை நம்பி, கண்ணீர்விட்டு, போட்டோவிற்கு மாலை போட்டு அஞ்சலியும் செலுத்தி-யிருக்கிறேன்.
ஆனால் அந்த மாவீரன் ஒவ்வொரு முறையும் மாவீரர் தினமான நவம்பர் 27-ம் தேதியன்று வெளிப்பட்டிருக்கிறார். அதுபோலவே இப்போதும் வருவார் என்றே உறுதியாக நம்புகிறேன். கடந்த-வாரம் இலங்கை கவிஞர் காசி ஆனந்தனி-டம் பேசினேன். தம்பி நலமாக இருக்-கிறார் என்றே எனக்கும் எனது மனைவிக்-கும் நல்ல செய்தியைச் சொன்னார். அதையே தான் உங்களுக்கும் சொல்-கிறேன். நல்லதை நம்புங்களேன்” என்று முடித்த-போது, அவருடைய வயதை மீறிய உற்சாகத்தைக் காண முடிந்தது.
--தமிழக அரசியல்--