குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா? - சீமான் ஆவேசம்

ஈழத்தமிழர்களை காக்கக்கோரி பெங்களூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசும்பொழுது “குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூரில் “மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்” நேற்று ஞாயிறு காலை நடைபெற்றது. முன்னதாக பெங்களூர் கிழக்குத் தொடர்வண்டி நிலைய திடலில் எழுச்சி கரமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கருநாடகத் தமிழ் மக்கள் இயக்க தலைவர். சி.இராசன் தலைமை தாங்கி உரையாற்றினார். தொடர்ந்து பேராசிரியர் பாப்பையா தமிழீழ மக்களுக்கான ஆதரவை தனது கன்னட உரையின் வழித் தெரிவித்துக் கொண்டார்.சிறப்புரையாற்றிய இயக்குநர் சீமானின் உணர்ச்சிக் கரமான உரையைக் கேட்டு கூடியிருந்த தமிழர் கூட்டம் உணர்ச்சி பிழம்பாகவே மாறிவிட்டது.
மனித சங்கிலி கலந்துக் கொண்ட அனைவரும் தேசியத் தலைவரின் படத்தையும், தமிழீழ ஆதரவு பதாகைகளையும் ஏந்தியிருந்தது குறிப்பிடத் தக்கது.

தமிழீழ எதிர்ப்புப் போக்கை கடைப்பிடிக்கும் கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையான தினகரன் பொதுக் கூட்டத் திடலில் எரிக்கப்பட்டது.

இயக்குநர்.சீமான் தனது எழுச்சியுரையில், இனவெறி பிடித்த சிறிலங்கா அரசு, சீனாவும், பாகிஸ்தானும் கொடுத்த ஆயுதத்தையும், இந்தியா கொடுத்த ஆயுதத்தையும், பயிற்சியையும் பயன்படுத்தி தமிழினத்தை முற்றாக அழிக்கப் பார்க்கிறது.

தமிழ் நிலத்தை சுடுகாடாக்கிவிட்டு, நாடு அமைதியாக இருப்பதாக கொக்கரிக்கிறது.

இந்த அமைதியில், சிங்களவன் நிம்மதியாக இருக்கமுடியாது.

இனி, புலிகள் மரபு வழி யுத்தம் செய்யப் போவதில்லை.

சிங்களவனே, நீ ஒரு பள்ளியில் குண்டு போட்டால், புலிகளின் குண்டு பத்து பள்ளிகளின் மேல் விழும்.

இரத்த உறவுகள் மானபங்கபடுத்தப்பட்டு, கொல்லப்படும் வேதனையை தமிழன் மட்டுமே அனுபவித்து வந்தான்,

இனி இந்த கொடுமைகளையெல்லாம் சிங்களவன் அனுபவிக்க போகிறான். அப்போது, மனித உரிமை பற்றிப் பேச எந்த வல்லாதிக்க அரசுக்கும் அருகதை கிடையாது.

தமிழினத்தை சொந்தமண்ணிலே, முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்கிறான் சிங்களவன்; அந்த சிங்களவனுக்கு ஆதரவாக, ஐ.நா. மன்றத்தில் முதல் கையெழுத்துப் போட்டு ஆதரவு தெரிவிக்கிறது இந்தியா.

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், நாராயணன் பல்லிளித்துக் கொண்டு ராஜபக்சவுடன் கை குலுக்குவானா?

வழக்கை முடிக்க இறப்பு பத்திரம் கேட்கிறான். அடேய் பாவி, உனக்கு வழக்கு முடிக்க தமிழினத்தின் வாழ்க்கையா முடியவேண்டும்?

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், ஏ.கே அந்தோனி ஆயுதம் கொடுப்பானா??

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் பதவிக்காக நாயை விட கேவலமாக நக்கிட்டு கிடக்கிறான்…..

சிங்களவன் தமிழச்சி சேலையை உருவி மானப்பங்கபடுத்தறான்.

அந்த சிங்களவனிடம் கை குலுக்கிட்டு வந்து தமிழ்நாட்டில் நம் தமிழ்தாய்மார்களுக்கு சேலை கொடுத்து வாக்கு கேட்கிறான்… ச்சீய்….என்ன மானங்கெட்டத் தனம்?

குடும்ப நலனுக்காக இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா?

இனத்தைக் காக்க குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா??

மே-17 ந்தேதி, பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்தி வந்தவுடன் தமிழ்நாடே இழவு வீடாகி போனது. தமிழினமே செத்துப் போனது.

பிரபாகரன் நலமாக உள்ளார் என்ற செய்தி கிடைத்தவுடனே,தமிழினமே உயிரெழுந்தது. இப்போது புரிந்து கொள்ளுங்கள்…. தமிழினத்தின் உயிர் யார்? என்பதை….

தமிழினத்தின் ஜீவநாடி, பிரபாகரனின் கையில் தான் உள்ளது.

கம்யூனிச நாடுகளான சீனமும், கியூபாவும், வியட்நாமும் கூட சிறிலங்காவிற்கு ஆதரவளிப்பதேன்?

ராஜபக்ச காட்டியும்,கூட்டியும் கொடுப்பதால் தான்…..

சீனாவிற்கு அம்பாந்தோட்டையில் துறைமுகத்திற்கு நிலம் தருகிற ராஜபக்ச தேசியவாதியா?

அன்னை நிலத்தை, அந்நியனுக்கு தராமல் போராடும் பிரபாகரன் தீவிரவாதியா?

அன்று, பண்டார வன்னியனுக்கு ஒரு காக்கை வன்னியன்!

கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்!!

இன்று, பிரபாகரனுக்கோ…..’கருணா’க்கள் !!!

துரோகிகளாலேயே, இந்த இனம் தொடர்ந்து வீழ்த்தப்படுகிறதே! என வேதனையோடு குறிப்பிட்டார்.

சீமானின் உணர்ச்சிகரமான உரையைக் கேட்டு கூடியிருந்த தமிழர் கூட்டம் உணர்ச்சி பிழம்பாகவே மாறிவிட்டது.

நிகழ்ச்சி நடைபெற்ற திடல் எங்கும் தேசியத் தலைவரின் படங்களும்,ஈழத்தின் மனித பேரவலத்தை விளக்கும் பதாகைகளும் நிரம்ப இருந்தன.

ராஜபக்ச உருவபொம்மை தூக்கிலிடப்பட்டு, தீயூட்டப்பட்டது.

சோனியா,கருணாநிதி ஆகியோரை தமிழின இரத்தம் குடிக்கும் எதிரியாக,துரோகியாக… உருவகப்படுத்தி, பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

தங்கவயல் தமிழர் முன்னேற்ற முன்னணி என்ற அமைப்பின் சார்பில்,தமிழீழ எதிர்ப்புப் போக்கை கடைப்பிடிக்கும்… கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையான தினகரன் நாளிதழ் பொதுக் கூட்டத் திடலில் எரிக்கப்பட்டது.

இதே தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்து கணிப்பினால்,அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தியதில்,தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டதும், திமுகவின் அடுத்த சர்வாதிகாரி யார்? என அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் நடந்த சகோதர யுத்தத்தில், முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

எழுச்சிகரமாக நடந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், ஏராளமான கன்னடர்களும் கலந்து கொண்டனர். மனித சங்கிலியில் கலந்து கொண்ட அனைவரும் தேசியத் தலைவரின் படத்தையும், தமிழீழ ஆதரவு பதாகைகளையும் ஏந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

4 comments:

Suresh Kumar June 8, 2009 at 9:23 AM  

கலக்கல் பேச்சு சீமான் யதார்த்தத்தை புரிந்து அழகாக பேசியிருக்கிறார்

பகுத்தறிவு முழக்கம் June 8, 2009 at 9:38 AM  

தமிழினத்தின் ஜீவநாடி, பிரபாகரனின் கையில் தான் உள்ளது.
அல்ல
தமிழகத்தின்ஜீவநாடி, பிரபாகரனின் கையில் தான் உள்ளது.

நன்றி சீமான் அண்ணன் அவர்களுக்கு

ஆ.ஞானசேகரன் June 8, 2009 at 10:30 AM  

பகிர்வுக்கு நன்றி நண்பா

Anonymous,  June 8, 2009 at 1:29 PM  

வணக்கம் நீங்கள் செய்தி எடுக்கும் தளத்தின் பெயரையும் குறிப்பிட்டால்தான். செய்தித்தளத்தினர் இன்னும் எழுச்சியோடு வேலை செய்ய இயலும். பல நெருக்கடிக்கு இடையில் வேலை செய்யும் செய்தியாளர்களுக்கு பயனில்லாமல் செய்வதால் ஏற்படும் இழப்புகளை சிறிது எண்ணிப்பாருங்கள்.

எங்களின் நிலையை புரிந்துகொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.

இச்செய்தியின் மூலம்: http://www.meenagam.org/?p=4681

நன்றி: மீனகம் ஆசிரியர் குழு

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP