வவுனியாவின் ராணுவ ஆயுதக்கிடங்கை எரித்தது புலிகள் தான்: வைகோ

வவுனியாவில் இலங்கை ராணுவ களஞ்சியம் மீது, புலிகள் தான் ஊடறுப்பு தாக்குதல் நடத்தினர் என, வைகோ கூறியுள்ளார்.


தென்காசியில் நெல்லை மாவட்ட ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், நாஞ்சில் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ,

இலங்கையில் ராணுவம், கர்ப்பிணிகளையும், சிசுக்களையும் கொன்ற சம்பவங்கள், உலகில் வேறு எங்குமே நடந்ததில்லை.

இலங்கைப் பிரச்னையில், தி.மு.க., உறுப்பினர்கள் கோபால ரத்னம், சிவப்பிரகாசம் தற்கொலை செய்து, உயிர் நீர்த்தனர். அவர்களுக்கு கூட இரங்கல் தெரிவிக்காதவர், கருணாநிதி.

வவுனியாவில் இலங்கை ராணுவ களஞ்சியத்தின் மீது புலிகள் ஊடறுப்பு தாக்குதல் நடத்தி, ஆயுதங்களை எரியச்செய்துள்ளனர். ஆனால், அந்த நிகழ்வு தற்செயலானது என, ராணுவம் கூறுகிறது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். உரியநேரத்தில் அவர், குரல் கொடுப்பார் என்றார்.

4 comments:

மதிபாலா June 11, 2009 at 1:40 PM  

என்ன கொடும சார் இது. இதுமாதிரி நடக்க கூடாதுன்றதுக்காகத் தான் மூணு லட்சம் தமிழர்களை சிறைக்கைதிகளா வெச்சிருக்கறோம்னு சிங்களம் சொல்றதுக்கா இந்த வைகோ இப்படி லூசுத்தனம் பண்ணறார்??>

Barari June 11, 2009 at 1:40 PM  

VAIKKO THERTHAL THOLVIYAAL MOOLAI KUZAMBI VITTAAR

Anonymous,  June 11, 2009 at 2:16 PM  

மதிபாலா said...

என்ன கொடும சார் இது. இதுமாதிரி நடக்க கூடாதுன்றதுக்காகத் தான் மூணு லட்சம் தமிழர்களை சிறைக்கைதிகளா வெச்சிருக்கறோம்னு சிங்களம் சொல்றதுக்கா இந்த வைகோ இப்படி லூசுத்தனம் பண்ணறார்??>
June 11, 2009 1:40 PM
********************************************
ஐயோ சாமிகளே எங்கடை சனத்தை இனியும் வாழவிடமாட்டிங்களா ? வை.கோ ஐயா இதுவரை நம்ம சனம் செத்தது சிதைஞ்சது மிஞ்சிய 3லட்டசத்தையும் நாங்கள் கொலைகுடுக்க விரும்புறியளா ?

தேர்தல்காச்சல் முடிந்துவிட்டுதுதா ன பிறகேன் இன்னும் உசுப்புறீங்கள் ?

சாந்தி

சாந்தி ரமேஷ் வவுனியன் June 11, 2009 at 2:20 PM  

இதோ வாறம் சிங்களை அழிக்க எனச்சீமானும் அதோ புலியாகிறோமு் என திரூமாவும் ஒருபக்கத்தில இப்ப வை.கோவும்.

நாங்கள் துயரத்தையும் கண்ணீரையும் கால்நூற்றாண்டுகளுக்கு மேலாய் அனுபவித்துவிட்டோம். இப்ப எங்களுக்கு வேண்டியது உயிர்காப்பு , உணவும்தான் அதற்கடுத்துத்தான் மற்றெல்லாம்.

எங்களை நேசிக்கின்ற தமிழக உறவுகளே இத்தகைய அரசியல்கோமாளிகளை ஏன் இன்னும் நம்புகிறீர்கள் ?

சாந்தி

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP