எதற்குப் பொங்கல்? - புலவர் சி.வெற்றிவேந்தன்
முள்வேலிச் சுவர்க்குள்ளே முட்டி மோதி
முற்றுமாக தமிழரையே ஒழித்துக்கட்ட
கள்ளளவன் சிங்களவன் திட்ட மிட்டே
கழிசடையாம் இந்தியாவைக் கூட்டும் சேர்த்தான்!
உள்ளமெலாம் பொங்குதடா? எதற்குப் பொங்கல்?
உணர்வற்றுப் போனபின்னே எதற்குப் பொங்கல்?
சல்லிக்கல் கூட்டம்போல் தமிழர் கூட்டம்
தனித்தனியாய் ஆகுதற்கா பொங்கல் வேண்டும்?
இனமான உணர்வற்றே ஓடும் கூட்டம்!
இனமானம் எனச்சொல்லி ஏய்க்கும் கூட்டம்!
கனலெனவே நெஞ்சமிங்கே! எதற்குப் பொங்கல்?
கருணாபோல் இங்கேயும் காட்டிப் பார்ப்பான்
குணம்போல ஆட்சிதனில் கொதிக்கும் பொங்கல்?
குவலயத்தில் கருணாபோல் ஒருவர் உண்டா?
இனத்தினையே கொன்றுவிட்டார்! எதற்குப் பொங்கல்?
இனவுண்வே கொதிக்குதடா! பொங்கிப்! பொங்கி!
தமிழனையே கொன்றுவிட்ட இராச பட்சே
தமிழ்த்திருமால் திருப்பதிக்கே சென்று வீழ்ந்து
தமிழரையே கொதிக்கவைத்தான்! தடுத்தார் யாரோ?
தமிழ்நாடு தமிழரிடை இல்லை தானே!
இமிழ்க்காமல் எழுந்திடடா தமிழா பொங்கு!
இனம்காக்க எழும்படையில் ந{யும் சேரு!
குமிழ்விட்டுச் சிரிக்கின்ற வடவர் கொள்கை
கொன்றிடவே புறப்படடா! பொங்கிப் பொங்கி!
செம்மொழிக்கே மாநாடாம்! நாளும் கூச்சல்
செந்தமிழர் நாட்டினிலே எங்கே பாய்ச்சல்?
எம் நாட்டில் துறையெல்லாம் பிறரின் காய்ச்சல்?
செந்தமிழர் உரிமையெலாம் தின்று விட்டு
வெம்மொழியாம் ஆங்கிலத்தைத் தூக்கிக் கொஞ்சும்
வெறும் நாட்டில் கொண்டாட்டம்! ஆட்டம்! பாட்டம்!
நம்தமிழர் நாளைவெல்ல துடித்துக் கொண்டே
நம்தலைவர் பிரபாபோல் பொங்கி வாடா!
- புலவர் சி.வெற்றிவேந்தன், க.மு., கல்.இ
அன்றில் ஆசிரியர்
புதுச்சேரி.
0 comments:
Post a Comment