ஏன் பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தழுவினார் ??

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெரியார்தாசன்

நான் அவன் இல்லை


தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.


(புனித காபா ஆலயத்தில் உம்ரா உடையுடன் பெரியார் தாசன் - I)

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


(புனித காபா ஆலயத்தில் உம்ரா உடையுடன் பெரியார் தாசன் - II)

சனிக்கிழமை (மார்ச் 13)அன்று அவர் புனிதமக்கா சென்று உம்ரா நிறைவேற்றினார்.

பெரியார் தாசன் தனது இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்தாண்டுகளாக தனது உள்ளத்தில் ஏற்பட்ட முடிவை இப்போது தான் நிறைவேற்ற முடிந்தது என்று பெரியார் தாசன் குறிப்பிட்டார்.

ரியாதில் தமுமுக செய்தியாளருக்கு பெரியார்தாசன் அளித்த வீடியோ பேட்டி...

3 comments:

Anonymous,  March 15, 2010 at 2:33 PM  

சரக்கு... தீர்ந்துவிட்டதா?
சரக்கு... பத்தலையா?

உமர் | Umar March 15, 2010 at 3:35 PM  

//நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.//

சில காலம் பௌத்த மதத்தவராய் வாழ்ந்தது குறித்தும் பேசி விடுங்கள் ஐயா! இல்லாவிட்டால் நாத்திகராய் இருந்த பெரியார்தாசன், இஸ்லாமியராய் மாறினார் என்றே பிரச்சாரம் செய்வார்கள். பௌத்த மதத்தைச் சார்ந்த பெரியார்தாசன், இஸ்லாமியராய் மாறினார் என்பதே சரியான விளக்கமாக இருக்க முடியும்

Anonymous,  March 15, 2010 at 3:36 PM  

அட பாவி கடைசியில ஒரு பெட்ரோல் கிணத்துக்காக விலை போயிட்டியே.

ஒரு சந்தேகம் இந்த ஆள் முழு நேர குடிகாரன் எப்படி இவர் ஆறு முறை தொழுகை செய்வார்.

பாலமுருகன்
சிங்கபூர்

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP