உணர்ச்சி கவிஞர் காசிஆனந்தன்

மானம் எனுமொரு பானையில் வாழ்வெனும்தீனி சமைத்தவனே! - தமிழ்போனதடா சிறை போனதடா! அடபொங்கி எழுந்திடடா!காட்டு தமிழ்மறம்! ஓட்டு வரும்பகை!பூட்டு நொறுக்கிடுவாய்!- நிலைநாட்டு குலப்புகழ்! தீட்டு புதுக்கவி!ஏற்று தமிழ்க் கொடியே!முந்து தமிழ்மொழி நொந்து வதைபடஇந்தி வலம் வரவோ? - இது நிந்தை! உடனுயிர் தந்து புகழ்பெறு!வந்து களம் புகுவாய்!நாறு பிணக்களம் நூறு படித்துநம்வீறு மிகுந்த குலம் - பெறும்ஊறு துடைத்திடு மாறு புறப்படு!ஏறு நிகர்த்தவனே!நாலு திசைகளும் ஆள நடுங்கிய கோழை எனக்கிடந்தாய்! - மலைத்தோளும் குனிந்தது போலும்! விழித்தெழுகாலம் அழைக்குதடா!

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP