புதுச்சேரி

புதுச்சேரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(பாண்டிச்சேரி இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புதுச்சேரி


புதுச்சேரி
மாநிலம்
- மாவட்டங்கள் புதுச்சேரி
- புதுச்சேரி
அமைவிடம் 11.93° N 79.83° E
பரப்பளவு
- கடல் மட்டத்திலிருந்து உயரம் {{{பரப்பளவு}}} கிமீ²

- 0 மீட்டர்
கால வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
மக்கள் தொகை (2001)
- மக்களடர்த்தி 220,749
- {{{மக்களடர்த்தி}}}/கிமீ²

புதுச்சேரி (ஆங்கிலம்: Puducherry) எனவும் பாண்டிச்சேரி, புதுவை எனவும் அழைக்கப்படும் இந்நகரம், தென்னிந்தியாவில், தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரில் இருந்து 170 கல் தொலைவில், வங்கக் கடலோரத்தில் அமைந்த இடம். இது புதுவை மாநிலத்தின் தலைநகரும் கூட. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் காக்கி நாடாவுக்கு அருகாமையிலுள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் நாகப்பட்டினத்தின் அருகாமையிலுள்ள காரைக்கால் நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகிலுள்ள மாஹே நகரும் இந்த மாநிலத்தின் அங்கமாகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள். ஏனம் கோதாவரியின் கழிமுகத்திலும் காரைக்கால் காவிரியின் கழிமுகத்திலும் அமைந்துள்ளன.


[தொகு] புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி
புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி என்பது மகாகவி பாரதி, புதுவைக்கு வருவதற்கு முன்பிருந்தே துவங்கிய ஒன்று. அந்த வழியில், மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர், முதலான அறிஞர் பெருமக்கள் இலக்கியத் தொண்டினை பின்பற்றி, புதுவையின் கவிஞர் பெருமக்கள், பண்ணார் தமிழன்னைக்கு முத்தாரம் சூட்டி, உலக அரங்கில் முன்னிறுத்த பெரும் பாடுபட்டனர் என்று சொன்னால் அது மிகையல்ல.

புதுச்சேரியின் வரலாற்றில் ஒரு பெரும்பகுதி பிரெஞ்சு ஆட்சியின்கீழ் இருந்ததன் விளைவாக இங்கு பிரெஞ்சு மொழி இலக்கியமும் வளர்ச்சி பெற்றது. பல பிரெஞ்சு இலக்கியக் கழகங்கள் இன்றும் இங்கு இயங்கி வருகின்றன.


[தொகு] மக்கள்
சமயவாரியாக மக்கள் தொகை [1] சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 974,345 100%
இந்துகள் 845,449 86.77%
இசுலாமியர் 59,358 6.09%
கிறித்தவர் 67,688 6.95%
சீக்கியர் 108 0.01%
பௌத்தர் 73 0.01%
சமணர் 952 0.10%
ஏனைய 158 0.02%
குறிப்பிடாதோர் 559 0.06

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP