கருணாநிதியின் அறிவுச்சுரண்டல்…

தமிழினத்தின் அறிவுக்கண் திறந்திடவும், மேலும் பகுத்தறிவு ஓங்கி இவ்வினம் தன்மானப் பெருவாழ்வெய்திடவேண்டி உருப்பெற்றதே திராவிட இயக்கங்களின் தோற்றுவாய் நிலை, இங்கே அவ்வியக்க கொள்கைகளுக்கெனவே தாம், கட்சியும் அரசியலும் நடத்துவதாக திமுக தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்கள் பலகாலமாய் வாயளந்து வருகிறார். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக, அவர் மத்தியிலும் மாநிலத்திலும் பெரும்பெரும் பொறுப்புகளில் இருந்து வந்திருக்கும் காலங்களில்கூட தமிழின உய்விற்கான எந்தஒரு காப்பரணையும் நிலைப்பெறச் செய்திடவில்லை. மாறாக தமிழ் மக்களின் தன்னெழுச்சியான முழக்கங்கள் துளிர்ந்தெழும் ஒவ்வொரு காலச்சூழலிலும் அதனை சூதால், வஞ்சகத்தால், பிரித்தாளும் சூழ்ச்சியால் அடக்குமுறையால் நீர்த்துப்போகச்செய்து, பெரும்பெரும் தமிழின போராட்டக்களங்களை தன் வாழ்நாள்நெடுக மண்ணோடு மண்ணாக்கியதே இன்று வரையிலான கருணாநிதியின் மெய்யுரு.
இந்நிலையில் தமிழீழத்தில், இந்நூற்றாண்டில் மாந்த இனம் கண்டிராத பேரழிவால் நசுக்குறும் நம் இன உறவுகளின் வாழ்க்கைப் போரிலும், இன்றைக்கு தமிழக முதல்வர் நாற்காலியை பற்றியிருக்கும் இக்கருணாநிதியால் நடந்தேற்றப்படும் குழிப்பறிப்பு நாடகங்கள் எண்ணச்சகியதவையாக காட்சிகள் மாறிக்கொண்டிருக்கின்றன. நாளுக்கொரு பேச்சு, பொழுதுக்கொரு நடிப்பு, மணிக்கொரு தாவல், நிமிடத்திற்கொரு சிந்தை, நொடிக்கொரு திரிப்பு என்ற போக்கில் நாள்கடத்தி.. நாள் கடத்தி.. இலட்சத்திற்கும் மேலான நம் இன சொந்தங்களின் படுகொலைக்கு முழுமுதற்பொருளாகி இன்னும் தமிழினத் தலைவன் பட்டம் தாங்கி இளிக்கிறார். தமிழினத்தின் இவ்வுயிர்வாழ்வான சிக்கலிலும், கருணாநிதி தன் வழமையான காலித்தனங்களைக்கொண்டு ஏய்த்து தப்பிவிடலாமென இம்முறை அவர் முயற்சியேற்பது ஒரு துளியும் பலிக்கப்போவதில்லை. இவரின் அத்தனை கழுத்தறுப்பு மாய்மாலங்களும் ஒவ்வொன்றாய் மக்கள் மன்றத்தில் வெளுத்துப்போக, பலநாள் திருடனாய் தமிழர்களிடம் சிக்கியிருக்கும் குற்றவாளியான கருணாநிதியை அறம்பிழன்ற குற்றத்திற்காக, சிறுக சிறுக சேர்ந்தெழுந்து கொண்டிருக்கும் தமிழர்களின் சினச்சீற்றம் கேள்விக்குள்ளாக்கி வரலாற்றுத் தீர்ப்பளிக்கும் காலம் வந்துவிட்டது. எக்காலமும் தனைக்காக்கும் என பெருக பெருக அவர் சேர்த்து வைத்துள்ள பணமூட்டைகள் நாளை அதன் கையறுநிலை பகரும்… அன்றே தமிழகத்தில் பகுத்தறிவு ஒளி பரவும்… தன்மானம் தலையெடுக்கும்… தமிழினம் மீட்சி பெரும்…

ச.ஆனந்தகுமார்
அரியாங்குப்பம், புதுச்சேரி.

1 comments:

சங்கொலி May 6, 2009 at 2:01 PM  

http://www.mdmkonline.com/news/latest/sonia-meeting-cancelled-in-chennai.html

சோனியா :
கூட்டுக் கொள்ளை அடித்தோம் ! கூடி (ஈழக்) கொலை செய்தோம் !

மக்களை நாம் சேர்ந்தே சந்திப்போம் ! நான் மட்டும் மக்களை சந்தித்து செருப்படிவாங்கவேண்டும் நீங்க ஆஸ்பத்திரியில் எ சி ரூமில் அதை டி வி ல பாக்கணுமா?

எந்த ஊரு ஞாயம் இது ?

-----
செய்தி இங்கே:


சென்னை : சோனியாவின் சென்னை பிரசாரம் ரத்து செய்யபட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவின் சென்னை பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதை காங்.., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் , தி.மு.க., அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் தெரிவித்துள்ளனர்.

-தோழர்

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP