போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் சோனியா உறவினர் மீதான வழக்கு கைவிடப்படுகிறது



இந்திய ராணுவத்துக்கு போபர்ஸ் ரக பீரங்கி வாங்க சுவீடன் நாட்டுடன் ராஜீவ்காந்தி ஒப்பந்தம் செய்தார். இதில் பல கோடி ரூபாய் லஞ்சமாக கைமாறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
1987 ஏப்ரல் 16ம் நாள் ஸ்வீடன் நாட்டின் வானொலியில் போபர்ஸ் பீரங்கி பேரத்தில் கமிஷன் பணம் கையாளப்பட்டதாகச் சொல்லி செய்தி வெளியானது. செய்தி வெளியானவுடனேயே இந்தியாவே பற்றிக் கொண்டது. இதுதான் சமயம் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு அவல் மெல்வது போல ராணுவ மந்திரியாக இருந்த வி.பி.சிங் அந்த ஊழலை விசாரிக்க கமிட்டி ஒன்றை நியமிப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்புதான் அவர் தேசியத் தலைவராக உருவெடுக்க முதல் படியாக அமைந்துவிட்டது. பிரதமரான தனக்கு தெரியாமல், தன்னிடம் கலந்தாலோசிக்காமல் இப்படி ஒரு கமிட்டியை அமைத்தது பற்றி ராஜீவ் கோபம் கொண்டார். இந்த மனக்கசப்பு வளர்ந்து தன் அமைச்சர் பதவியிலிருந்து விலகியதும் இல்லாமல் காங்கிரஸை விட்டே விலக நேர்ந்தது. கூடவே எம்.பி. பதவியிலிருந்தும் விலகினார்.



ராஜீவ்காந்தி உள்பட பலர் மீது டெல்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு நடந்தது. ஊழல் பணம் பெரிய அளவில் கை மாற உதவிய சோனியாவின் உறவினரான இத்தாலி நாட்டைச் சேர்ந்த குவாத்ரோச்சி மீதும் வழக்கு தொடரப்பட்டது.

போபர்ஸ் அவதூறு (Bofors Scandal) இந்தியாவில் 1980 இல் நிகழ்ந்த மிக முக்கிய பீரங்கி பேர ஊழல் குற்றச்சாட்டு நிகழ்வாகும். இந்தியாவிற்காக போபர்ஸ நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 155 மிமீ பீரங்கிகள் (குட்டையான பீரங்கி வண்டி - howtzer) வாங்கியதில் தனிப்பட்ட இலாபம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவராக முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி மீது குற்றம் சுமத்தபட்டது. இதன் காரணமாக அவரும் அவருடைய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் 1989 தேர்தலில் தோல்வியைக் கண்டது.
இந்த அவதூறு குற்றச்சாட்டின் இந்திய மதிப்பு 64 கோடி இந்திய ரூபாய்களாகும்.
இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் அப்பொழுது இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த வி. பி. சிங். இது பத்திரிகைகளில் சித்திரா சுப்பரமணியம் மற்றும் என். ராம் போன்ற பத்திரிகையாளர்களால் இந்து மற்றும் இந்தியன் எக்ஸபிரஸ் நாளிதழ்களின் மூலம் வெளியானது.
இந்த ஊழலுக்கு இடைத்தரகராக செயல்பட்டவர் இத்தாலியத் தொழிலதிபரான ஒட்டாவயோ குவட்ரோச்சி. இவர் இராஜிவ் காந்திக்கு மிக நெருக்கமானவர்.
போபார்ஸ் ஊழல் பின்னணியும் குவாத்ரோச்சியும்
கடந்த 1987-ம் ஆண்டு இந்திய ராணுவத்துக்கு போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் ரூ.64 கோடி லஞ்சப்பணம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்ப நண்பரும், இத்தாலி தொழில் அதிபருமான ஒட்டாவியோ குவாத்ரோச்சி லஞ்சப்பணம் பெற்றதாக, இவ்வழக்கில் அவரை சி.பி.ஐ. குற்றவாளியாக சேர்த்தது.
குவாத்ரோச்சி கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால், கடந்த 1997-ம் ஆண்டு அவருக்கு எதிராக சி.பி.ஐ. கோர்ட்டு 'பிடிவாரண்டு' பிறப்பித்தது. பி.ஜே.பி. ஆட்சியில் கடந்த 1999-ம் ஆண்டு, குவாத்ரோச்சிக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவர் மீது கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
கோர்ட் ஏற்கனவே பிறப்பித்த பிடிவாரண்டு அடிப்படையில், குவாத்ரோச்சியை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து, அவருக்கு எதிராக 'ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்கும்படி, சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலை சி.பி.ஐ. கேட்டுக்கொண்டது. அதன்படி, கடந்த 1999-ம் ஆண்டு குவாத்ரோச்சிக்கு எதிராக 'ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டது.
இந்த நோட்டீஸ் அடிப்படையில், கடந்த 2003-ம் ஆண்டு மலேசியாவில் குவாத்ரோச்சி பிடிபட்டார். ஆனால் அவருக்கு எதிராக போதிய ஆதாரங்களை சி.பி.ஐ. தாக்கல் செய்யாததால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க மலேசிய கோர்ட் மறுத்து விட்டது.
இதுபோல், கடந்த 2007-ம் ஆண்டு அர்ஜென்டினா நாட்டில் குவாத்ரோச்சி பிடிபட்டார். அப்போதும், போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், அவரை இந்தியாவுக்கு கொண்டுவர முடியவில்லை.
இதற்கிடையே, கடந்த 2003-ம் ஆண்டு லண்டன் வங்கியில் குவாத்ரோச்சி மற்றும் அவரது மனைவி மரியா பெயரில் இருந்த 2 வங்கி கணக்குகளை சி.பி.ஐ. முடக்கி வைத்தது. பிறகு, 2006-ம் ஆண்டு இந்த முடக்கத்தை ரத்து செய்தது.
இந்த சூழ்நிலையில், குவாத்ரோச்சியின் பெயர், சர்வதேச தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ.யின் வேண்டுகோளின் பேரில், இன்டர்போல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 'ரெட் கார்னர் நோட்டீஸ்' ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் மிலன் பானர்ஜியின் சட்ட யோசனையை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக சி.பி.ஐ. செய்தித்தொடர்பாளர் ஹர்ஷ் பகால் தெரிவித்தார்.
குவாத்ரோச்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட 'ரெட் கார்னர் நோட்டீஸ்' 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். அதை புதுப்பிக்கலாமா? என்று சி.பி.ஐ. கருத்து கேட்டபோது, அட்டர்னி ஜெனரல் இந்த யோசனையைத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், 'குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டுவர 2 தடவை எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. எனவே, அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. இந்த தொடர் தோல்வியால், குவாத்ரோச்சிக்கு எதிரான பிடிவாரண்டு செல்லாததாகி விடும். எனவே, அவரை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து விடுவித்து விடலாம்' என்றார்.
போபர்ஸ் ஊழல் வழக்கு, நாளை சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, இந்த முடிவை கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவிக்கிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கோ இலங்கை தமிழர்கள் செத்து மடிவது குறித்து வாய் திறக்க மாட்டேன் என்கிறார். ஆனால், சோனியா காந்தியின் உறவினர் ஒட்டாவியோ குவாத்ரோச்சி குறித்து, ஓர் அற்புதமான கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் கமிஷன் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, தேடுவோர் பட்டியலில் இருந்த குவாத்ரோச்சியின் பெயர் நீக்கப்பட்டது. இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பாரத பிரதமர் மன்மோகன்சிங், `மற்றவரை துன்புறுத்துவது நல்லதல்ல’ என்று பதிலளித்து இருக்கிறார்.
அப்படி என்றால், இலங்கை அரசு, இலங்கை தமிழர்களை தினமும் கொன்று குவிக்கிறதே!. இதைத் துன்புறுத்தல் இல்லை என்கிறாரா பிரதமர்?
இலங்கை தமிழர்கள் என்ன இத்தாலிக்காரர்களா? சோனியா காந்தியின் உறவினர்களா? தமிழர்கள் தானே என்ற எகத்தாளம் தான்!.

போபர்ஸ் புகழ் குவாத்ரோச்சியை `இந்தியாவின் மருமகன்' போல் மத்திய அரசு நடத்துகிறது -சுப்ரீம் கோர்ட்


புதுடெல்லி, போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொடர்புடைய `இத்தாலிய தொழில் அதிபரான குவாத்ரோச்சியை `இந்தியாவின் மருமகன்' போல் மத்திய அரசு நடத்துவதாகவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த 1986-ம் ஆண்டில் சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்தில் இருந்து இந்திய ராணுவத்துக்கு பீரங்கிகள் வாங்கப்பட்டன. இந்த பேரத்தில் இடைத் தரகராக செயல்பட்ட இத்தாலி நாட்டு தொழில் அதிபர் குவாத்ரோச்சி, ரூ.64 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உள்பட முக்கிய பிரமுகர்கள் சிலர் மீதும் இந்த ஊழல் விவகாரத்தில் புகார் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில், தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோரைக் கொண்ட `சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச்' முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் கோர்ட்டில் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அப்போது அவர், போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் தொடர்புடைய குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக அறிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

``குவாத்ரோச்சியை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்துவருவதற்கு சி.பி.ஐ. மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டன. எனவே அவருக்கு எதிரான வழக்கை முடித்துக்கொள்வது என்று சி.பி.ஐ. முடிவு எடுத்து இருக்கிறது.

டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2004-ம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், போபர்ஸ் பீரங்கி பேரத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த முடிவை சி.பி.ஐ. எடுத்தது. அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த மத்திய அரசு குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவது என்று முடிவு எடுத்தது''.

இவ்வாறு கோபால் சுப்பிரமணியம் கூறினார்.

அதைத்தொடர்ந்து, ``விசாரணை கோர்ட்டில் `உயிர் இல்லாமல்' ஆகிவிட்ட ஒரு வழக்கில் நாங்கள் என்ன செய்ய முடியும்? அவர்கள் (சி.பி.ஐ.) வழக்கை வாபஸ் பெறும் முடிவுக்கு வந்துவிட்டதாக தோன்றுகிறது'' என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், குவாத்ரோச்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வக்கீல் அஜய் அகர்வால், மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நீதிபதிகளை கேட்டுக்கொண்டார்.

``இத்தாலிய தொழில் அதிபரான குவாத்ரோச்சியை `இந்தியாவின் மருமகன்' போல் மத்திய அரசு நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசின் வக்கீல் கோபால் சுப்பிரமணியம், ``சர்வதேச போலீசாரின் நோட்டீசை தொடர்ந்து குவாத்ரோச்சியை கைது செய்ய சி.பி.ஐ. மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயன் அளிக்கவில்லை'' என்று விளக்கம் அளித்தார்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்த பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், மத்திய அரசின் உத்தரவுப்படி சி.பி.ஐ. நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார். அதே நேரத்தில், காங்கிரஸ் தரப்பில் ``இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக'' தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பேட்டி அளித்த கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஸ் திவாரி, இந்த வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டுக்கு தெரிவித்த கருத்து மதிக்கப்பட வேண்டும் என்றார்.

மத்திய அரசின் இந்த முடிவின் மூலம், 20 ஆண்டு காலமாக நடைபெற்றுவந்த போபர்ஸ் பீரங்கி பேர வழக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP