ஈழத் தமிழர்களுக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்காமல் போனதற்கு இந்திய அரசே காரணம்: பழ. நெடுமாறன்


ஈழப் பிரச்சனையில் தமிழர்களுக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்காமல் போனதற்கு மத்திய அரசே காரணம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டினார்.

சென்னையில் ஜோசப் கென்னடி எழுதிய ‘அநீதியின் காவலர்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் தோடர்ந்து கூறியதாவது:-

ஈழத் தமிழர் பிரச்சினையில் பின்னடைவு ஏற்பட்டதற்கு சர்வதேச அளவில் ஆதரவை திரட்ட முடியாததே காரணம். இதற்கு மத்திய அரசின் முட்டுக்கட்டையும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான அதன் நிலைப்பாடும் தான் காரணம்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் இந்த பிரச்சினை உலக அளவில் பேசப்பட்டது. ஆனால், இதில் உலக நாடுகளின் ஆதரவை திரட்டுவதற்கு இந்திய அரசு தான் முட்டுக்கட்டை போட்டது.

இந்தியாவின் பிராந்திய நலனுக்கு உட்பட்ட பிரச்சினையாக ஈழத் தமிழர் பிரச்சனையை உலக நாடுகள் கருதுகின்றன. எனவே தான் இந்த பிரச்சினையில் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக நிலையெடுத்தன.

எனவே ஈழத் தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்ட வேண்டும். அதன் மூலம் தான் இந்த பிரச்சினையில் சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்ட முடியும் என்றார் நெடுமாறன்.

இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசுகையில்,

ஈழத் தமிழர் விடுதலைக்கு எதிராக சீனாவும், கியூபாவும் செயல்பட்டதற்கு நாம் உண்மை நிலைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லாததே முக்கிய காரணம் ஆகும்.

இதன் காரணமாக கொலையாளிக்கு ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் கொலை செய்யப்பட்டவர்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளார்கள்.

இந்தப் பிரச்சினையில் உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை திரட்டுவதற்கு நாம் தொடர்ந்து பாடுபடுவோம். ஈழ விடுதலைப் போர் இன்னும் முடியவில்லை என்றார்.

1 comments:

ஆ.ஞானசேகரன் July 11, 2009 at 5:44 PM  

//ஈழப் பிரச்சனையில் தமிழர்களுக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்காமல் போனதற்கு மத்திய அரசே காரணம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டினார்.//

உண்மைதான்

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP