பதுங்கிய புலிகள் பாயத்தொடங்கின...
இலங்கையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த கடுமையான சண்டையில் விடுதலைப்புலிகளை முழுவதுமாக அழித்து விட்டதாக சிங்கள ராணுவம் சொல்கிறது.
ஆனால் போர் உச்சக்கட்டத்தை எட்டியதும் விடுதலைப்புலிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தப்பி சென்று விட்டதாக ஒரு தகவல் வெளியானது.
விடுதலைப்புலிகள் விரைவில் கொரில்லா தாக்குதலை கடைபிடிப்பார்கள் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். அதை உறுதிப்படுத்துவது போல வன்னியில் விடுதலைப்புலிகள் திடீர், திடீரென கொரில்லா தாக்குதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு முல்லைத்தீவு ஓட்டு சுட்டான் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரர்கள் பலியானார்கள். அதன் பிறகு விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து வேறு எந்த தாக்குதலும் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று வன்னிப் பிரதேச காட்டுப்பகுதி ஒன்றுக்குள் சில ராணுவ வீரர்கள் சென்றனர். அவர்கள் மீது விடுதலைப்புலிகள் அதிரடி கொரில்லா தாக்குதலை நடத்தினார்கள். இதில் ஏராளமான சிங்கள ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.
அவர்களை விமானம் மூலம் பலாலி ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிங்கள அரசின் கடும் தணிக்கை, கட்டுப்பாடு காரணமாக விடுதலைப்புலிகள் நடத்திய கொரில்லா தாக்குதல்கள் பற்றிய முழு விபரமும் வெளியில் தெரியாமல் போய் விடுகிறது.
2 comments:
ha,,ha,,ha
வணக்கம் நண்பா தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்....விழ விழ எழுவோம் விடுதலை காணும் வரை......
Post a Comment