தமிழர்கள் மீண்டும் ஈழத்தை வெற்றி கொள்வார்கள்

வரும் காலத்தில் இலங்கையில் வலுவான தமிழர்கள் உருவாகி மீண்டும் ஈழத்தை வெற்றி கொள்வார்கள் என்று புதுச்சேரி அரியாங்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பொதுச் செயலர் வைகோ கூறினார்.
மேலும் அவர் பேசியது:


1993-ம் ஆண்டு மதிமுக ஆரம்பித்த நாள் முதல் கடந்த 16 ஆண்டுகளாக திமுகவுடன் தர்மயுத்தம் நடத்திக் கொண்டு வருகிறோம். நமது கட்சிக் கோட்டையை எஃகு கோட்டையாக கட்டுவோம்.
ஈழத்தமிழர் அவலம் கண்டு உலகத்தமிழர் உள்ளம் சுக்குநூறாக நொறுங்கிக் கிடக்கிறது.
இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் முள்வேலியில் முடங்கிக் கிடக்கின்றனர். உள்நாட்டில் அகதிகளாக வாழ்கின்றனர். ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த தமிழர்களை நீக்கி விட்டு சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். வருங்காலத்தில் வலுவான தமிழர்கள் உருவாகி ஈழத்தை வெற்றி கொள்வார்கள். சிந்திய ரத்தம் வீண் போகாது.
ராஜபக்ஷேவுக்கு தமிழ்நாட்டில் சிலர் ஆதரவு தரலாம். எங்களது நோக்கம் சிங்கள இன வாதத்தை தொடர்ந்து எதிர்ப்பதுதான்.
கருணாநிதி தன் மகனுக்கும் உறவினர்களுக்கும் பதவி கொடுத்து வருகிறார். அதனால் கட்சியின் உயிர்த்தன்மை செத்துக் கொண்டு வருகிறது.
புதுச்சேரியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வலுவான மதிமுக அமைப்பை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.புதுச்சேரி மாநில பொறுப்புத் தலைவர் நா.மணிமாறன், காரைக்கால் மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் சோம.அம்பலவாணன், மாநிலப் பொருளாளர் திண்டிவனம் மருத்துவர் இரா.மாசிலாமணி, துணைப் பொதுச்செயலர் மல்லை இ.சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP