இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் : ஜெயலலிதா
அதிமுக செயற்குழு கூட்டம், நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று நடந்தது.

தொண்டாமுத்தூர், இளையான்குடி, கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் ஆகஸ்ட் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது.

இந்நிலையில், இடைத்தேர்தல் குறித்து விவாதிக்க அதிமுக செயற்குழு கூட்டம் நீலகிரி மாவட்டம், குன்னூர் விவேக் டூரிஸ்ட் ஹோமில் இன்று மதியம் 3 மணிக்கு நடந்தது. வழக்கமாக, அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் சென்னையில்தான் நடக்கும். முதல்முறையாக சென்னைக்கு வெளியே செயற்குழு கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டார். கோடநாடு எஸ்டேட்டில் கடந்த ஒரு மாதமாக ஜெயலலிதா ஓய்வெடுத்து வருகிறார். இன்று அங்கிருந்து காரில் குன்னூர் வந்து செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார்.

தமிழகத்தில் ஐந்து சட்டசபை தொகுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அதிமுக இக்கூட்டத்தில் முடிவு செய்தது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 comments:

Anonymous,  July 21, 2009 at 8:51 AM  

சீ! சீ !!

இந்தப் பழம் புளிக்கும்.

ஐதராபாத் திராட்சையும்,

குன்னூர் என்ன இழவோ அதுவுந்தான்

இனிக்கும்.

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP