இடைத் தேர்தலை மதிமுகவும், அதிமுகவும் புறக்கணிப்பா?
ஐந்து சட்டப் பேரவைகளுக்கான இடைத் தேர்தலை மதிமுகவும், அதிமுகவும் புறக்கணிக்க வேண்டும் என்று மதிமுக மாநில கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில்சம்பத் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவில்பட்டியில் நடந்த அக்கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில்சம்பத்,
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் குறித்து இலங்கை அரசு முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருகிறது. ஆனால், பிரபாகரன் இறக்கவில்லை.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி முதல்வர் தில்லிக்கு செல்லவில்லை. காவிரி தண்ணீர் திறந்துவிடக் கோரி கர்நாடகத்துக்கு செல்லவில்லை. ஆனால், அமைச்சர் பதவி கேட்க மட்டும் தில்லிக்கு செல்கிறார்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணத்தைப் பயன்படுத்தி ஆளும் கட்சியினர் வெற்றி பெற்றனர்.
வருகின்ற இடைத் தேர்தலிலும் அதிகாரம் மற்றும் பணத்தைப் பயன்படுத்தி ஆளும் கட்சியினர் செயல்படுவர். எனவே, அதிமுகவும், மதிமுகவும் இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றார்.
1 comments:
சீ! சீ !!!
அந்தப் பழம் புளிக்கும்.
வா! கொட நாடு போகலாம்.
என்னா அவமானப் படுத்தினாலும்
பரவாயில்லே!
Post a Comment